| ஆராய்ச்சிகள் ஈண்டுச் செய்வாருமுண்டு; அவை பொருந்தாமை முன்னர்க் காட்டப்பட்டது; பின்னுங் காண்க. |
| ஞாலம் நின்புகழே மிகவேண்டும் என்றதனால் அற்றை ஞான்று அரன்புகழ் ஞாலத்தில் மிகாது குன்றி நிகழ்ந்த தென்பது பெறப்படும்; படவே அந்நிலையை நீக்கி அரன் புகழ் உலகு எங்கும் பரவச் செய்தலையே பிள்ளையார் வேண்டினர் என்பதும் பெறப்படும்; "மேதினிமேற் சமண்கையர் சாக்கியர்தம் பொய்மிகுத்தே, ஆதி யரு மறைவழக்க மருகியர னடியார்பாற், பூதிசா தனவிளக்கம் போற்றல்பெறா தொழியக்கண்டு" (1916) என்றது காண்க. "ஆழ்க தீயது எல்லா மரனாமமே, சூழ்க"(பாசுரம்) என்று இதன் முடிவில் வேண்டிய திருவாக்கும் கருதுக. |
| ஆலவாயிற் சிவபெருமானே! - எங்கும் நிறைந்து விளங்கும் அக்கருணை வெளிப்பட்டருளும் இடமாவது இஃது என்றதாம். "மண்ணகத்திலும் வானிலுமெங்குமாந், திண்ணகத் திருவால வாயாய்"(கொளசிகம் - 3). |
| மார்க்கண்டிக்கா - என்பதும் பாடம். |
| 740 |
| IV திருவாலவாய் |
| திருச்சிற்றம்பலம் பண் - கௌசிகம் |
| காட்டு மாவ துரித்துரி போர்த்துட னாட்ட மூண்றுடை யாயுரை செய்வனான் வேட்டு வேள்வி செயாவமண் கையரை யோட்டி வாது செயத்திரு வுள்ளமே! | |
| (1) |
| செந்தெ னாமுர லுந்திரு வாலவாய் மைந்த னேயென்று வல்லம ணாசறச் சந்த மார்தமிழ் கேட்டமெய்ஞ் ஞானசம் பந்தன் சொற்பக ரும்பழி நீங்கவே. | |
| (11) |
| திருச்சிற்றம்பலம். |
| பதிகக் குறிப்பு :- கரியுரி போர்த்த கடவுளே! நோக்கிட விதியிலாத அமண் கையரை நோக்கி நான் ஒட்டி வாது செய்தல் தேவரீருக்குத் திருவுள்ளமே! என்ற இறைவரது திருவுள்ளத்தின் அருட்குறிப்பினை வினாவி யறிந்தது. "திருவுள்ள மறிவேன்"(2624); "திருவுளமே"(2636); "திருவுள நோக்கி"(2637). |
| பதிகப் பாட்டுக் குறிப்பு :- (1) காட்டு மா - யாகத்தி லெழுந்து பகைகாட்டி வந்த யானை; காட்டானை என்பாருமுண்டு; அது - பகுதிப் பொருள் விகுதி; உடல் போர்த்து என்று கூட்டுக. நாட்டம் - கண்; மூன்று இங்குச் சிறப்பாகிய நெற்றிக் கண்ணைக் குறித்து நின்றது. மாவுரித்ததுவும் நெற்றிக் கண்ணுடைமையும் பகையை அழிக்கும் தன்மைக் குறிப்புப்பட நின்றன. கண் என்னாது நாட்டம் என்றதும், உரித்து என்றொழியாது உரி உடல் போர்த்து என்றதும், அந்த அழித்தலும் காவல் கருதி நிகழ்வது என்ற குறிப்புப்பட நின்றன. உரை செய்வன் - வினவுவேன்; வேட்டு வேள்வி செய்யார்; ஆதலின் என அடை மொழியால் ஏதுக் கூறினார்; மேல் வருவனவும் இவ்வாறே; ஓட்டி - ஒட்டி என்பது முதல் நீண்டு வந்தது செய்யும் விகாரம்; "ஒட்டியே செய்வ தென்றார்" (2695); வாது ஒன்றினின்றும் மேல். இரண்டும் மூன்றுமாக நீள்வதும் குறிப்பு; நான் வாது செய - என்று கூட்டுக; திருவுள்ளமே - ஏகாரம் வினா.- (2) ஈர்உரி - ஈர்தலால் பெற்ற உரி; உரி - தோல்; உரித்தலாகிய பெயர் அதனால் பெறப்படும் பொருளுக்காகி வந்தது ஆகுபெயர்; முன்பாட்டில் "உரித்துரி" என்றதும் காண்க; பொய்த்த - பொய்யாகிய; வஞ்சகமாகிய; |