952திருத்தொண்டர் புராணம் [வம்பறாவரிவண்டுச் சருக்கம்]

  விடுதல்; தீப்பற்றிய தன்மையை ஒளியினால் காட்ட; ஒளியே எல்லாப் பொருள்களையும் காட்டுதல் இயல்பு; அதுபோல் இங்கு ஒளியானது தீப்பற்றிய நிலையினைக் காட்டிற்றென்ற நயமும் காண்க. அழற்கடவுள் - என்றதற்கேற்பச் சிகையும் ஒளியும் கூறினார். அக்கடவுளைத் தியானிக்கும் சுருதிமுறையும் இங்கு நினைவுகூர்தற்பாலது.
  காயும் வெவ்வழற் கடவுள் - "வெப்புறுந் தழல்" என்றதற்கேற்ப ஈண்டும் இவ்வாறு கூறினார்; பிள்ளையாரால் திருநோக்கம் பாவனை பதிசம் என்ற தீக்கை முறைகளைப் பெற்றுத் திருநீறு பூசப்பெற்றவனாதலாலும், வினைகளொத்துச் செய்தவப் பயனெய்தும் செவ்வியுற்றவனாதலானும், அரசன் தூய உள்ளத்து எண்ணியாங்கே அழற்கடவுளும் வந்தனன் என்ற குறிப்பும் காணத்தக்கது.
  ஆயுமுத்தமிழ் விரகர் - ஆயும் - உயர்ந்தோரால் ஆயப்படும்; பிள்ளையாரது ஞானத்தமிழின் பெருமை கூறியவாறு; தமிழ்த் திருமுறையினைத் தாமே ஆய்ந்து பின்னர் எரியினிலிடும் பதிகத்தினை எடுக்கும் நிலையும், "எரியினி லிடவிவை கூறிய, சொற்றெரி யொருபது மறிபவர்"(சாதாரி - பதிகம் - 11) என்று அதன் ஆயத்தகும் தன்மையைப் பிள்ளையாரே காட்டியருளும் நிலையும், மற்றும் பிள்ளையாரது தமிழே வெற்றிபெறும் நிலையும் குறிப்பிற் பெறவைத்து ஈண்டு இத்தன்மையாற் கூறினார்; "அசைவில்செழுந் தமிழ்வழக்கே யயல்வழக்கின் றுறைவெல்ல"(1922) என்றதும் இங்கு நினைவுகூர்க.
  அணைய வந்தருளி - அவையில் தழல் அமைத்த இடத்திற் சேரவந்தருளி.
 

780

  2679. (வி-ரை) செங்கணேற்றவரே பொருள் என்று - பொருள் - உண்மைப் பொருள்; முழுமுதற்பொருள்; சிவபெருமானே பெருளாவார்; ஏனை எவையும் பொருளல்ல என்று துணிந்து அவரையன்றி வேறொருவரையும் துதியாமையை எடுத்துக்காட்டி உலகுக்கறிவுறுத்திய.
  பொங்கு இசை - பண் - இசையமைதி - மிக்க; இசை - புகழ் என்றலுமாம். புகழ்பொங்குதலாவது பாடியருளிய அன்று போலவே என்றும் புதியதாயும் பயனுடையதாயுமிருத்தல்.
  திருப்பதிக நன்முறை - பதிகங்கள் எழுதிய ஏடு; சுவடி. முறை - நூல். இங்குத் திருமுறை எனத் தேவாரத் தொகுதிக்கு வழங்கும் மரபுப் பெயராய் வந்தது; சைவத் தெய்வத் திருமுறைகள் பன்னிரண்டுமே திருமுறை என்ற பெயரால் வழங்கப்படுவது சைவ ஆன்றோர்களது மரபு வழக்கு. ஏனை நூல்களைஇப்பெயரால் வழங்குதல் பிழை வழக்கும் மரபு வழுவுமாம். (பிள்ளையார் அருளிய திருப்பதிகங்கள் அவ்வப்போது எழுதிக்கொண்டும் அந்த ஏட்டினைத் தாங்கிக்கொண்டும் வந்தவர் பிள்ளையாரின் நல்லம்மான் சம்பந்த சரணாலயர் என்பது வரலாறு. "அருமுறைசொற்றிருப்பதிகம் எழுதுமன்பர்" (புரா.908); இவரே அத்திரவாக்கினாலே "புத்திநந்தி தலையில் இடிவீழ்க" என்று பொறாஉரை முன் விட்டவர். பின்னர்ப் பிள்ளையார் திருமுன்பு புத்தவாதம் வென்று புத்தரைச் சைவராக்கியவரும் இவரே. பின் வரலாறு குறிக்க).
  முறையினைப் போற்றித் தொழுது - சிவனையே பொருளாகக் கொண்டமையால் மறைபோல இதுவும் பதியின் தன்மைகொண்டு வணங்கத்தக்கதாயிற்று.
  காப்பு நாண் - ஏட்டினைக் கட்டிய கயிறு.
  தாம்தெரிந்த - என்பதும் பாடம்.
 

781

  2678. (வி-ரை) ஏய - ஏவிய - ஏவப்பட்ட - எனச் செயப்பாட்டுவினைப் பொருளில் வந்தது.
  உடன்குறித்து அடுக்கி - உடன் - ஏவிவிடுத்த உடனே; குறித்தல் - துண்டங்களாக வெட்டித் தீக்கொளுவுதற் கேற்றதாக்குதல்; அடுக்கி - தீக்கொள்ளும்படி ஒழுங்குபடுத்தி வைத்து; தீ அமைத்தலும் - தீயைக் கொளுவிப் பற்றச் செய்தலும்.
  சிகை விடு புகை ஒழிந்து எழுந்து - ஒளிகாட்ட - முன்னர்ப் புகைவிட்டு எழுதலும் பின்னர் ஒளிகாட்டி எழுதலுமாகிய தீப்பற்றி எரியும் இயல்பு குறிக்கப்பட்டது. சிகை விடுபுகை - சிகைபோல மேலே விடும் புகை; சிகைபோன்றதைச் சிகை என்றதுபசாரம்; கருமையாலும் அடி மிகுத்தும் தொகுத்தும் நுனித்தும் மேல் கொழுந்து போல் எழுதலாலும் சிகைபோன்றது எனப்பட்டது; ஒளி காட்ட - புகை நீங்கி ஒளி