[வம்பறாவரிவண்டுச் சருக்கம்] 28.திருஞானசம்பந்த நாயனார் புராணம்927

  நோக்கி; "மானின் நேர்விழியினாய் கேள் - மானின் விழியினைப்போன்ற விழிகளையுடைய அம்மையே கேட்பாயாக!; மற்று எனை.....வேண்டா - மற்று என்னைச் சிறுவன் என்று நீ மிகவும் அஞ்ச வேண்டாம்; 'நிலையிலா....அலேன்' ....பாடி - நன்னிலையில்லாத அமணர்களுக்கு என்றும் யான் எளியேனல்லேன்" என்ற கருத்துடன் எழுகின்ற திருப்பதிகத்தினைப் பாடியருளி,
 

760

  2659. (இ-ள்) பெற்றியால்....தமக்கும் - திருவருளைப் பற்றிய தன்மையினால் அவ்வாறு திருப்பதிகம் அருளிச் செய்த பிள்ளையாருக்கும்; முன்னம்.....அருகர்க்கும் - தன் முன்பு சூழ்ந்து நின்று குரைத்தலை நீங்காத அமணர்களக்கும் (ஒன்றுபோலவே); "இற்றைநாள்...வென்றவர்" என்று - இன்றைய நாளில் என்னையடைநத "இப்வெப்பு நோயினை நீர் இருவீரும் தனித்தனி வேறாகி இகல் வைத்து ஒட்டித் தீருங்கள்; தெளிவுபெறத் தீர்த்தவர்களே வாதில் வெற்றி பெற்றவராவர்" என்று; எதன்னர் கோமான் - பாண்டிய மன்னவன்; செப்ப - சொல்ல,
 

761

  2660. (இ-ள்) மன்னவன் மாற்றம் கேட்ட - அரசனது மாற்றத்தினைக் கேட்டு; வடிவுபோல்....அமணர் - உடம்பினைப் போலவே மனத்தினும் மாசு பொருந்திய அமணர்கள்; தென்னர் தோன்றலை நோக்கி - பாண்டியனாகிய அரசர் பெருமானை நோக்கி; நாங்கள்....என்றார் - "நாங்கள் உனது உடம்பில் ஒரு பக்கத்தில் இடப்பாத்தின் வெப்பு நோயை முதலில் மந்திரித்துக் தெய்வ முயற்சியினாலே தீர்ப்போம்" என்றனர்.
 

762

  இம்மூன்று பாட்டுக்களும் தொடர்ந்து ஒரு முடிபு கொண்டன.
  2658. (வி-ரை) திரு - ரப்போல்வாரைத் திரு என்றது உபசாரம். தவத்திரு - தவமாவது பாண்டி நாடும் அரசனும் சைவமும் ஓங்கும்படி செய்த தவம்.
  மானின் நேர்விழி - இது பதிகத் தொடக்கம்; பதிகச் சொல்லும் பொருளும் போற்றப்பட்டன; மான் - மானின் விழி குதித்தது. ஆகுபெயர். இங்கு இத்தன்மையாற் கூறியது உண்ணடுங்கி உரைத்த நிலையும், அதனால் மருண்ட பார்வையும் கண்டது பற்றியாம்.
  மற்றுஎனை - மற்று - அம்மையார் பிள்ளையாரைத் திருமேனி எளியர் போலும் என்று எண்ணிய நிலைகுறித்தது.
  நிலையிலா அமணர் - நிலை - உண்மை நிலை; நிலையிலாராதலின் - அவர்க்கு எளியேனலேன் என்று காரணக் குறிப்புப்பட உடம்பொடு புணர்த்தி ஓதினார். நிலையில்லாமை - தெளியா தொருபொருளே பொய்யு மெய்யுமா மென்னும் புரைநெறி என்ற குறிப்பும்பட நின்றது.
  என்றும் - இன்று இங்குமட்டுமன்றி வேறு எங்கும் எப்பொழுதும்.
  இப்பாட்டுப் பதிகக் கருத்துணர்த்திற்கு. இப்பதிகமொன்றே தனி ஒருவரை முன்னிலைப் படுத்திக் கூறிய அமைதியுடையது.
  திருவையொத்த - என்பதும் பாடம்.
 

760

  2659. (வி-ரை) பெற்றி - சிவத்தன்மை; அவனருளாலல்ல தொன்றையுஞ் செய்யாராய்த் திருவருள் வசத்தராய் நிற்பதனால் சிவச் செயலே தம் செயலாக நிகழும் தன்மை; "திருவாலவாயர னிற்கவே" "சொக்க னென்னு ளிருக்கவே" என்ற பதிகம் காண்க.
  பிள்ளையார் தமக்கும் அருகர்க்கும் - செப்ப என்க. இகலி - என்றதனால் ஒட்டித் தனித்தனி செய்க என்று வகுத்தவாறு காண்க.