960 | திருத்தொண்டர் புராணம் [வம்பறாவரிவண்டுச் சருக்கம்] |
| எட்டும் உடம்பாக உடைய மூர்த்தியை உட்கொண்டது. ஆதலின் சத்தாந் தன்மை மிகப்பெற்று எரியினில் வேவாமை மட்டுமன்றிப் பச்சையாயும் விளங்கிற்று என்க. இன்னும், அவ்வெட்டுமூர்த்தங்களுள் நீரும் ஒன்று, காற்றும் ஒன்று; எனவே தீயும் நீறும் காற்றும் உடன்கொண்ட மூர்த்தமாகிய அட்டமூர்த்தத் தொகுதிப்பொருள் உட்புகுந்தது. அஃது ஊழித்தீயினையும் ஊழிநீரினையும் ஊழிக்காற்றினையும் உள்ளடக்கியது; அவ்வாறாயின் இத்தீயினை அவித்தல்வேண்டுமே எனின், அதனுள் தீயுமிருத்தலின் அவிந்திலது; இத்தீயினை அடக்கவ்லலது அத்தீ; "நெருப்பையு மெரிக்கும்" (திருப்புகழ்); ஊழித்தீயை உள்ளடக்கிய தீயாகிய மூர்த்தம் இருக்கவே அங்கங்கும் தீயின் வடிவம் அளவுபடுத்தப்பட்டு நிகழ்வது அவ்வட்ட மூர்த்தியின் செயல்; "அங்கிமிகாமைவைத் தானுடல் வைத்தான்; எங்குமி காமைவைத் தானுல கேழையும், தங்கிமி காமைவைத் தான்றமிழ்ச் சாத்திரம், பொங்கிமி காமைவைத் தான் பொருடானுமே"(பாயிரம் - 87) என்று திருமூலர் திருமந்திரம் இதனை விளக்குதல் காண்க. | | மலைமகள்பாகத்து அட்டமூர்த்தியைப் பொருள் என உடைமையால் - எரியினில் ஏடு இடவேண்டியகாலைப் "போகமார்த்த பூண்முலையாள் தன்னொடும் பொன் அகலம் - பாகமார்த்த - பரமேட்டி"(பதிகம்) என்ற பாட்டு எழுதிய ஏடு வந்து நேர்ந்தது; அதனை எரியிலிடில் பழுதிலை என்பது திருவருட் குறிப்பென அருள்வழியே உணர்ந்தனர் பிள்ளையார்; அதனால் அவ்வுணர்ச்சி கொண்டு "முலையாள் பாகமார்த்த பரமேட்டி" என்பதற்கு "மலைமகள் முலையிணையவை குலவலின் - எரியிடில் பழுதிலை என்று உரைகூறிப் போற்றி உலகுக்குக் காட்டியருளினர்; அவ்வாறு பிள்ளையார் காட்டிய நியாயத்தினைப் பின்னும் விளக்கி முலை குலவலின் என்பதற்கு முலைமலைமகள் பாகத் தட்டமூர்த்தியைப் பொருளென உடைமையால் என்று விரித்துரை செய்து காட்டியருளினர் ஆசிரியர். மலைமகளும் இறைவரது திருமேனி என்பது. | | போகமார்த்த பூண்முலையாள் - பரமேட்டி - (திருவருட் குறிப்பு); மலைமகள் முலையிணை யவை குலவலின் நள்ளாறர் நாமமே - (பிள்ளையார் அருளியது); மலைமகள் பாகத் தட்டமூர்த்தியைப் பொருளென உடைமை - (ஆசிரியர் உரை). | | பதிகம் - தீயிடைப் பச்சையாய் விளங்கியது - பதிகம் எழுதிய ஏடு விளங்கியது என்பது கருத்து. இங்கு வாதத்தில் ஒட்டிய பொருளாவது தீயினை ஏவல் கொண்டு சுடாதிருக்கப் பண்ணுதலன்று; அதனுள் இட்ட ஏடு பழுதிலாது நின்று உண்மை காட்டுதலேயாம்; தீயினை ஏவல்கொள்ளுந் தன்மை முன்னரே பிள்ளையார் "சுடர் - பையவே சென்று பாண்டியற் காகவே" எனப் பணித்தமையாற் போந்து அறிய நின்றது; அதனை உட்கொண்டுபோலும் அமணர்களும் "மன்னுதம் பொருட்கருத்து வாய்மைதீட்டி மாட்டினால், வெந்நெருப்பில் வேவுறாமை வெற்றி"(2675) என்று ஒட்டினர்; "அங்கித்தம் பனைவல்லார்க் கனல்சுடா தாகும் " (சித்தி - 10-5) என்றபடி தீயின் வேதனை தம்மாட்டுச் சாராது செய்தல் சில சாதனைகளால் ஆகும். இது சமணர் அறிந்த கலைகளுள் ஒன்று என்பது "அதிசயமன் றிதுமுன்னை யமண்சமயச் சாதகத்தா, லிதுசெய்து பிழைத்திருந்தான்"(1367) என்று பாடலி புத்திர அமணர், நீற்றறையில் அரசுகள் பழுதுறாது பிழைத்திருந்த போது பல்லவனுக்குச் சொன்னதனாலறியலாம்; எனவே அசேதனமாய் எரியுட்பட்ட மாத்திரையிற் பழுதுபடுவதாய் உள்ள ஏடு வேவாமை அதனுள் எழுதிய பொருளின் வாய்மைத் தன்மையாகிய வலிமையாலாவது என்று காண்பது அவர் கருத்து; அதனால் அவ்வலிமை ஏட்டினிற் காண வேண்டுவதாயிற் றாதலின் தீச்சுடாது குளிர்ந்ததென்று தீயின் செயலாகக் கூறாது பதிகம் - அட்டமூர்த்தியைப் பொருளென உடைமையின் தீயிடைப் பச்சையாய் விளங்கிய" தென்று, பதிகப் பொருளின் செயலாகக் கூறினார் என்க. |
|
|
|
|