[வம்பறாவரிவண்டுச் சருக்கம்] 28.திருஞானசம்பந்த நாயனார் புராணம்889

  படியினாலே; தீப்பிணியால்.....எனவுரைத்தார் - தீப்பிணியினாலே மயக்கமடைந்த மன்னவன் முன்பாக மற்றவர்களை வென்று அருளிச்செய்தால் எமது உயிரும் அம்மன்னவனது உயிரும் உய்தி பெறுவனவாகும் என்று சொன்னார்கள்.
 

733

  தரையின்மிசைப் புரளுதலும் அயர்தலும் மிக்க துன்பத்தான் நிகழ்வனவாம் என்பது உலகநிலை யனுபவங்களினும் காணலாம்.
  சரண கமலம் பற்றி - முன் பாட்டில் மலர்க்கை என்றும், புண்டரிகச் சேவடி என்றும் கூறிய கருத்தையே தொடர்ந்து கூறிய நயம் காண்க.
  கரையில்....போன்று - கவலைக்கடல் - கவலையாகிய கடல்; மிகுதிபற்றிக் கடல் என்றார்; கவலைக்கடற்கு - கடலைக் கடந்தேறுதற்கு; கரைபற்றுதல் - கரையினைத் தலைப்படுதலால் அதனை நெகிழவிடாது பற்றிக்கொள்ளுதல். "பிறவிப் பெருங்கடனீந்துவர்" என்றும், "தாள் சேர்ந்தார்க் கல்லால் மனக்கவலை மாற்றலரிது" என்றும் வரும் திருக்குறட் கருத்துக்களை நோக்குக.
  கரையில் கவலைக் கடலாவது - பெருங் கவலைகளின் தொகுதி; இவை முன் 2593-2594ல் கூறிய அச்சங்களின் குறிப்பினாலும், மேல் 2630-2631ல் கூறுவனவற்றாலும் உணரப்படும்; தாம் தம் வாழ்வாக அழைக்க வந்த தெய்வமாகிய பிள்ளையார்பால் தம் கருத்துக்குமாறாக அபசவாரம் நிகழ்ந்துவிட்டமையும், அவர் அருளால் மன்னனையும் நாட்டினையும் உய்யச்செய்ய எண்ணியதற்கு மாறாக அடியார்பா லபசாரப்படுதலால் அரசன் தீப்பிணியான் மயங்கிக் கிடந்தமையும், நாடு பாவப்பயன்பெற நின்றமையும், பிறவுமாம்.
  கரைபற்றினார் போன்று - பயன்பற்றி வந்தவுவமம்.
  விரைவுறும் மெய்அன்பு - விரைதல் - வேகமாகப் புறத்தோற்ற நிகழ்தல்; விடாது ஒழிவார் - பற்றுவிடாத நிலையினர்; சரணம் பற்றியபடியே கிடந்தனர் - என்க. ஒழி - துணிவுப்பொருள் விகுதி.
  அறிந்திலர் தம்மை - என்பதும் பாடம்.
 

730

  2629. (வி-ரை) அருமறைவாழ் - அண்ணலார் என்று கூட்டுக; மறைவழக்கிற்கு இழுக்கு வந்தபோது அதனை நீக்கி நிகழ்வித்தலின் மறைகள் வாழ்வடையும் என்றார்; மறைவாழவந்த அண்ணலார் என்க; "வேதநெறி தழைத்தோங்க"(1899) "மறைவளர் திருவே"(1989) முதலியவை காண்க. மறையோர்களை மறையென்றுபசரித்ததாகக் கொண்டு அருமறையோர் வாழும் பூம்புலி என்று கூட்டி உரைப்பினுமமையும்.
  அடிபூண்ட - தமது திருவடிகளைப் பற்றிக் கொண்டு விடாதொழிந்த.
  திருக்கையா லெடுத்தருளி - வாக்கினா லருளுதலன்றித் திருக்கைகளால் எடுத்தருளுதல் விரைவுக்குறிப்பு. முன் உரைத்தவையும் காண்க. (2555 - 2569 பார்க்க.)
  அடிபூண்ட இருவரையும் - முன்னர்த் திருநகர்ப்புறத்தும், திருவாலவாயுடையார் கோயில் திருமுன்றிலிலுமாக இவருள் ஒவ்வொருவரே அவரது இரண்டு திருவடிகளையும் பற்றிக் கிடந்து திருக்கையால் எடுத்தருளப்பெற்றனர்; ஈண்டு இருவரும் ஒருங்கே அத்திருவடிகளைப் பற்றினராக ஒரே காலத்து இருவரும் எடுத்தருளப் பெற்றனர் என்பது குறிப்பு.
  எடுத்தருளி - எடுத்தல் - கவலைக் கடலினின்றும் மேலே எடுத்தாற்போன்று மேலே எடுத்து என்ற குறிப்புந் தந்து நின்றது; "என்னையிப் பவத்திற் சேரா வகையெடுத்து", "இனித்தமுடைய எடுத்த பொற்பாதம்", "எடுக்கு மாக்கதை" என்பனவாதி யிடங்களிற்போல.
  தேற்றிடவும் தெருமந்து தெளியாதார் - தேற்றிடுதல் - உண்மை தெருட்டுதலால் மனந்தேறச் செய்தல்.