882திருத்தொண்டர் புராணம் [வம்பறாவரிவண்டுச் சருக்கம்]

  அமைச்சனாரையும் கூறியது இக்கருத்து; பரிவு - அரசர் காரியத்தினை நிறைவாக்க மேற்கொண்ட அன்பு.
  மீண்டு வந்து அணைந்தார் - முன் வந்ததேயன்றி மீண்டும் என எச்சவும்மை தொக்கது; முன்னை நாள் வந்து அணைந்து வரவேற்றுத் திருமடமுங்காட்டி எழுந்தருளச் செய்தவர்கள் மீண்டும் வந்தனர். எனவே இதனுள் விரைவுக் குறிப்புப்பட்டதொரு விசிட்டச் செய்தி யுண்டென்பது பெறவைத்த நயம் காண்க; முன்னை நாள் வந்தணைந்தமை அமணர்களால் விளைந்த பொதுத் தீமைபற்றி நிகழ்ந்தது; இப்போது மீண்டும் வந்தணைந்தமை அதனுடன் அமணரால் முன்னிரவில் நேர்ந்த சிறப்புத் தீமையின் விளைவு குறித்த பிள்ளையாரது அருளாணையும் பரிசனங்கள் அறிவார்களாகலான் என்பது; இவ்வாறன்றி உம்மை விரிக்காமல் மீண்டு வந்து என்றே கொண்டு முன்வந்தவாறன்றி அமணர்களது தீமையினின்று அரசன் மீட்சிபெறும் நிலையால் அவனது உடன்பாடு கொண்டு வந்து என்றுரைத்தலுமாம். மீண்டு - மீண்டமையால் என்று காரணக் குறிப்புப்பட உரைத்துக் கொள்க.
  ஆண்டகையாரும் - இனியன அல்லவற்றையும் இனிதாகக் கொண்டு நல்கும் அருட்டன்மையும் போராற்றலும் ஆண்டகைமை எனப்படும்.
  ஈண்ட - இங்கு வரும்படி; ஈண்டுதல் - அணிமையாதல்; விரைய என்றலுமாம். "ஈண்டநீ வருவாயோலம்" (432).
  மீண்டு போந்து அழைக்க - விண்ணப்பஞ் செய்ய - இரண்டு செயலுக்கும் பரிசனங்கள் என்ற எழுவாய் முன் பாட்டினின்றும் கூட்டுக.
  விண்ணப்பித்தல் பிள்ளையார் திருமுன்பும், அழைத்தல் அம்மையார் அமைச்சனார் திருமுன்பும் நிகழ்ந்தன.
  விரைவுறும் விருப்பினோடும் புக்கார் - என்க; விருப்பத்தினும் விரைவு முந்திய தென்பது குறிப்பு; விரைவு - அமணர் செய்த தீச்செயலினுக்குத் தாம் மன மிக அழிந்த நிலையை விண்ணப்பிக்கவும், அத்தீச் செயலின் உட்படாத பிள்ளையாரது திருமேனி நலம் கண்டு மகிழவும் போந்தது; அதன் பின்னராக, அதுபற்றி வந்த மன்னவன் நோயினையும் தங்கள் இடும்பையினையும் விண்ணப்பிக்கவும் விரைவு உண்டாயது என்க. இஃது அவர்கள் பிள்ளையாரைக் கண்டு வீழ்ந்து நெடிதுயிர்த்து உரைகுழறிப் பிள்ளையாரது திருவடி பற்றிக் கிடந்த நிலை (2628)யினானும், பிள்ளையார் வினவியதற்குக் கூறிய விடை(2630 - 2831)யினானும் அறியப்படும்.
  மிக்கார் - புக்கார் - மிக்கார்களாகிய அன்னமென் னடையி னாரும் அமைச்சனாரும் திருமடத்தினுள்ளே பிள்ளையாரது திருமுன்பு புகுந்தனர். மிக்கார் - வினைப் பெயர்; புக்கார் என்பதனை வினையெச்சமாக்கி மேல்வரும் பாட்டில் கண்டார்கள் என்றதனோடு முடித்தலுமாம்.
 

727

 

வே று

2626
ஞானத்தின் றிருவுருவை, நான்மறையின் றனித்துணையை,
வானத்தின் மிசையன்றி மண்ணில்வளர் மதிக்கொழுந்தைத்,
தேனக்க மலர்க்கொன்றைச் செஞ்சடையார் சீர்தொடுக்குங்
கானத்தி னெழுபிறப்பைக் கண்களிப்பக் கண்டார்கள்.
 

728