| சொல்லுவார் - முற்றெச்சம்; சொல்லுவார் - என்றனர் என வரும் பாட்டுடன் முடிக்க. |
| 776 |
| 2675. (வி-ரை) என்ன.....எனா - என்ன வாது என்று வாதமில்லை எனக் கூறிய எதிர்மறை வினாவினையே, அறியா வினாவாக எடுத்துக் கொண்டு. பின்னரும் இவ்வாறே, "நீங்கள் தோற்றிலீர்போலும்"(2691) என்னுமிடத்து அரசன் நகையுட்கொண்டு செப்பிய இகழ்ச்சி மொழியைத் தேறார்(2692) சொன்ன சொல்லின் சொல்லே பயனாக்கொண்ட மேற்சொல்லி அமணர் வாது துணிதல் காண்க. |
| சொன்ன வாசகம் - தாங்கள் முன் "கட்புலத்தில் உய்ப்பது" என்ன ஒட்டிய வாசகம்(2673); கட்புலத்தில் உய்ப்பது இவ்வகையாய் என்பது தொடர்ந்து கூறியமை காண்க. |
| சூழ்ச்சி - அறிவாற் சூழ்ந்து தெரிந்து கொள்ளும் முடிவு; |
| சூழ்ச்சியால் மன்னுதல் - அவ்வாற சூழ்ந்து நிலைபெறுத்தல்; சூழ்ச்சி - இங்கு நற்பொருளில் வந்தது. |
| ஏடு கொண்டு தீட்டி - ஏடு - ஓலை; ஏட்டினை இடமாகக் கொண்டு எழுதி; கொண்டு - இடமாகக் கொண்டு அதன்கண் தீட்டி என்க; தீட்டுதல் - நன்கு எழுதுதல். |
| மாட்டுதல் - தீயினுள் ஊடுருவ உய்த்தல். |
| வேவுறாமை வெற்றியாவது - வேவாதிருத்தலே வெற்றியைக் கட்புலத்தில் காண உய்ப்பதாம் என்றபடி. |
| 777 |
2676 | என்ற போது மன்ன னொன்றி யம்பு முன்பு பிள்ளையார் "நன்று நீரு ரைத்த வாறு; நாடு தீயி லேடுதான் வென்றி டிற்பொ ருட்க ருத்து மெய்ம்மை யாவ தென்றிரேல் வன்ற னிக்கை யானை மன்னன் முன்பு வம்மி" னென்றனர். | |
| 778 |
| (இ-ள்) என்றபோது....முன்பு - முன் கூறியவாறு அமணர்கள் சொல்லியபோது அதற்கு விடையாக அரசன் ஒன்று சொல்லுவதன் முன்பே; பிள்ளையார் - ஆளுடைய பிள்ளையார்; நன்று....ஆறு - நீர் சொல்லியவழி நன்று; நாடுதீயில்....என்றிரேல் - நாடும் தீயினில் ஏடுதான் வேவாமை காட்டி வென்றிடில் அதில் எழுதிய பொருட்கருத்து வாய்மையுள்ளதாகும் என்ற சொல்வீர்களாகில்; வன்தனி.....வம்மின் - வலிய ஒற்றைக் கையினையுடைய யானை மன்னன் முன்பு அவ்வாறே வாதம் செய்து முடிபுகொள்ள முன்வாருங்கள் என்றருளினார். |
| 778 |
| (வி-ரை) மன்னன் ஒன்று இயம்புமுன்பு - பிள்ளையார் - என்றனர் - வாதம் விரும்பி அறைகூறினோர்களை அதனைச் செய்யவிடாது தடுத்தல் நேர்மையன்றென்பதும், அவ்வாறு செய்யின் வாதில் வெற்றிபெறமாட்டாமை குறிக்குமென்பதும், ஆனால் அரசன் அமணர்களது பொய்ம்மையை உணர்ந்து தீர்வும் முடித்துவிட்டமையின் அவர்கள் கூறும் வாதத்திற்கு உடன்படமாட்டான் என்பதும்; இம்மட்டோடு நிறுத்தாது சமயவாதம் அல்லது மந்திரவாதத்தில் அவர்கள் இசையும் வழியெல்லாம் காட்டி அவர்களது பொய்மையை நிலையிட்டுக் காட்டினாலன்றி மயக்கினின்று நீங்கி உலகம் உய்தலும் சைவத்திற்கு நேர்ந்த தீமை ஒழிதலும் திருநீறு ஒங்கலும் அமையாவென்பதும், இன்னபிறவும் திருவுள்ளம்கொண்டு அரசனிடம் அமணர்கள் கூறியதற்கு அரசன் விடை கூறு முன்பு, பிள்ளையார் விடைகூறி அவர் கொள்கைப்படியே வாதிற்கு அவர்களை அழைத்தனர் என்க |