| நீங்கி - நீங்கப் பெறுதலால்; துயர் நீங்கியதனால் நல்லறிவு சற்றே வர என்பதுமாம். |
| முழுமணி அணிப் பொற்பீடம் - பிள்ளையார் எழுந்தருளுதற்கேற்ற நல்ல ஆசனம். பெரியோர் எழுந்தருளு முன்னமே அவர்க்குத் தக்க ஆசனமமைத்தல் இற்றை நாளினும் நாகரிக வழக்கு. |
| "முடியின் பக்கத் திடுக" என - பிள்ளையார் தன் முடிமிசை வீற்றிருக்கத் தக்கார் என்றுட்கொண்டு வழிபடும் முறையால் இவ்வாறு அரசன் கூறியது திருவருட் குறிப்பினால் எழுந்தது. உய்யும் காலம் அணிமையாதற் குறிப்பு; மேல் "செல்கதிக் கணிய னானான்"(2667) என்பது காண்க. - "நல்லநெறி, யெய்துவதோர் காலந்தன் னன்பரைக்கண் டின்புறுதல், உய்யு நெறிசிறிதே யுண்டாக்கி" (போற்றிப்பஃறொடை) என்ற ஞானசாத்திரமுங் காண்க. |
| மற்றவன் - வேற்றுச் சமயத்துட்பட்டு நின்ற அவனும் என்க. உம்மை தொக்கது; "நண்ணிய சமயம் வேறு நம்பின ரெனினும்" (2642) என்று நகர மாந்தர்க் குரைத்த உண்மை அரசன்பாலும் பொருந்தியதாயிற்று என்பதாம். |
| சிறிது நீங்கி - முழுதும் நீங்கி உய்யும் தன்மை மேல் "முழுதும் உய்ந்தான்"(2668) என்பதனுட் காண்க. |
| வல்லன் ஆனான் - திறம்பெற்றவனாயினன்; ஆக்கச்சொல் அருமைப்பாடு குறித்தது. |
| 746 |
2645 | மந்திரி யாரைப் பின்னு மெதிர்செல மன்ன னேவச் சிந்தையுண் மகிழ்ந்து போந்தார்;செயலையான் சமயத் துள்ளோர் பைந்துண ரலங்கன் மன்னன் பரிசுகண் "டிதுவோ பண்பால் நந்தனிச் சமயந் தன்னை நாட்டுமா?" றென்று பின்னும், | |
| 747 |
2646 | "நின்னற நெறியை நீயே காத்தருள் செய்தி யாகில் அன்னவர் தம்மை யிங்கே யழைத்தனை யவரும் யாமும் முன்னுற வொக்கத் தீர்க்க மொழிந்துமற் றவராற் றீர்ந்த தென்னனும் யாமுந் தீர்த்தோ மாகவு மிசைவா" யென்றார் | |
| 748 |
| 2645. (இ-ள்) மந்திரியாரை....ஏவ - மேலும், எதிர் சென்றழைத்து வரும் படி அமைச்சனாரை அரசன் ஏவியிட; சிந்தையுள் மகிழ்ந்து போந்தார் - மனத்தினுள் மிக மகிழ்ச்சி கொண்டு அவரும் போந்தனர்; செயலையான்...கண்டு - அசோகினனாகிய அருகனது செயத்தில் உள்ள அமணர்கள் பசிய கொத்துக்களாலாகிய வேப்ப மாலையை அணிந்தமார்பையுடைய பாண்டிய அரசனது தன்மையினைக் கண்டு; "இதுவோ.....நாட்டுமாறு?" என்று - நமது ஒப்பற்ற சமயத்தினைப் பண்பினால் நாட்டும் வழியிதுவோ? என்று கூறி; பின்னும் -மேலும் சொல்வார்களாய், |
| 747 |
| 2646. (இ-ள்) நின்...ஆகில் - உனது அறநெறியாகிய சமயத்தை நீயே காத்தருள செய்வாயானால்; அன்னவா.... அழைத்தனை - அவரை இங்கே வரும்படி அழைத்தாய்; (அவ்வாறு அழைத்தாலும்); அவரும்......மொழிந்து - அவரும் நாங்களும் உனது முன்னே ஒருங்கு கூடி இந்நோயைத் தீர்க்கும்படி சொல்லி; மற்று.....இசைவாய் என்றார் - மற்று அவரால் நோய் தீர்ந்தாலும் நாங்களும் தீர்த்தோம் என்று சொல்ல உடன் படுவாயாக என்று சொன்னார்கள். |
| 748 |