[வம்பறாவரிவண்டுச் சருக்கம்] 28.திருஞானசம்பந்த நாயனார் புராணம் | 963 |
| ்டம்); "சிவசுகம" (பூபால ஸ்தோத்திரம்); "சிவகதியடையலாமே" (சிந்தாமணி); "சிவகதிநாயகன்" (சிலப்பதிகாரம்); "சிவகதியின் அமர்ந்திருந்தார்" (மேருமந்தர புராணம்);"மூவெயிலின் முரண்முருக்கி... நெருப்புமிழ் நெடுநோக்கினை..கொடுங்கூற்றைத் தாள்வலியின் விழ வுதைத்தனை; மூன்று கண்முனித் தலைவினை.....நின்னுள் ளேநீ யொடுக்கினை...நின்னின்று நீ விரித்தனை; ....ஆதி பகவனை அருகனை" (திருக்கலம்பகம்) என்ற சமண நூல்களுள் வருவன....என்றும் ..."இயற்கையானது ஆண்டவன் உடல்; ஆண்டவன் பெண்ணொடு கூடியுள்ள பெருந்தகை என்பது பொதுளவே திருஞான சம்பந்தர் திருப்பதிகங்கள் பாடியுள்ளார்...உலகில் பெண் ஆண் கூட்டுறவு என்னும் பேரறம், இயற்கை-இறையின் வழியது என்பது திருஞான சம்பந்தர் உள்ளக் கிடக்கை; ..."பொறியைம் புலத்தின் வேட்கைநோய் தீர்க்கும் மருந்து..."என்றும், இவ்வாறு வருவன பலவாம். | | இவற்றின் பொருத்தங்களைச் சிறிது ஆராய்வாம்:(1) திருஞானசம்பந்தர் என்பது மூலகுரு - இறைவர் - என்ற காரணப்பொருள்பட மயங்கி யறியவைத்தது பிழை; (2) பின்னர் அப்பெயர்ச்சொல்லையே ஆளுடைய பிள்ளையார் பெயராக வைத்துப் பேசியது மயங்கவைத்தலாம்; (3) அருள்நெறிக்கு மாசு படியும்போதெல்லாம் அதனைப் போக்கத் திருஞான சம்பந்தர் வருவர் அல்லது அவரைச் சூழ்ந்துள்ள குருமாருள் ஒருவரை அனுப்புவர் என்றது சைவசமய உண்மையாகிய சித்தாந்தத்திற்கு முற்றும் மாறாகிய பெரும் பிழை; (4) அருள்நெறிக்கு மாசு படியாது. அவ்வாறு மாசு படிதல் சைவத்துள் இல்லை; திருஞான சம்பந்தர் என்பது ஆதி குருவாகிய ஞான இறைவர் என்று கொண்டால் அவருக்கு நம்போல் உலகில்வரும் அவதாரநிலை பேசுதல் சைவ சமயக் கோட்பாட்டுக்கு முற்றும் மாறுபாடு; வைணவ மரபில் அவ்வாறு பேசுதல் அமையும், அவர்கள் கடவுள் அவதாரம் என்னும் பிறப்பில் வருதல் அவர்தம் மரபுக் கொள்கையிற் பேசப்படுதலால்; ஏனைப் புத்தம் - கிறித்துவ முதலிய சமயங்களிலும் அஃதொக்கும்; சைவத்திற்கேலாமை யுணந்துகொள்க; (5) திருஞான சம்பந்தர் என்ற பெயருக்கு உயிர்களைத் திருஞானத்துடன் சம்பந்தப்படுத்தும் ஒருவர் குரு எனப்பட்டுப் பெருங் குருவாவர் என்றது பிழை; இப்பெயர்ப்பொருளை ஆளுடைய பிள்ளையார் புராணம் விளக்குகின்றது. உலகத் தந்தை தாயர்கள் சிவஞானத்தை ஊட்ட உண்டருளியமையாலும், கலைஞான மெய்ஞ் ஞானங்களை முற்ற உணர்ந்தமையாலும் இப்பெயர் போந்ததென்பது; 1966 - 1967 பாட்டுக்கள் பார்கக. இதற்கு மாறாகப் பொருள் கொள்ளுதல் பிழையும் மரபு வழுவுமாம்; அவ்வாறு கொள்ளற்கு இலக்கமுமில்லை. "எப்பொரு ளெச்சொலி னெவ்வா றுயர்ந்தோர் செப்பின ரப்படிச் செப்புதல் மரபே" என்ப திலக்கணம்; (6) இறைவன் ஒருகாலத்து ஓரிடத் வருவோனல்லன் - எஞ்ஞான்றும் எவ்விடத்தும் ஒவ்வொரு கணமும் உடனின்று உலகினைத் திருத்தி உயிர்களை மாசறுக்கின்றான் என்பது உண்மைநூற் றுணிபாம்; (7) ஆண்டவன் ஒருவனே என்பதொக்கும்; ஆனால் அவனருள்நெறியும் ஒன்றே என்பது சாலாது; அஃது குழறுபடையானதொரு மயக்கம்; ஆண்டவன் ஒருவனேயாயினும் உயிர்கள் பல. அவை பலப்பல பக்குவமுடையன; ஏன்? ஓரோருயிரும் ஓரோர் திறமும் பக்குவமுமுடையதாம் என்னலாம். அவ்வுயிர்களின் திறமும் பக்குவமு நோக்கிப் பல திறப்படுவன இறைவனருளும் முறைகளும் நெறிகளுமாம்; அருணெறி முடிவில் வீடுபேறாகிய ஒன்றையே கருதினும் உபாயங்களும் சாதனங்களும் மிகப் பலவாம்; அருணெறி ஒன்றே என்றும், அஃது ஒவ்வொருபோது ஒவ்வொரு விதப் பெயர் பெறுமென்றும், அப்பெயர்கள் பல சமயங்களாக ஆராய்ச்சி யில்லாதவர்களால் கொள்ளப்படுகின்றன என்றும் இவ்வாறெல்லாம் பேசுதல் முழுக் குளறுபடையான மயக்கம். |
|
|
|
|