| VII திருவாயவாய் |
| திருச்சிற்றம்பலம் திருநீற்றுப்பதிகம் - பண் - காந்தாரம் |
| மந்திர மாவது நீறு வானவர் மேலது நீறு சுந்தர மாவது நீறு துதிக்கப் படுவது நீறு தந்திர மாவது நீறு சமயத்தி லுள்ளது நீறு செந்துவர் வாயுமை பங்கன் திரு வாலவா யாறிரு நீறே. | |
| (1) |
| வேதத்தி லுள்ளது நீறு வெந்துயர் தீர்ப்பது நீறு போதந் தருவது நீறு புன்மை தவிர்ப்பது நீறு ஒதத் தகுவது நீறு வுண்மையி லுள்ளது நீறு சீதப் புனல்வயல் சூழ்ந்த திரு வாலவா யான்றிரு நீறே. | |
| (2) |
| முத்தி தருவது நீறு முனிவ ரணிவது நீறு சத்திய மாவது நீறு தக்கோர் புகழ்வது நீறு பத்தி தருவது நீறு பரவ வினியது நீறு சித்தி தருவது நீறு திரு வாலவா யான்றிரு நீறே. | |
| (3) |
| காண வினியது நீறு கவினைத் தருவது நீறு பேணி யணிபவர்க் கெல்லாம் பெருமை கொடுப்பது நீறு மாணந் தகைவது நீறு மதியைத் தருவது நீறு சேணந் தருவது நீறு திரு வாலவா யான்றிரு நீறே. | |
| (4) |
| பூச வினியது நீறு புண்ணிய மாவது நீறு பேச வினியது நீறு பெருந்தவத் தோர்களுக் கெல்லாம் ஆசை கெடுப்பது நீறு வந்தம தாவது நீறு தேசம் புகழ்வது நீறு திரு வாலவா யான்றிரு நீறே. | |
| (5) |
| அருத்தம தாவது நீறு வவல மறுப்பது நீறு வருத்தந் தணிப்பது நீறு வான மளிப்பது நீறு பொருத்தம தாவது நீறு புண்ணியர் புசும்வெண் ணீறு திருத்தகு மாளிகை சூழ்ந்த திரு வாலவா யான்றிரு நீறே. | |
| (6) |
| எயிலது வட்டது நீறு விருமைக்கு முள்ளது நீறு பயிலப் படுவது நீறு பாக்கிய மாவது நீறு துயிலைத் தடுப்பது நீறு சுத்தம தாவது நீறு அயிலைப் பொலிதரு சூலத் தாலவா யான்றிரு நீறு | |
| (7) |
| இராவணன் மேலது நீறு வெண்ணத் தகுவது நீறு பராவண மாவது நீறு பாவ மறுப்பது நீறுங தராவண மாவது நீறு தத்துவ மாவது நீறு அராவணங் குந்திரு மேனி யாலவா யான்றிரு நீறே. | |
| (8) |
| மரலொ டயனறி மாத வண்ணமு முள்ளது நீறு மேலுறை தேவர்க டங்கண் மெய்யது வெண்பொடி நீறு ஏல வுடம்பிடர் தீர்க்கு மின்பந் தருவது நீறு ஆலமு துண்ட மிடற்றெம் மாலவர் யான்றிரு நீறே. | |
| (9) |