| வருந்தல் நீ - உண்ணடுங்கி முறைப்பட்ட அம்மையாரை அஞ்சல் என்றமைப்பது முதற்கடமையாதலின் இதனை முன்னே கூறினார். |
| மற்று வேறு - வேறு வேறு; மற்று என்பது தன்னிடையன்றி வேறாகிய என்பதும், வேறு என்பது நோய் தீர்த்தலன்றிப் பிற என்பதும் குறித்தது. |
| என்மேல் - வெப்பு ஒழித்து - என்பது காண்க; வாது - சாதி யொருமை. |
| என்மேல் வெப்பு ஒழித்து - தெரிப்பீர் - வெப்பு ஒழியச் செய்தலால் தெரியச் செய்வீராக; ஒழித்து - ஒழியச் செய்தலால் எனக் காரணக் குறிப்புப்பட நின்றது. |
| அருகர் நீரும் - அன்பரா மிவரும் - இவர்களைத் தனித்தனி நோக்கிக் கூறியது; தேறிய - தெளிந்து கைக்கொண்ட. |
| தேறிய தெய்வத்தன்மை - "தேறிய தொண்டரை"(திருவிருத்தம்); தெய்வத்தின் உண்மைத் தன்மையை என இரண்டனுருபு விரிக்க. |
| தெரிப்பீர் - தெரியச் செய்வீர் - விளக்குவீர். இருதிறத்தவரையும் பிரித்துக் கூறியதனால் இருவரும் தனித்தனி தீர்த்து உண்மை காட்டுங்கள் என்றபடி; "அவரும் யாமும் முன்னுற ஒக்கத் தீர்க்க மொழிந்து"(2646) என்று அமணரது வஞ்ச மொழிக்கு "இருதிறத் தீரும் தீரும்" என முன்(2647) குறிப்பிற் கூறிய விடையினை இங்கு விளக்கி விரித்து முறைசெய்து நியமித்தபடி; பிள்ளையார் விழியுற நோக்கலாலே வெம்மைநோய் சிறிது நீங்கியதனால் அரசன் இவ்வாறு அடைவுபடுத்தும் வன்மை பெற்றனன் என்க. |
| ஆறணி சடையினாருக்கு அன்பராம் இவர் - "மைந்தன் - அணைந்தானேல்" (2585) என்றும், "கழுமலத்தான் சங்கரனருள் பெற்று இங்கு மேவினான்"(2589) என்றும் முன்கூறிய ஒருமைக் கூற்றுக்களுடன் இங்குக் கூறும் பன்மைகளை ஒப்பு நோக்குக; இது பிள்ளையாரது நாம மந்திரக் கேள்வியும், திருமேனிக் காட்சியும், திரு நோக்கமும் பெற்ற திருவருட்பேற்றினால் முன்னைய நோயும் மயக்கமும் சிறிது நீங்கப் பெற்றமையாலாகியது. |
| என்னிடை - என்முன் எனவும் உரைக்க நின்றது. |
| 759 |
2658 | ஞானவா ரமுத முண்டார் நற்றவத் திருவை நோக்கி "மானினேர் விழியி னாய்கேண்! மற்றெனைப் பால னென்று நீநனி யஞ்ச வேண்டா; நிலையிலா வமணர்க் கென்றும் யானெளி யேன லே"னென் றெழுந்திருப் பதிகம் பாடி, | |
| 760 |
2659 | பெற்றியா லருளிச் செய்த பிள்ளையார் தமக்கு முன்னஞ் சுற்றுநின் றழைத்த லோவா வருகர்க்குந் தென்னர் கோமான் "இற்றைநா ளென்னை யுற்ற பிணியைநீ ரிகலித் தீருந்; தெற்றெனத் தீர்த்தார் வாதில் வென்றன" ரென்று செப்ப; | |
| 761 |
2660 | மன்னவன் மாற்றங் கேட்டு, வடிவுபோன் மனத்து மாசு துன்னிய வமணர் தென்னர் தோன்றலை நோக்கி "நாங்கள் உன்னுடம் பதனில் வெப்பை யொருபுடை வாம பாகம் முன்னமந் திரித்துத் தெய்வ முயற்சியாற் றீர்த்து" மென்றார். | |
| 762 |
| 2658. (இ-ள்) ஞான ஆர் அமுதம்.......நோக்கி - ஞானமாகிய நிறைந்த அமுதத்தினை உண்டருளிய பிள்ளையார் நல்ல தவத்தையுடைய திருவாசிய அம்மையாரை |