| குறிப்புப் பார்வையிற்றோன்ற; "நோக்கம் கண்டு" என மேற்கூறுதல் காண்க. வெப்பு மேன்மேல் தீதுறப்பொறாத நிலையில் பேசமாட்டாது பார்த்தான் என்ற குறிப்பும்பட நின்றது. |
| 763 |
2662 | தென்னவ னோக்கங் கண்டு திருக்கழு மலத்தார் செல்வர் "அன்னவன் வலப்பால் வெப்பை யாலவா யண்ண னீறே மன்னுமந் திரமு மாகி மருந்துமாய்த் தீர்ப்ப" தென்று பன்னிய மறைக ளேத்திப் பகர்திருப் பதிகம் பாடி, | |
| 764 |
2663 | திருவளர் நீறு கொண்டு திருக்கையாற் றடவத் தென்னன் பொருவரு வெப்பு நீங்கிப் பொய்கையிற் குளிர்ந்த தப்பால்; மருவிய விடப்பான் மிக்க வழலெழ, மண்டு தீப்போல் இருபுடை வெப்புங் கூடி யிடங்கொளா தென்னப் பொங்க, | |
| 765 |
2664 | உறியுடைக் கையர் பாயி னுடுக்கையர் நடுக்க மெய்திச் செறிமயிற் பீலி தீயத், தென்னன்வெப் புறுதீத் தம்மை யெறியமா சுடலுங் கன்றி, யருகுவிட் டேற நிற்பார் அறிவுடை யாரை யொத்தா ரறிவிலா நெறியி னின்றார். | |
| 766 |
| 2662. (இ-ள்) தென்னவன் நோக்கம் கண்டு - பாண்டியனது நோக்கத்தினைக் கண்டு; திருக்கழுமலத்தார் செல்வர் - சீகாழியார் களுடைய செல்வராகிய பிள்ளையார்; அன்னவன்....தீர்ப்பது என்று - அவனுடைய வலப்பாகத்து வெப்புநோயினைத் திருவாலவாயில் இறைவனது திருருநீறே நிலைபெற்ற மந்திரமும் மருந்துமாகித் தீர்ப்பதாகும்" என்ற கருத்துட்கொண்டு; பன்னிய....பகர் - கூறிய வேதங்களின் கருத்தைப் போற்றி எடுத்துச் சொல்லுகின்ற; திருப்பதிகம் பாடி - "மந்திரமாவது நீறு" என்று தொடங்கும் திருப்பதிகத்தினைப் பாடியருளிச் செய்து, |
| 764 |
| 2663. (இ-ள்) திருவளர்....தடவ - திருவளரும் திருநீற்றினைக் கொண்டு பிள்ளையார் தமது திருக்கையினாலே அரசனது உடலில் தடவியிட; தென்னன்......அப்பால் - பாண்டியன் ஒப்பில்லாத வெப்பு நோயினின்றும் நீங்கியதனால் அவ்வலப்பக்கம் தண்ணீர்ப் பொய்கைபோலக் குளிர்ந்தது; மருவிய....அழலெழ - பொருந்திய இடது பக்கம் மேலும் மிகுந்த அழலின் தன்மை எழுந்ததனால்; மண்டு.....பொங்க - செறிந்த தீயினைப்போல இருபக்கத்து வெப்பும் சேர்ந்து இடம்கொள்ள மாட்டாதென்று பொங்கவே, |
| 765 |
| 2664. (இ-ள்) உறியுடை....எய்தி - உறிதூக்கிய கையினை யுடையார்களும் பாயினை உடையாக யுடையார்களும் ஆகிய அமணர்கள் நடுக்கமடைந்து; செறி....தீய - செறிந்த மயிற்பீலிக் கற்றை தீந்துபோக; தென்னன்.....கன்றி - அரசனது வெப்பு நோயின் சூடு தம்மைத் தாக்குதலாலே மாசுகொண்ட உடலும் மேலும் கருகி வெதும்பியவர்களாய்; அருகுவிட்டு ஏற நிற்பார் - அரசனது அருகினின்றும் அகன்று தூரச்சென்று நிற்பவர்களாகிய அவ்வமணர்; அறிவுடையாரை...நின்றார் - அறிவில்லாத நெறியின் நின்றவராயினும் அறிவுடையார்களைப் போன்றனர். |
| 766 |
| இம்மூன்று பாட்டுக்களும் தொடர்ந்து ஒரு முடிபு கொண்டன. |