| என்ற குறிப்பிற்கு விடையாகக் கூறிய குறிப்பும் காண்க; ஏடுஉற - உண்மைத் தன்மை ஏட்டினிற் பொருந்த |
| ஓடு நீர் - விரைந்து செல்லும் நீரினையுடைய. ஒழுகுதல் - நீர் செல்லும் வேகத்துடன் ஒன்றுபட்டு ஒழுகுதல்; பள்ளந்தா ழுறுபுனலினோடு கீழ்நோக்கிச் செல்லுதல்; ஒழுகுதல் செய்யாது - ஓடிவிடாது. |
| ஒழுகுதல் செய்யாது - முன் தங்கும் - அமணர்கள் காணக் கருதியது நீருடன் சென்று விடாது இட்ட இடத்திலேயே, நீரில் இட்ட கற்போலத், தங்கிவிடுமளவேயாம்; ஆயின் இனிப் பிள்ளையார், அவரும் உலகும் காண்வரக் காட்டிய அருட்பெருமையாவது இட்ட அங்குத் தங்குமளவன்றி மேல் எதிர்த்துச் செல்லும் தன்மையாம்; ஏடு அங்குத் தங்கும் அளவே உண்மை விளக்கமாக அதனைக் கேட்ட நாட்டுமக்களும் கருதினார் என்பதும் காண்க. "ஓடுநீ ருடன்செ லாதுநிற் குமோ வோலை என்பார்"(2705) என்று மறுகிற் கண்ட மாதர் மைந்தர் கூறுதல் காண்க. |
| நற்பொருள் பரிப்பது - நன்மையாவது அழிவுறாமையும் நிலைபெறுதலும் காட்டி நன்மை பயத்தல். பரித்தல் - தாங்குதல். |
| குறிப்பு:- முன்னர்த் தீயிற் செய்த வாதம் கீழ்நோக்குதலின்றி மேனோக்கியே எரியும் தீயில் உய்ந்திடில் அப்பொருளும் மேனோக்க முடையது என்ற கருத்து. இங்கு நீரில் மேற்கொண்ட வாதம் நீர், மேலிருந்து கீழ்ச்செல்லு மியல்புடையதாதலின் அதனுடன் செல்லாது நிற்கும் தன்மையால் அப்பொருள், மேல்நோக்க மில்லாவிடினும் கீழ்நோக்க மில்லாத அளவிலேனும் நிற்பதென்ற கருத்து; நோயை நீக்க இயலாது தோற்றபின்பு "தீயின் நீரில் வெல்வது என்று தம்மில் எண்ணி"ய அமணர் எண்ணிய இரண்டனுள் முதலில் தீயைப்பற்றி ஒட்டியதற்கு இதுவும் ஒரு குறிப்பாகும். |
| அங்கு - நாடி - முன் - தங்கும் - என்றவை அவ்வாறு நிற்றலின் அருமையும் செயற்கரிய தன்மையும் குறித்தன. |
| 796 |
2695 | என்றமண் கையர் கூற வேறுசீர்ப் புகலி வேந்தர் "நன்றது செய்வோ" மென்றங் கருள்செய, நணுக வந்து வென்றிவே லமைச்ச னார்தாம் "வேறினிச் செய்யு மிவ்வா தொன்றினுந் தோற்றார் செய்வ தொட்டியே செய்வ"தென்றார். | |
| 797 |
| (இ-ள்) என்று அமண்கையர் கூற - முன்கூறிய அவ்வாறு அமண்கையர்கள் சொல்ல; ஏறுசீர்....அருள்செய - மிக்கு ஏறுகின்ற சிறப்பையுடைய சீகாழித் தலைவர் "நன்று; அதன்படியே செய்வோம்" என்று அங்கு அருளிச்செய்ய; நணுகவந்து...என்றார் - வெற்றியுடைய வேலேந்திய அமைச்சனாராகிய குலச்சிறையார் தாம் பக்கத்தில் வந்து வேறு இனிச் செய்யப்புகும் இந்த வாதம் ஒன்றிலும் தோற்பவர்கள் அதன்மேற் செய்யவேண்டுவது இது என்று ஒட்டியே செய்தல் வேண்டும்" என்றார். |
| (வி-ரை) ஏறுநீர் - வேந்தர் என்க; முன்னர் இரண்டு முறையினும் வெற்றி பெற்ற சிறப்பு இனியும் இவ்வாதத்தின் வெற்றியாலும் மேல்ஏறி மிகுவதாகும் என்பது சிறப்பு. சீர் - வெற்றியின் சிறப்பு; ஏறும் - இனியும் மேன்மேல் மிகுவதாகும்; வேந்தர் - முன் "மன்னர்" (2693) என்பதற்கேற்ப அதனைத் தொடர்ந்து சொல்லிய ஈண்டும் கூறப்பட்டது காண்க. |
| நன்று அது செய்வோம் - நன்று - இசைவுகாட்டும் மொழி; அது - அதனையே - அதன்படியே; தேற்றேகாரம் தொக்கது. |