| சேர்த்துப் பன்னிரண்டு பெயர்களுடையதாய் நின்ற ஊர் என்க; இப்பன்னிரண்டு பெயர்களும் இவ்வரிசையில் வருமாறு தனித் தனியே தொடக்கமாக வைத்தும், பன்னிரண்டு பெயர்களையும் ஒவ்வொரு பாட்டிலும் வைத்தும் போற்றுதலால் இப்பதிகம் பன்னிரண்டு பாட்டுக்களை யுடையதாயிற்று; "பெயரை நாளும் பரவிய சீர்ப்பன்னிரண்டு நன்னூலா" என்பது காண்க; ஆதியாயபரமன் - ஊழிகடந்த முதல்வர்; சிவன்(2); வெள்ளம் - ஊழி; ஓங்குதல் - மிதத்தல்; ஓங்குந் தோணிபுரம் - ஓங்குதலால் இப்பெயர் பெற்றதென்பார் உடம்பொடு புணர்த்தி ஓதினார்: முன் பாட்டில் பெருநீர்த் தோணிபுரம் - என்றதும் இக்கருத்து; கோட்டாறு - சீகாழியில் வரும் ஆறு; செல்வம் காணிய - செல்வங்காணும் பொருட்டு; காணுதல் - அனுபவிக்கப் பெறுதல்; (3) நீர்மேல் நின்ற மூதூர் - மிதந்ததோணிபுரம்; அமரர் பெமாற் கின்பம் பகருமமூர் - இந்திரனுக்கு அபயம் கொடுத்துக்காத்த சரிதக் குறிப்பு; (4) தலைபண்டு ஆண்ட மூதூர் - சிரபுரம்; வழிமொழித்திருவிராகம் முதலியவை பார்க்க; (5) தொல் நீரில் தோணிபுரம் - பழைய ஊழிகளில் மிதந்ததனால் தோணிபுரமாகிய ஊர்; இன் - நீர இனிய நீர்மையுடைய; இல் நீர என்று கொண்டு இந்திரன் மறைந்து தங்கும் - இல்லாக - வீடாக - உதவிய வேணுவின் காரணமாகக் கொண்ட என்நலுமாம்; சிலம்பனகர் - சிரபுரம் "சிலையான் மலிந்த சீர்ச்சிலம்பன் சிரபுர மேயவனே" (பல் பெயர்ப் பத்து - தக்கேசி - 7); பொன்னீர - அழகிய; (6) தாமரையான் - பிரமன்; தலை முன் ஆண்ட அண்ணல் நகர் - சிரபுரம்; (7) ஆராத்தராய் - பூந்தராய்; (10) இன்ன பெயர் பன்னிரண்டும் - உடையவூர் என்க; "பெயர் பற்றும்"(2652);(11) நிச்சல் - நித்தலும்; நித்தல் என்பது எதுகை நோக்கி நிச்சல் எனவந்தது; நம்மேல் அச்சங்கள் தீர்த்தருளும் அம்மான் - அரசனுக்கு அஞ்சல் அளித்தற் குறிப்பும் காண்க; (12) பாவிய - பரவிய; பாவுதல் - பரப்புதல். |
2653 | பிள்ளையார் செம்பொன்மணிப் பீடத்தி லிருந்தபொழு துள்ளநிறை பொறாமையினா லுழையிருந்த காரமணர் கொள்ளுமனத் திடையச்ச மறைத்துமுகங் கோபத்தீத் துள்ளியெழு மெனக்கண்கள் சிவந்துபல சொல்லுவார்; | |
| 755 |
2654 | காலையெழுங் கதிரவனைப் புடைகுழுங் கருமுகில்போற் பீலிசேர் சமண்கையர் பிள்ளையார் தமைச்சூழ்வார் ஏலவே வாதினால் வெல்லதனுக் கெண்ணித்தாங் கோலுநூ லெடுத்தோதித் தலைதிமிர்ப்பக் குறைத்தார்கள் | |
| 756 |
| 2653. (இ-ள்) பிள்ளையார்....பொழுது - பிள்ளையார் அழகிய பொற்பீடத்தில் எழுந்தருளியிருந்த போது; உள்ளம்...அமணர் - மனத்துள் நிறைந்த பொறாமையினாலே பக்கத்திலிருந்த கரிய அமணர்கள்; கொள்ளும்...மறைத்து - மனத்தினுட் கொண்ட அச்சத்தை மறைத்து; முகம்....சிவந்து - முகத்தினில் கோபத்தீயானது துள்ளி எழுவது போலக் கண்கள் சிவந்து; பல சொல்லுவார் - பலவாறு சொல்வார்களாகி; |
| 755 |
| 2654. (இ-ள்) காலை....போல் - காலையில் இளங்கதிர் பரப்பி எழும் சூரியனைப் பக்கங்ளிற் சூழம் கரியமுகிற் கூட்டம் போல; பீலிசேர்...சூழ்வார் - மயிற் பீலிகளை ஏந்திய சமண்கையர் பிள்ளையாரைச் சூழ்வாராய்; ஏலவே...எண்ணி - பொருந்தும்படி வாதினால் வெல்வதற்கு எண்ணங் கொண்டு; தாம்....குரைத்தார்கள் - தாம் பேணிய |