916திருத்தொண்டர் புராணம் [வம்பறாவரிவண்டுச் சருக்கம்]

  பார்த்தல்; எய்த - வழிபடும் பண்பு பொருந்த; வரவேற்கும் தன்மை பொருந்த என்றலுமாம்;
  அப்பொழுதே கை எடுத்து - நோக்கி - பீடம் காட்ட- கை எடுத்தலும், நோக்குதலும், பீடம் காட்டுதலும் ஒன்றன்பின் ஒன்றாய் எழும் மன நிகழ்ச்சிகளின் வழி நிகழினும் விரைவு பற்றி ஒருங்கே நிகழ்ந்தனவாகக் காணப்பட்டன என்பது; கை எடுத்து - நேரே எழுந்து கை கூப்பி வணங்கும் ஆற்றல் இல்லாது நோய் மிக்கிருந்தமையால் கைகூப்பி என்னாது கை எடுத்து என்றார்; கை எடுத்தல் வழிபட்ட நிலையுணர்த்தும் வகையால் கையை மேல் எடுத்தல்; நோக்கி என்றதும் பீடம் காட்ட என்றதும் இவ்வாறு அரசன் உட்பட்டுக் கிடந்த நோயினைக் கூடிய நிலையை உணர்த்துதல் காண்க; வெப்பு நோயின் கடுமையால் அரசன் முடியசையும் நிலையிற் கிடந்தான் என்பது "துளங்கும்முடித் தென்னன் முன்னிலை"(கொல்லி - ஆலவாய் - 11) என்று அப்போது அங்கு அருளிய பிள்ளையாரது தேவார அகச் சான்றினால் அறியப்படும். எய்த - அணுக எய்தியபோது என்றலுமாம்.
  பீடம் காட்ட - இப்பீடத்தி லமருங்கள் என்று கையினாற் காட்ட; சிவ பூசையில் இறைவரை எழுந்தருளுவிக்கும் முறையில் ஆவாகனம், தாபனம், சன்னிரோசனம் முதலிய கிரியைகளின் பொருட்டுக் கையினால் உரிய முத்திரைகள் காட்டும் தன்மையும் ஈண்டுக் கருதத் தக்கன.
  தண்டுணர் முடியின் பாங்கர் - பீடம் - "முடியின் பக்கத் திடுக என" முன்னர்அரசன் கூற, அமைச்சனார் அவ்வாறே இடுவித்த பீடம்; தண் துணர் முடி - வேப்பமலர்க் கொத்துக்களணிதல் பாண்டியர்க் குரியது; துணர் - இடம் நோக்கி வேப்பமலர்க் கொத்துக் குறித்தது; கடுஞ்சுர நோய் கொண்டார் முடிப்பக்கம் வேப்பிலைக் கொத்துக்களை இட்டு வைக்கும் வழக்கின் குறிப்பும் ஈண்டுக் கொள்ளத் தக்கது; "மருத்து நூலவர் தங்கள்பல் கலைகளின் வகுத்த, திருத்தகுந் தொழில் யாவையும் செய்யவும்" (2612) என்றது காண்க. வெப்பு நீங்க இட்ட வேறு இலைகளுமாம்.
  அதன்மிசை மேவி யிருந்தார் என்க; அணைந்து அதன் மேல் எழுந்தருளி அமர்ந்தருளினர்.
  மாயை...கொண்டார் - மாயை - முன்கூறிய வஞ்சம் பொய் முதலியவற்றைக் குறித்து நின்றது; வன்மையாவது கன்மனம்; வன்கண்மை; எவ்வாற்றாலும் தமது சமயக் கொள்கையை விடாத வன்மை நிலை எனினுமாம்.
  அச்சம் குறிப்பினுட் கொண்டார் - குறிப்பாவது மனத்துள் எழுந்த குறிப்பு. அச்சம் வெளிப்படாமல் உள்ளே கொணடனர் என்க. "அச்சம் மறைத்து"(2653); "பயத்தால் நெஞ்சு சோரவும் பீலிகை சோர்ந்திலர் நின்றார்" (2686); "ஊறுடை நெஞ்சி லச்சம் வெளிப்பட ஒளிப்பார் போன்று"(2715) முதலியவை காண்க; இனி, இவ்வாறன்றித், தென்னவன் கண்டு - நோக்கிக், காட்டிய குறிப்பினாலும், பிள்ளையார் எழுந்தருளிய குறிப்பினாலும், பீடத்தில் மேவியமர்ந்த குறிப்பினாலும் அச்சம் கொண்டனர் என்றலுமாம்; குறிப்பினுள் - முன்பொருளில் உள் - ஏழாம் வேற்றுமைப் பொருளும், பின்னையதில் மூன்றாவதன் பொருளும் கொண்ட தென்க.
 

752

2651
செழியனும் பிள்ளை யார்தந் திருமேனி காணப் பெற்று
விழியுற நோக்க லாலே வெம்மைநோய் சிறிது நீங்கி
யரிவுறு மனநேர் நிற்க வந்தணர் வார்வை நோக்கிக்
"கெழுவுறு பதியா "தென்று விருப்புடன் கேட்ட போது,
 

753