896திருத்தொண்டர் புராணம் [வம்பறாவரிவண்டுச் சருக்கம்]

2637
கானிடை யாடு வாரைக் "காட்டுமா வுரி"முன் பாடித்
தேனலர் கொன்றை யார்தந் திருவுள நோக்கிப்; பின்னும்
ஊனமில் "வேத வேள்வி" யென்றெடுத் துரையின் மாலை
மானமில் லமணர் தம்மை வாதில்வென் றழிக்கப் பாடி,
 

739

2638
"ஆலமே யமுத மாக வுண்டுவா னவர்க்க ளித்துக்;
காலனை மார்க்கண் டர்க்காக் காய்ந்தனை; யடியேற் கின்று
ஞாலநின் புகழே யாக வேண்டு; நான் மறைக ளேத்துஞ்
சீலமே! யால வாயிற் சிவபெரு மானே!" யென்றார்.
 

740

  2636. (இ-ள்) தீக்கனல் மேனியானே! - மிக்கு எரியும் தீப்போன்ற திருமேனியினையுடைய இறைவரே!; நோக்கிட...வாதுசெய்ய - நோக்குதற்கு விதியில்லாத அமணரை நோக்கி யான் வாது செய்வதற்கு; திருவுள்ளமே என்று - தேவரீருக்குத் திருவுள்ளமோ? என்று; எண்ணில்...பாலறாவாயர் - எண்ணில்லாத பாக்கியங்களின் பயன்போன்றுள்ள பாலறாவாயராகிய பிள்ளையார்; மெய்ம்மை நோக்கி - உண்மைத் திறத்தை நோக்கி; வண்தமிழ்....நுவலலுற்றார் - வண்மையுடைய தமிழால் இயன்ற மாலையாகிய திருப்பதிகத்தைப் பாடியருள்வாராகி,
 

738

  2637. (இ-ள்) கானிடை...நோக்கி - கானகத்தில் நட்டம் ஆடுவாராகிய இறைவரைக் "காட்டு மாவுரி" என்ற தொடங்கிப் பாடித் தேன் அலர்கின்ற கொன்றையணிந்த இறைவரது திருவுள்ளக் குறிப்பினைத் தெளிந்து கொண்டு; பின்னும்....மாலை - மேலும் ஊனத்தை இல்லையாகச் செய்யும் "வேத வேள்வி" என்று தொடங்கிச் சொற்பதிகத்தினை; மானமில்...பாடி - மானமில்லாத அமணர்களை வாதத்தில் வென்று அழிக்கவும் பாடி,
 

739

  2638. (இ-ள்) நான்மறைகளேத்தும்...சிவபெருமானே! - நான்கு வேதங்கள் போற்றுகின்ற சீலமானவரே! திருவாலவாயில் எழுந்தருளிய சிவபெருமானே!; ஆலமே...காய்ந்தனை - தேவரீர் விடத்தையே அமுதமாக உண்டு, தேவர்களுக்கருள் அளித்ததனோடு மார்க்கண்டனுக்காகக் காலனையும் உதைத்துருட்டிளீர்!; அடியேற்கு இன்று ஞாலம் நின்புகழே ஆகவேண்டும் - இன்று அடியேனுக்கு இந்த நிலவுலகம் முழுதும் தேவரீரது புகழே ஆகப் பரவுதல் வேண்டும்; என்றார் - என்று விண்ணப்பித்தார்.
 

740

  இந்த மூன்று பாட்டுக்களும் தொடர்ந்து ஒரு முடிபு கொண்டன.
  2636. (வி-ரை) நோக்கிட விதியிலாரை நோக்கி - முன் "பாவகாரிகளை நோக்கும்" (2634) என்றதும், ஆண்டுரைத்தவையும் காண்க. விதி - நூல்களின் விதி; நோக்குதற்கும் நோக்கப்படுதற்கும் என இருபாலும் கொண்டுரைத்துக் கொள்க; அமணர்கள் பிள்ளையாரது அருள்நோக்கம் பெறுதற்கு அப்போது ஊழ்விதியுடையரல்லர் என்பதாம்; இப்பொருளில் விதி - ஊழ், நியதி என்று கொள்க.
  நோக்கி - வாதுசெய்ய - திருவுள்ளமே - அமணரை நோக்குதலும் கூடாது; வாது செய்தலும் கூடாது; இரண்டும் சைவத்திறத்தில் விலக்கப்படும். தீயோரை நோக்குதலும் கூடாது என்ற விதியின் நுட்பம் முன்(2634) விளக்கப்பட்டது; நோக்குதலும் வாது செய்தலும் கூடாவெனின், இங்குப் பிள்ளையார் அவற்றைச் செய்ய முற்படுதல் தகுதியாமோ? எனின், கூறுதும்; "வாது செய்து மயங்கு மனத்தரா