914திருத்தொண்டர் புராணம் [வம்பறாவரிவண்டுச் சருக்கம்]

  வன்தனிப் பவனம் - வன்மையாவது காவற்கட்டு; பவனம் - அரண்மனை.
  வாயிலினுள் அணைந்து - சிவிகை நின்று - இழிந்து - வாயிலினுள்ளே வருமளவும் சிவிகையில் எழுந்தருளி வந்து அதன்பின் அரண்மனையினுள் அதினின் றிறங்கி வந்து என்ற முறை குறிக்க.
  புக்கார் - அரண்மனையினுள்ளே அரசன் இருந்த இடத்துப் புகுந்தனர்.
  மன்தனிப்பவனம் - என்பதும் பாடம் .
 

750

2649
குலச்சிறை யார்முன்பெய்தக், கொற்றவன் றேவி யாரும்
தலத்திடை யிழிந்து சென்றார்; தண்டமிழ் நாட்டு மன்னன்
நிலத்திடை வானி னின்று நீளிரு ணீங்க வந்த
கலைச்செழுந் திங்கள் போலுங் கவுணியர் தம்மைக் கண்டான்.
 

751

  (இ-ள்) குலச்சிறையார்.....எய்த - அரசனிடம் அறிவித்தபின் குலச்சிறையார் பிள்ளையாரது திருமுன்பு வந்து சேர; கொற்றவன்...சென்றார் - அரசமா தேவியாரும் அரண்மனையினுள்ளே வந்து தமது சிவிகை யினின்றும் இறங்கிச் சென்றனர்; தண்தமிழ்நாட்டு.......கண்டான் - தண்மையுடைய தமிழ் நாட்டின் மன்னனாகிய பாண்டியன் வானத்தினின்றும் நீண்ட இருள் நீங்கும்படி நிலத்தினில் வந்த நிறைந்த கலைகளையுடைய செழித்த திங்களைப் போலும் கவுணியர் பெருமானாகிய பிள்ளையாரைக் கண்டான்.
  (வி-ரை) முன்பு எய்த - திருவாலவாயினின்றும் பிள்ளையார் போத, முன்பு பெருந்தொண்டர் குழாத்துச் சென்ற (2643) அமைச்சனார், அரண்மனையை அணுகியபோது அத்திருக்குழாத்தின் முன்பு நீங்கி, முன்னர் விரைவிற் சென்று சென்று அரண்மனையினுள் புக்கு அரசனுக்கு அறிவித்து, அவன் ஏவல்வழிப் பீடம் அமைத்து எதிர் சென்று அழைக்கும்படி மீண்டு, பிள்ளையார் முன்பு வந்து எய்தினர் என்க.
  கொற்றவன் தேவியாரும் கலத்திடை இழிந்து - அரசனுக்கு முன் அறிவிப்பின் பொருட்டும், ஆசனம் அமைத்ததற்பின் அவன் ஏவல் வதழி அவனுக்காக எதிர் சென்ற ஐத்தற் பொருட்டுமாக அமைச்சனார் திருக்குழாத்தினீங்கி முன் சென்றனர்; அரசியார்க்கு அத்தகைய அரசகாரிய மொன்று மின்மையின் பிள்ளையாரைப் பின்பற்றித் தொடர்ந்து மதது சிவிகையில் வந்தனர்; இழிந்து - தமது சிவிகையினின்றும் கீழே இறங்கி.(2643)
  தண் தமிழ் நாட்டு மன்னன் - வெப்பு நோய் நீக்கிக் குளிரச் செய்ய வுள்ள தன்மைக் குறிப்புப்பற்றித் தண் தமிழ் - என்று தண்மையோடு புணர்த்தி ஓதினார்; "தமிழ்மாருதம்" (313) என்ற குறிப்பு மிது; தண்மையைப் பொதியமலைச்சார்பு பற்றி நாட்டொடு புணர்த்தித் தமிழ்த் தண் நாட்டு என்று கூட்டி உரைப்பினும்மையும். முன்னர்த் "தெற்மிழ் நாடு செய்த செய்தவம்" (2648) என்ற குறிப்பு மிது; பிள்ளையாரது ஞானத்தமிழே இந்நலம் செய்வதாம் என்பார் இனம்பற்றி அறிவித்த குறிப்புமாம்; "தமிழ் நாதன் ஞான சம்பந்தன்"(ஆலவாய் - கொல்லி -11) என்ற பதிகமும் காண்க.
  நீள் இருள் நீங்க வானினின்று நிலத்திடை வந்த - என்க; நீள் இருள்; திணிந்த பிணிப்பாகிய அமண அக விருள்; வான் - இங்கு அறிவொளி வானம்(சிதாகாசம்) குறித்தது; வானினின்றபடியே இவ்விருணீக்குதல் சாலாமையின் நிலத்திடை வருதல் வேண்டப்பட்டதென்பது குறிப்பு.
  கலைச் செழும் திங்கள் போலுட்ம - கலை - வளர்வும் குறைவும் படாத கலை; செழுமையாவது நிரம்பியிருத்தல். "வளர்மதிக் கொழுந்தை"(2625)