| உலகுக்கு ஒரு பெருங் குருவாக வீற்றிருப்பவர். அவருக்குப் பல மொழிகளில் பல பெயர்கள் உண்டு. மொழியளவில் நிற்போர் அவரை வெவ்வேறு புருடராக உணர்கிறார்; உண்மைஞானங் கைவரப்பெற்றோர்க்கு அவர் ஒருவரே என்பது விளங்கும்; |
| திருஞான சம்பந்தரைச் சூழ்ந்து அவர்தம் ஏவல்வழி நிற்கும் குருமார் பலர் வீற்றிருக்கிறார்; உலகில் எங்கெங்கே திருவருள் நெறிமீது மாசு படிகிறதோ அங்கங்கே அம்மாசினைப் போக்கித் திருவருள் நெறியை விளங்கச் செய்யத் திருஞான சம்பந்தர் போதருவர்; இல்லையேல் தம்மைச் சூழ்ந்துள்ள குருமாருள் ஒருவரை அனுப்புவர்" - என்றும், |
| "ஆண்டவன் ஒருவன்; அவன் அருள்நெறியும் ஒன்றே; அவ்வொன்று ஒவ்வொருபோது ஒவ்வொருவிதப் பெயர் பெறுவதாகிறது; அப்பெயர்கள் பல சமயங்களாக ஆராய்ச்சி யில்லாதவர்களாற் கொள்ளப்படுகின்றன; பலபட்ட பெயர்களை நீக்கிப் பொருளைப் பார்த்தால் ஒருமை புலப்படுமேயன்றிப் பன்மை புலப்படாது" - என்றும், |
| "திருஞானசம்பந்தர் வருகைக்குக் காரணமாயிருந்தது அந்நாளிற் சமணமென்று பெயர் பெற்றிருந்த திருவருள் நெறியில் சேர்ந்த மாறுபாடேயாகும்; ஆதிநாதராகிய விருஷபதேவர் கண்ட அருள்நெறி தோன்றியவாறே இயங்கியிருப்பின் திருஞான சம்பந்தர் வருகைக்கு இடம் நேர்ந்திராது" - என்றும், |
| ".....ஆதிஜைனத்திடைச் சிறப்பாகத் திகம்பர ஜைனம் என்றும் சுவேதாம்பர ஜைனம் என்றும் இரண்டு பிரிவுகள் தோன்றின. திகம்பரம் இயற்கையை வெறுப்பது; பெண்ணை இழிவாகக் கருதுவது; பெண் பிறவிக்கு வீடுபேறில்லை; ஆண்பிறவி தாங்கிய பின்னரே வீடுபேறு எய்தும்......இவை ஆதிஜைனத்துடன் மாறுபட்டவை; இதற்கு உடன்படாதார் சுவேதாம்பரர்கள்; .......திகம்பரர் இயற்கை நெறியினின்றும் வழுவினார்கள்; பெண்ணை இழிவாகக் கருதினார்கள்; பெண்ணை வெறுத்தல் பெருந்துறவு என்று கொண்டார்கள்; இவர்களால் இயற்கை நெறிக்கும் பெண்ணுலகுக்கும் பெருந்துன்பம் நேர்ந்தது.......இது இறைநெறிக்குக் கேடு நேர்வதாகும்; இயற்கை இறையின் போர்வை அதாவது உடல்; அவ்வியற்கையை வெறுத்துக் துறப்பது இறையை வெறுத்துத் துறப்பதாகும். "உலகினி லியற்கையை யொழிந்திட், டற்றவர்க் கற்ற சிவனுறை கின்ற வாலவா யாவது மிதுவே" (திருஞான சம்பந்தர்)" என்றும், |
| "இயற்கையை உற்று நோக்கினால் அது ஆண் பெண் மயமாயிருத்தல் விளங்கும் ......இயற்கை நெறிக்கும் பெண்ணுலகுக்கும் இழுக்கு நேரும் இடங்களில் அருள்நெறி செவ்விய முறையில் இயங்காது.....தென்னாட்டில் திகம்பரத்தால் இயற்கை நெறிக்கும் பெண்ணுலகுக்கும் இழிவு நேர்ந்தமையால் அவ்விழிவைப் போக்கவே திருஞான சம்பந்தர் தோன்றினார்; அவர் அருள்நெறியாகிய ஆதிஜைனத்தை அழிக்கப் போந்தா ரென்பது ஆராய்ச்சியில்லாதார் கூற்று" என்றும், "திருஞான சம்பந்தரது திருவிரும்பூளைப் பதிகத்தில் "சமண் சாக்கிய மாக்கிய வாறே" என்றதனால் சமண் சாக்கியம் ஆக்கியவன் சிவனே என்பது விளங்குகிறது; ........சமண் சாக்கியம் என்பன அருள்நெறிக்கு வழங்கப்படும் பல பெயர்களுள் சேர்ந்தவை. ஆகவே சிவனால் ஆக்கப்பட்ட சமன் சாக்கியம் ஒழிந்துபடத் திருஞானசம்பந்தர் முயல்வரோ?" என்றும் "....சிவஞானம் சமணத்துக்கும் சைவத்துக்கும் பொதுவானது. சமணமும் சிவநெறி; சைவமும் சிவநெறி. சிவநெறி என்னும் அருள்நெறி ஒவ்வொருபோது ஒவ்வொரு பெயர் பெறுவது வழக்கம்" என்றும், ..."சிவாஹொந்தி" (குந்தகுந்தோச்சாரியர் அக்ஷ்டபாகு |