| முன்னம் - முதலில். பிள்ளையார் தஞ்செயல் புரிவதன்முன் எனத் தாங்கள் முந்திக் கொண்டது; வாமபாகம் - வாமபாகத்து நோய்க்கு ஆகிவிந்தது; வாமம் - இடப்பக்கம். வாமபாகத்தைத் தேர்ந்து கொண்டது உடற்கூற்றின்படி இடப்பாகம் பெண்பாகமானதால் ஆண் மக்களுக்கு அப்பகுதியில் பற்றிய நோய் வலிதின்றி எளிதில் தீர்த்தற்குரியது ஆதலானும், வலப்பாகம் ஆண்பாகமானதால் ஆண் மக்களுக்கு வலப்பாகத்திற் பற்றிய நோய் தீர்த்தல் எளிதன்றாதலானும் முயற்சியின் வலிய பகுதியைப் பிள்ளையாருக்கு விட்டு எளிய பகுதியை எடுத்துக் கொண்டனர்; இஃது அமணர் மருத்துநூல் முதலிய கலைஞானங்களின் வல்லை ம கொண்டு துணிந்த வஞ்சக் செயல்களுள் ஒன்று என்க. |
| முன்னம் - என முந்திக்கொண்டதென்னை எனின், "போன கங்குலிற் புகுந்ததின் விளைவுகொல்?"(2612) என்று அஞ்சிய அமணர் தமது தீத்தொழிலின் பயனை இவ்வாறு நோயாகப் பற்றச் செய்யும் பிள்ளையார் இகலி முற்பட்டு ஒரு பகுதியை நோய் தீர்ப்பாராயின் அது மற்றப் பகுதியின் நிலையை முடுகச் செய்து விடுமென்று கொண்ட அச்சங் காரணம்; இவ்வுணர்ச்சி முன்னை அனுபவத்தாலும் கலைஞான அறிவினாலும் வந்தது என்க; "இருபுடை வெப்பங் கூடி யிடங்கொளா தென்னப் பொங்க"(2663) மேல் விளைதல் காண்க. |
| மந்திரித்துக் தெய்வ முயற்சியால் - "தேறிய தெய்வத் தன்மை என்னிடைத் தெரிப்பீர்"(2657) என்று இங்கு நோய் நீக்கம் வாயிலாக அவ்வத் தெய்வ உண்மை காட்டுவதாகலின் இவ்வாறு கூறினார். |
| 762 |
| VI திருவாலவாய் |
| திருச்சிற்றம்பலம் பண் - கொல்லி |
| மானி னேர்விழி மாத ராய்! வழு திக்கு மாபெருந் தேவி! கேள் பானல் வாயொரு பால னீங்கிவ னென்று நீபரி வெய்திடேல்; ஆனை மாமலை யாதி யாய விடங்க ளிற்பல வல்லல்சேர் ஈனர் கட்கெளி யேன லேன்றிரு வால வாயர னிற்கவே. | |
| (1) |
| எக்க ராமமண் கைய ருக்கெளி யேன லேன்றிரு வாலவாய்ச் சொக்க னென்னு ளிருக்க வேதுளங் கும்மு டித்தென்னன் முன்னிவை தக்க சீர்ப்புக லிக்கு மன்றமிழ் நாதன் ஞானசம் பந்தன்வாய் ஒக்க வேயுரை செய்த பத்து முரைப்ப வர்க்கிட ரில்லையே. | |
| (11) |
| திருச்சிற்றம்பலம் |
| பதிகக் குறிப்பு : - பிள்ளையாரைக் சூழ்ந்து அமணர் அநேகராய்ப் பதறிக் கதறக் கண்டு, அம்மையார் உண்ணடுங்கிப் "பிள்ளையார் திருமேனி எளியர்: அமணர் எண்ணிலார்கள்" என்று அஞ்சி அரசனிடம் கூறியபோது , பிள்ளையார் அம்மையாரை நோக்கி விளித்து "என்னைப் பொலனென்று நீமிக அஞ்சவேண்டா; ஆலவாயரன் என்னுள் நிற்கவே இந்த ஈனர்கட்கு யான் எளியேன் அல்லேன்" என்று, (நோய்மிக்குத் தலை நடுங்கிய நிலையிற் கிடந்த) அரசன் முன் தேற்றியது; குறிப்பு - மக்களுள்ளே தனிப்பட்டவரை முன்னிலைப்படுத்திப் பிள்ளையார் கூறியருளிய பதிகம் இஃதொன்றேயாம். |
| பதிகப் பாட்டுக் குறிப்பு : - (1) மானின் (விழி) நேர் விழி என்க; மான் - மானின் விழிக்கு வந்தது - ஆகுபெயர்; உள்நடுக்குற்று மருண்டதனால் மானின் மருண்ட பார்வை உவமையாயிற்று; பால்நல் - என்க; பானல் வாய்ஒரு பாலன் - இளமைப் பருவம்மட்டிற் குறித்தது; பாலறாவாயர் என்ற பெயர்க் குறிப்புமாம்; பரிவு - பயம் - அச்சம்; ஆனைமாமலை ஆதியாய இடங்கள் - மதுரையைச் சுற்றியுள்ள எண்பெருங் |