| ஆனபோது அகன்றிட - அப்போதே அயர்ச்சி நீங்கிட; மந்திரசத்தி தொழிற்பட்டவுடன் பயன் தந்த விரைவு குறித்தது; போது - தேற்றேகாரம் தொக்கது; மின்சார வேகம்
(Elctrict Spee) என்பது முதலாகத் தாமறியளவையில் சடசத்தியின் வேகம் பற்றி வழங்குவர் நவீனர்; ஆனால் இது சிவசிற்சத்தியின் றொழிற்பாடாதலின் நினைவின் மாத்திரையின் பயன் விளைப்பதாம். |
| அகன்றிட - அகன்றிடலான்; கருத்தொழிந் துரைமறந்த நிலையில் நோய் முற்றிக் கிடந்த அரசன், நோய் நீங்காத நிலையிலிருந்தேயும் கருதவும் உரைக்கவும் வல்லனாயினதன் காரணங் கூறியபடி. |
| மான மில்லவர் - அமணர்; வஞ்சனையும் பொய்யும் நிறைந்தும் அது புறத்துத் தோன்றாவகை கரந்து ஒழுகுதலும், தமது செயல் பயன்றராமை கண்டும் திருந்தாது மேலும் அவ்வாறே செயல் செய்தலும் முதலாயின உடையவர். |
| மாற்றம் ஒன்று - மாற்றம் - சொல்; "வள்ளலார் நாமம் சென்று தன் செவி நிறைத்தலும் செயிர்த்து"க் கூறிய (2584) முன்னை நிலையினின்று மாறுதல் பெற்ற என்ற குறிப்புப்பட இங்கு மாற்றம் என்றார். முன் அமணர் கூறியதும் பிள்ளையாரது நாமம் தான்; இங்கு அம்மையார் - அமைச்சனார் (2584) கூறியதும் அத்திரு நாமமேயாம்; ஆயின் இங்கு அதனையே மெய்யுணர் வளிப்போர் கூறியவாற்றால் அது முன்னை நிலையினை மாற்றியது என்க; ஒன்று - ஒப்பற்றது என்றும், பலபடியாகச் செல்லாது இனி ஒரே படியாய்ச் செல்வது என்றும் கொள்ள நின்றது. |
| 721 |
| 2620. (வி-ரை.) அவரை நோக்கி....எண்ணி - ஈண்டு நோக்கி - என்றது கருத்தினுள் வைத்து ஊன்றி அளந்து என்ற அக நோக்கத்தினை உணர்த்தி நின்றது முன்பாட்டில் பார்த்து என்றது புறப்பார்வை யாதலிற் கூறியது கூறலண்மை யுணர்க; மேல் எண்ணி என்றதும் காண்க; எண்ணி - துணிந்து; "எண்ணித் துணிக கருமம்" (குறள்); மற்ற இவர் என்றது மற்றிவர் என நின்றது. எண்ணி - அமணர்பால் வைத்த மதிப்புப்பற்றிச் சீர்தூக்கும் நிலையுமாம். |
| இன்னவாறு எய்தும் நோய்க்கே ஏது - காரண காரிய முறைமையாலே செய்கையான் விளைந்தது இந்நோய் என்று வழியளவையான் அறிந்ததாம். ஏகாரம் இன்றியமையாத இயைபு குறித்தலின் பிரிநிலை. |
| மன்னிய....அறிவேன் - இஃது அரசன் எண்ணி மனத்துட்டுணிந்த முடிபினைப் புறத்திற் கூறியபடி; அறிவேன் - எனது துணிவு உண்மையோ அன்றோ என்று அறிவேன். முன் உடன்பாட்டுக் கருதலளவையால் துணிந்த உண்மையினை, மேலும் எதிர் மறைக் கருதலளவையால் நிச்சயிப்பேன் என்றதாம்; மற்றவர் செய்கையால் நோய் வந்தது என்பதனை அஃது அருளால் அகலுமாயின் முடிந்த முடிபாகத் துணிவேன் என்றது கருத்து. |
| மன்னிய சைவ நீதி - சமணம் போல் இடையில் வாராததும் இடையில் அழிவு பெறாததுமாகி நிலைபெற்ற என்பது மன்னன் மனத்துள் அப்போது எழுந்த உணர்வு பற்றிக் கூறியது. |
| மாமறைச் சிறுவர் - அன்னவரருளால் - "மற்ற மாமறை மைந்தன்" (2585) என்று முன் கூறியதனை ஈண்டு ஒப்பு நோக்குக. |
| "ஆணவத்தோ டத்துவித மானபடி" என்றாற்போல முன் அமணர் வயமாய் நின்ற அரசனுக்கு அமணராகிய பொய்யுணர் வளிப்போர் தன்செவி நிறைக்கக் கூறியதும் வள்ளலார் நாமமோயாயினும் அது செயிர்ப்பு (கோபம்) விளையக் காரணமாய் மற்ற மைந்தன் என ஒருமையிற் கூறச்செய்தது; ஈண்டு அந் நாமமந்திரமே வாயிலாக |