| "போகமார்த்த பூண்முலையாள்" பதிகத் தொடக்கம்; வந்து நேர்தல் - உதயமாகுதல்; வெளிப்படுதல். |
| நால்தடம்புயத்து அண்ணலார் - சிவபெருமான் - நாடுடைநாயகர்; தோள்வலி பற்றிக் கூறினார் வெற்றி குறித்தற்கு. |
| நாள்ளாறு போற்றும் - இரண்டனுருபு விரிக்க. நள்ளாற்றின் அண்ணலாரைப் போற்றும் என்னாது "அண்ணலார் மருவு நள்ளாறு போற்றும்" என்றது "நம்பெருமான் மேயது நள்ளாறே" என்று தலத்தைப் போற்றிய வகையால் அமைந்த பதிக அமைப்புக் குறித்தது. |
| பதிகம் - போகமார்த்த பூண்முலையாள் - வந்து நேர்ந்துளது - என்றது அப்பதிகத்துளே இத்தொடக்கமுடைய முதற்பாட்டு எழுந்தது என்ற குறிப்பாம்; பதிகம் - பதிகத்தினுள்; ஏழனுருபு தொக்கது. "வனமுலை யிணையவை குலவலின்" என்று இதனைப் போற்றுவதும், அப்பதிகத்தினுள் இவ்வொருபாட்டே முலை என்ற சத்தத்துடன் நிற்பதும் காண்க. நேர்ந்த முதற்பாட்டின் அச்சொல்லே அருட்குறிப்பினை உணர்த்தியதாம் என்பது அதனைப் போற்றிய "தளிரிள வளரொளி"ப் பதிகத்தின் பதினொரு பாட்டினும் முலை குலவலின் - செறிதலின் - கலவலின் - துதைதலில் - புணர்தலின் - பயிறலின் - என்று அச்சொல்லையும் பொருளையுமே பாராட்டியும், மேல் அந்த ஏடு எரியில் பழுதிலாமைக்கு அதுவே காரணமாகக் காட்டியும் அருளுதலாற் பெறப்படும்; பிராட்டியின் முலையிணைகளே ஞானங்களாய் அமுதமாய் உயிர்களுக்குப் போகங்களைத் தருவன என்பதும் போந்த குறிப்பாம். ஒரு பாட்டுப் பதிகம் என வழங்குவதும் மரபு. அப்பதிக முழுமையும் அவ்வொரு திருவேட்டினில் பொறிக்கப்பட்டிருத்தலுமாம். "பதிகத்தினை யமர்ந்துகொண் டருளி - திருஏட்டினைக் கழற்றி"(2681), "பதிகத்தின் நாதன்" (2682) என வருவனவும் கருதத்தக்கன; பதிகம் - வந்து (அதனுள்) போகம் - முலையாள் - நேர்ந்து - அஃதுளது என்று கூட்டிக் கொள்க. |
| 782 |
2681 | அத்தி ருப்பதி கத்தினை யமர்ந்துகொண் டருளி மைத்த வெங்கடு மிடற்றுநள் ளாறரை வணங்கி மெய்த்த நற்றிரு வேட்டினைக் கழற்றிமெய்ம் மகிழ்ந்து கைத்த லத்திடைக் கொண்டனர் கவுணியர் தலைவர். | |
| 783 |
| (இ-ள்) அத்திருப்பதிகத்தினை அமர்ந்து கொண்டருளி - அந்தத் திருப்பதிகத்தினை விரும்பி மேற்கொண்டருளி; மைத்த....வணங்கி - இருண்ட வெவ்விய விடம் பொருந்திய கண்டத்தினையுடைய திருநள்ளாற் றிறைவரை வணங்கி; மெய்த்த....கழற்றி - உண்மை பொருந்திய நல்ல அத்திரு ஏட்டினைத் திருமுறைச் சுவடியினின்றும் கழற்றி வேறெடுத்து; மெய்ம் மகிழ்ந்து.....தலைவர் - மெய் மகிழ்ந்து கைத்தலத்தினிற் கவுணியர் பெருமானாராகிய பிள்ளையார் வைத்துக் கொண்டருளினர். |
| (வி-ரை) அமர்ந்து கொண்டருளி - அமர்தல் - விரும்புதல்; கொண்டருளுதல் - திருவுள்ளத்தில் மேற்கொள்ளுதல்; மெய்யின் மேற்கொண்டு கையிற் கொள்ளுதல் மேற்கூறுதல் காண்க. |
| மைத்த - மைபோலக் கரிய; குறிப்புவினைப் பெயரேச்சம் "பனித்தசடை" (தேவா); "விரைத்த கடுக்கையந் தொங்கல்"(பேரூர்ப் புரா.) பரவிக் கேடுவிளைத்த விடத்தை அடக்கிக் கொண்டதுபோலப், பரவிக் கேடு செய்யும் அமணிருளையும் அடக்கி ஒடுக்கிக்கொள்ள வேண்டுதல் குறிப்பு. |