| "பண்ணிய தவங்க ளென்கொல் பஞ்சவன் றஞ்ச மேவிப் புண்ணிய மூர்த்தி வந்து மதுரையிற் புகுத" வென்றார். | |
| 744 |
| 2641. (இ-ள்) பல்லிய நாதம்பொங்க - பலவகைப்பட்ட இயங்களின் ஓசை மிக்கு எழந்திசைக்க; படர்...நிழற்ற - எங்கும் படர்ந்து பெருகும் திருநீற்றின் சோதியானது நல்ல ஒளிவட்டமாக உருவெடுத்துப் பொருந்தி மேலே வருவதுபோல ஒளிபெருகும் முத்துக் கோவைகளையுடைய வெண்குடையானது மேலே நிழலைச் செய்ய; வெவ்வேறு....ஓத - வேறு வேறாக அளவில்லாத முத்துக் காளமும் தாரையும் சங்கங்களும் எங்கும் இசைக்க; |
| 743 |
| 2642. (இ-ள்) கண்ணினுக்கு.......எனினும் - கண்ணினுக்குரிய அணியாக விளங்கும் பிள்ளையாரது திருவெழுச்சியின் காட்சியினைப் பெற்ற அந்நகர மாந்தர்கள் தாங்கள் சார்ந்த சமணமாகிய வேற்றுச் சமயத்தை நம்பினராயினும்; பஞ்சவன் தஞ்சம் மேவி - பாண்டியன் அடைக்கலம் புகும் பொருளாகப் பொருந்தி; புண்ணிய....புகுத - புண்ணிய வடிவினராகிய இவர் தாமே வந்து மதுரையிற் புகுவதற்கு; பண்ணிய தவங்கள் என்கொல்? - (இப்பாண்டியன்) முன்னே செய்த தவங்கள் தாம் எவையோ? என்றார் - என்று சொன்னார்கள். |
| 744 |
| இந்த இரண்டு பாட்டுக்களும் தொடர்ந்து ஒரு முடிபு கொண்டன. |
| 2641. (வி-ரை) பொங்க - நிழற்ற - ஓத(ச்) செல்லும் எழுச்சி என, வரும் பாட்டுடன் முடிக்க. |
| திருநீற்றின் சோதி - ஒளி வட்டமாக நண்ணி மேல வருவ தென்ன வெண்குடை நிழற்ற என்றது மேலே கவிந்து நிழற்றும் வெள்ளியமுத்துக் குடையானது திருநீற்றின் பரந்த ஒளி ஒரு வட்டமாகப் பொருந்தி மேல் வருவது போல இருந்ததென்பது மெய்யும் உருவும்பற்றி வந்த உவமம். மதியைச் சூழ்ந்து பரி வேடம் ஒளி வட்டமாகப் பொருந்தும் காட்சி இங்கு நினைவு கூர்தற் பாலது; "சிவிகையின் மேற்சேவித்து வருநிலவு தருமதிபோல் வளரொளிவெண் குடைநிழற்ற"(2546) என்று முன் கூறிய கருத்தும், திருநீற்றுத் தொண்டர்குழாத்திற்கு நிலவின்கடலை உவமித்துத் "திரண்டுவருந் திருநீற்றுத் தொண்டர்குழாத்திற்கு நிலவின்கடலை உவமித்துத் "திரண்டுவருந் திருநீற்றுத் தொண்டர்கு மிருமருங்குஞ் சேர்ந்த போதி, லிரண்டு நில வின்கடல்க ளொன்றாகி யணைந்தனபோ லிசைந்த வன்றே"(1498) என்றதும் ஆண்டுரைத்தவையும் இங்குக் கருதற் பாலன. |
| படர் திருநீற்றின் சோதி - படர் திருநீறு என்றும், படர் சோதி என்றும் ஈரிடத்தும் கூட்டுக. |
| வெண்குடை நிழற்ற - அரச அடையாளமாகிய பத்து அங்கங்களுட் சிறப்புடைய ஒன்றாதலின் ஈண்டுக் குடையினை இவ்வாறு சிறந்த உவமானத்தாற் சிறப்பித்துக் கூறினார். |
| வெவ்வேறு - ஓத - என்க; தாளம், தாரை, சங்கு இவற்றின் ஓசைகள் வெவ்வேறாதல் காண்க. முத்தின் என்பதனைத் தாரை என்பதனுடனும் கூட்டுக. ஓதுதல் - புகழ்களை எடுத்து ஒலித்தல். வில்வளர் தாளக்கோவை - வில் - ஒளி; முத்துக்கள் கோத் தணிபெற அமைத்த. |
| நாதமோங்க - எங்குமொத்த - எங்குமூத - என்பனவும் பாடங்கள். |
| 743 |
| 2642. (வி-ரை) கண்ணினுக்கு அணியாய் உள்ளார் - கட்புலனுகர்ச்சிக்குப் பேரழகுடையராய் விளங்கும் பிள்ளையார்; செவி - கை முதலியவற்றுக்குப் போலக் கண்ணுக்கு அணிகலம் இடுவாரிலர்; ஏனையவற்றிற் சிறப்புடைய கண்ணுக்கணியின்றி யிருத்தல் சாலாமையின் சிறந்த அதற்குச் சிறந்த அணியே வேண்டும்; அச்சிறந்த அணி |