942திருத்தொண்டர் புராணம் [வம்பறாவரிவண்டுச் சருக்கம்]

  "பிணியே யன்றிப் பிறவியும் தீரும்"(2618) "மயக்கம்" (2657) என்றவை காண்க. பிணியாயின தீரச் சாற்றிய பாடல்கள் - இப்பதிகம் பாண்டியன் சுரந்தீர்க்கப்பாடிய தென்ற வரலாற்றுக்குச் சிறந்த அகச்சான்று; உடல் உற்ற - பிள்ளையாரது ஆணையால் வந்துற்ற என்ற குறிப்பும் காண்க. "மருவு தீப்பிணியும் நீங்கி வழுதியு முழுது முய்ந்தான்"(2664); பதிகத்துள் "மந்திரமாவது"(1) "வெந்துய ர்தீர்ப்பது"(2), "அவலமறுப்பது" - "வருத்தந் தணிப்பது" ((6); "ஏலவுடம்பிடர் தீர்க்குமின்பந் பருவது நீறு" (9) என்பன முதலியவையும் சரித வரலாற்றுக் குறிப்புப்பட நிற்பன காண்க; இப்பதிகப் பாட்டுக் குறிப்புகள் பல க.சதாசிவச் செட்டியார் அவர்கள் உரைக் குறிப்புக்களைத் தழுவி எழுதப்பட்டன.
2669
கொற்றவன் றேவி யாருங் குலச்சிறை யாருந் தீங்கு
செற்றவர் செய்ய பாத தாமரை சென்னி சேர்த்துப்
"பெற்றனம் பெருமை; யின்று பிறந்தனம்; பிறவா மேன்மை
யுற்றனன் மன்ன" னென்றே யுளங்களித் துவகை மிக்கார்.
 

771

  (இ-ள்) கொற்றவன்.....சேர்த்து - அரசனது மாதேவியாரும் குலச்சிறையாரும், தீங்கினை அழித்த பிள்ளையாரது சிவந்த திருவடித் தாமரைகளைத் தமது முடியிற் சேர்த்து வணங்கி; "பெற்றனம்....மன்னன்" என்றே - நாங்கள் பெருமை பெற்றோம்; இன்றை நாளே உறுதிபெறப் பிறந்தவர்களாயினோம்; அரசன் இனிப் பிறவியில்வாராத மேன்மை யடைந்தனன் என்றுகூறி; உளம்......மிக்கார் - உள்ளம் களிப்படைந்து மிகவும் மகிழ்ந்தனர்.
  (வி-ரை) தீங்கு செற்றவர் - வெப்பு நோயாகிய தீங்கும், அதன் மூலமாகிய அமண் சார்வு என்னும் தீங்கும், அதன் லமாகிய அரசனது முன்செய் தீவினையாகிய தீங்கும், ஒருங்கே அழித்துப் போக்கியவர்.
  பாததாமரை சென்னி சேர்த்தி - திருவடி மேல் முடிபொருந்த வீழ்ந்து வணங்கி.
  பெருமை பெற்றனம் என்க; வினைமுற்று முன்வந்தது விரைவுக் குறிப்பு. இன்று பெற்றனம் - இன்று பிறந்தனம் என இன்ற என்பதனை முன்னும் பின்னும் கூட்டி உரைக்க இடையில் வைத்தார்.
  இன்று பிறத்தலாவது - பிறவிப்பயனை இன்றுதான் பெற்றோம் என்பது; "பேசாத நாளெல்லாம் பிறவா நாளே"(தேவா) என்றபடி பிறவிப்பயனாகிய, அரசன் பணியம், அடியார் பணியும், அரன் பணியும் செய்ய இயலாமல் கழிந்த முன்னை வாழ்நாட்கள் பிறவா நாட்களாகிக் கழிந்தன என்பது கருத்து.
  (யாங்கள்) பிறந்தனம் - மன்னன் பிறவா மேன்மை பெற்றனன் - என்ற கவி நயமும் காண்க. பிறவாமை மேன்மை - வீடுபேறு; பிறந்தனம் - "நன்மையால்லாது செய்ய, வூனம்வந் தடையின் யாமு முயிர்துறந் தொழில் தென்றார்"(2594) என்றாராதலின் அவ்வாறொன்றும் வாராது மீளப் பிழைத்தவர்களானோம் என்ற கருத்தும் காண்க.
  உளம் களித்து உவகை மிக்கார் -உளம் களித்தல் - உள்ள நிகழ்ச்சி; உவகை மிகுதல் அதனை வெளிப்படுத்தும் மெய்ப்பாடு பொருந்துதல்.
 

771

2670
மீனவன் றன்மே லுள்ள வெப்பெலா முடனே மாற,
ஆனபே ரின்ப மெய்தி யுச்சிமே லங்கை கூப்பி