[வம்பறாவரிவண்டுச் சருக்கம்] 28.திருஞானசம்பந்த நாயனார் புராணம்883

  (இ-ள்) ஞானத்தின் திருவுருவை - சிவஞானத்தினாலமைந்த திருவுருவத்தினையுடையவரை; நான்மறையின் தனித் துணையை - நான்மறைகளினுடைய ஒப்பற்ற துணையாயினாரை; வானத்தின்.... கொழுந்தை - வானத்தின் மேலேயன்றி மண்ணுலகத்தின்கண் வளர்மதியின் கொழுந்துபோல்வாரை; தேன்நக்க...எழுபிறப்பை - தேன் ஊறி வழிகின்ற கொன்றை மலரைச் சூடிய சிவந்த சடையினையுடைய சிவபெருமானது சீர்களைத் தொடுத்தெடுத் திசைக்கின்ற கானத்தின் ஏழு பிறப்புக் கிடமாகிய பிள்ளையாரை; கண்களிப்பக் கண்டார்கள் - கண்கள் களிப்படையும்படி கண்டார்கள்.
  (வி-ரை) அம்மையாரும் அமைச்சனாரும் ஆளுடைய பிள்ளையாரை அன்று கண்ட காட்சியினை அவர்கள் மனத்துட்கொண்ட அவ்வாறே எடுத்துக் காட்டுவது இத்திருப்பாட்டு. இவ்விருவரும் தனித் தனியும், ஒருங்கேயும், முன்னை நாளும் கண்டனர்; அவ்வாறு கண்டநிலை வேறு; இடையில் நிகழ்ந்த நிகழ்ச்சிகளாலும் அவைபற்றி இவர்கள் மனத்தினுள் எழுந்த பல்வேறு வகைப்பட்ட எண்ணங்களாலும் இங்குச் கண்ட நிலை வேறு என்பதனை விளக்கமுறக் கூறியபடி.
  இனி, முன்கண்ட காட்சி பொதுக் காட்சியும், இங்குக் கண்டது சிறப்புக் காட்சியுமாம்; சிறப்பு, பொதுவினைத் தன்னுளடக்கி விரித்துக் காட்டுமாதலின் முன்னர் விரிக்காது ஈண்டு விரித்தார் என்க.
  அன்றியும், இங்குக் கண்ட இந்நிலையே எழுந்தருளிப் பிள்ளையார் - திருவாலவாய்ப் பெருமானைக் கும்பிட்டு, அவரது திருவருட் குறிப்பு நோக்கம்பெற்று அரசனுக்குக் காட்சியருளியும் நோய் நீக்கியும் ஞானோபதேசம் செய்தும் ஆட்கொண்டருள்வாராதலானும், இந்நிலையே மதுரைமா நகரினுள்ள பலதிறப்பட்ட மக்களும் அமணர்களும் கண்டு தத்தமது தரத்திற் கேற்றவாறு பயன்பெறக் காட்சியருள்வாராகலானும், இவ்வாறு இவர்கள் கண்டதுபற்றி விரித்தருளினார் என்றலுமாம். "எழுச்சியிற் காட்சிபெற்றார், நண்ணிய சமயம் வேறு நம்பினரெனினும் முன்பு, பண்ணிய தவங்க ளென்கொல் பஞ்சவன் றஞ்ச மேவிப், புண்ணிய மூர்த்தி வந்து மதுரையிற் புகுத வென்றார்" (2642) என்றும், "தென்ன னாடு வாழவந் தணைந்தார்" (2700) என்றும், "சிவிகைமேற் பிள்ளையார்தாம் வருமழ கென்னே யென்பார் வாழ்ந்தன கண்கள்"(2701) என்றும், மேலும் வருவன காண்க.
  அன்றியும், ஞானோபதேசத்தால் அரசனையும் நாட்டினரையும் உய்விக்கக் குருமூர்த்தியாக எழுந்தருளும் எல்லையாதலின் இவ்வாறு கண்டார்கள் என்ற கருத்தும் காண்க. இவ்வாறே, பின்னரும், திருநல்லூர்ப் பெருமணத்தில் புண்ணியத் திருமணத்தின் வந்தார் யாவருக்கும் ஞான மெய்ச்சொல் உபதேசித்து முத்திப் பெரும்பேறு தந்தருள வந்தருளும் காட்சியினையும் விரித்துக் கூறுதல் காண்க. இங்குப் பிள்ளையார் ஞானதேசிகராய் எழுந்தருள்கின்றார் என்பது பாண்டியனாகிய சற்சீடனுக்கு, "வினைகளொத்துத் துலையென நிற்றலாலே" "ஆல வாயிலான் பால தாயினார் ஞால மாள்வரே" (தேவா) என்பது முதலாகப் பாவனா தீக்கை, சட்சுஷீ தீக்கை, பரிச தீக்கை, வாசக தீக்கை முதலியன செய்து, வைகைக் கரையையே தீக்கை மண்டபமாக வைத்து, "முன்னைவல் வினையு நீங்கி முதல்வனை யறியும் தன்மை" தந்து திருவடியும் சூட்டும் வரலாறுகள் இங்குக் கருதத் தக்கன; இக்கருத்தே பற்றி "மன்ற பாண்டியன், கேட்பக் கிளக்கு மெய்ஞ்ஞானத்தின், ஆட்பா லவர்க்கரு ளென்பதை யறியே" (இருபாவிருபஃது-2) என்றார் ஞானநூ லுடையாரும். இவை ஞானோபதேசமாதல் மேல் ஆசிரியர் தாமே ஆண்டு விரித்தருளுமாற்றால் உணர்க. இதுவரை வரலாறு கூறிவந்த