[வம்பறாவரிவண்டுச் சருக்கம்] 28.திருஞானசம்பந்த நாயனார் புராணம் | 965 |
| தாழ்த்தி ஒதுக்கிய இடமுமுண்டு. இவ்வுயர்வு தாழ்வுகள் அன்பினைப் பற்றி எழுந்த னவேயன்றிப் பிறவியினிலை பற்றி எழுந்தனவல்ல; பிள்ளையாரது சமண வாதத்துக்கும் பெண் இழிவோ உணர்வோ என்ற இதற்கும் சம்பந்தமில்லை; சைவத்திற்குச் சமணர் சூழ்ந்து செய்த கேடுகளைப் போக்கித் திருநீற்றை ஓங்க ஆக்கித் தாபித்தலே இவ்வாதங்களின் கருத்தாதல் காண்க; (10) சமணத்தை அழிக்கத் திருஞான சம்பந்தராவது, அரசுகளாவது வேறு எந்தச் சைவ ஆசாரியராவது முற்படவில்லை; சமணர் சைவத்துக்குச் செய்த சூழ்ச்சிகளையும் கேடுகளையும் ஒழித்துத் தற்காப்புமட்டிற் செய்தனர் என்க; (11) சமண்-சாக்கியம் முதலியவையும் இறைவனால் உயிர்களின் பக்குவ பேதம்பற்றி ஆக்கப்பட்டன; ஆதலின் அவற்றை அழிக்கப் பிள்ளையார் முற்படார் என்றனர்; பாம்பு-தேள்-புலி-தீ-முதலியவையும் இறைவரால் ஆக்கப்பட்டன என்ற காரணத்தால் அவற்றை எடுத்துக் குலவுவார் உண்டோ? அவற்றைக் காட்சிச்சாலையில் அவ்வவற்றளவில் வைத்து அமைவுபடுத்துதலே முறையாம். சமணம் இறைவனால் ஆக்கப்பட்டமையால் அதுவும் சைவமும் ஒன்றாகுமோ? பசுவும் பாம்பும் ஒக்க இறைவனால் படைக்கப்படினும் ஒன்றாகாதவாறு இவையும் கொள்ளப்படும்; (12) இவர்கள் சிவம் சிவகதி என்ற சத்தங்கள் சமண நூல்களுள் வருதல்காணப் பெருமுயற்சி செய்தெடுத்தனர்; இது பயனில் முயற்சி என்றொழிக. சிவம் - சிவகதி முதலியவற்றிற்கு அவர் கொள்ளும் பொருள் வேறு; சைவம் கொள்ளும் பொருள் வேறு. பொருளொற்றுமையின்றி வெறும் சொன்மாத்திரை கொண்டு மயங்குதல் முறையன்று; (13) வேத சிவாகமங்களிற் போற்றப்படும் சிவனையும் ஏனைக் கடவுளர் - சிறு தெய்வங்களையும் ஒன்றாகவைத் தெண்ணுதல் பெரும் பிழை; சைவத் தெய்வப் பரமாசாரியார்களை ஏனைச் சிறுசமயங்கள் - போலிச் சமயங்க-ளென்றிவற்றின் குருமார்களுடன் ஒன்றாக வைத்துப் பேசுதல் உய்தியில்லாத பெரும்பாவமும் சிவாபராதமுமாம்; "மூவரென்றேயெம் பிரானொடு மெண்ணிவிண் ணாண்டுமண்மேற், றேவரென் றேயிறு மாந்தென்ன பாவந் திரிதவரே"(திருவாசகம்); "சிவனோ டொக்குந் தெய்வந் தேடினு மில்லை, அவனோ டொப்பாரிங் கியாவரு மில்லை"(திருமந்திரம்); (14) சமயங்களைப் புறப்புறம் - புறம் - அகப்புறம் - அகம் என நால்வகையாக வகுத்து அவற்றுள் ஆருகதம் என்னும் சமணம் சீவன் முதலாகப் பதார்த்தங்கள் ஏழு கொள்வதென்றும், இவ்வெழுவகைப் பதார்த்தங்களும் உண்டாம் - இல்லையாம் - உண்டுமில்லையாம் என்பனமுதலாக எழுவகையால் கூறப்படும் அனேகாந்த வாதத்தைக் கொண்டதென்றும், வேத சிவா கமமாதி உண்மை நூற்களை உடம்படாது மாறுபடுவதென்றும், கண்ட நம் பெரியோர் அதுவும், அதுபோன்ற பிறவும் உயிர்களை உண்மை காணமாட்டாது மயக்காத வண்ணம் நியாயங் காட்டி மறுத்துப் பரபக்கம் கூறிச் சைவத்தின் உண்மையை நாட்டினர்; இது பற்றியே ஆசிரியரும் "தெளியா தொருபொருளே பொய்யுமெய்யு மாமென்னும் புரை நெறியார்" என்று இதன் கருத்தினை வடித்துக் கூறியருளினர்; இவற்றையெல்லாம் விட்டுச் சைவத்தோடொப்ப ஆதிசமணம் மாசற்ற அருணெறி யென்றும், பிறவாறும் மேற்கூறியபடி யெல்லாம் பிதற்றிப் போலிச் சமரசம் காண முயலும் உரையெல்லாம் பட்டப்பகலில் காக்கை வெளிதென்பது போன்ற வெளிற்றுரையேயாமென்று விடுக்க. | | முன் அரசுகள் புராணம் 1560-ல் கீழும், பிறாண்டும் உரைத்தனவும், இனியும் ஆண்டாண்டுரைப்பனவும் கண்டு கொள்க. | | இனி, முன்னர்ச் சுரந் தீர்த்ததற்கும், பின்னர் நீரில் வெல்வதற்கும் தனிப் பதிகங்களினால் அருள்மேற்கொண்டாங்குச் செய்யாது, இங்குத் திருமுறையினை மறித்தெடுத்து வந்த ஏட்டினைப் போற்றித் தீயில் இட்ட கருத்தென்னையோ? எனின்: |
|
|
|
|