[வம்பறாவரிவண்டுச் சருக்கம்] 28.திருஞானசம்பந்த நாயனார் புராணம்975

  அருள் செய - அருள் காரணமாகக் கூற.
  அமைச்சனார்தாம் நணுக வந்து - என்றார் என்க; நணுக - "அகலா தணுகாது தீக்காய்வார்போல்க, விகல்வேந்தர்ச் சேர்ந்தொழுகு வார்"(குறள்) என்றபடி மன்னரை மிக அணுகாமலும் மிக அகலாமலும் நின்ற தூரத்தினின்றும் பக்கத்தில் வந்து; பிள்ளையார்பாலும் நெருங்காது தூரத்தில் நின்ற முறையினின்றும் அணுக வந்து என்றலுமாம்.
  நணுக வந்து - இவ்வாறு ஒட்டியே செய்வது - என்றார் - இவ்வாறு அமைச்சர் சொல்வதற்குரிய குறிப்பு முன் உரைக்கப்பட்டது. இவ்வாதத்திற்கும் அதன் முடிபினால் அமணர் சார்பினுக்கும் எல்லைகண்டு முடிக்கவேண்டுமென்பது அரசாங்க நிலையிற் றாம் மேற்கொண்ட கடமையினால் இவ்வாறு அமைச்சர் முன்வந்து கூறினார் என்க. இதற்கும் பிள்ளையாரது திருவுளப் பாங்காகிய சொற்செயல்களுக்கும் எவ்விதத் தொடர்புமில்லாமை கண்டுகொள்க; "வென்றீவேல் அமைச்சனார்தாம்" என்று அமைச்சுத் தன்மைபற்றிக் கூறியது மிக்கருத்து; "கோற்றொமில் திருத்தவல்ல குலச்சிறையார்"(2747) என்றும், "மருப்புடைக் கழுக்கோல் செய்தார் மந்திரியார் தாம்"(2704) என்றும் பின்னர்க் கூறும் கருத்தும் காண்க.
  வேறு.....செய்வது - வேறு - முன்வாதங்கள் முடிந்த நிலையின் அமையாது இது வேறாமென்று கருதி; ஒன்றினும் - "இனி ஒன்று காண்பது"(2692) என்று அமணர் கேட்டதில் வாது ஒன்று என்பதனை வற்புறுத்தியபடி; ஒன்றினும் - உம்மை, முன் இருமுறை தோற்றபடி இவ்வொன்றினும் என இறந்தது தழுவியது; தோற்றார் செய்வது - தோற்றவர் அதன்மேற் செய்வது; உட்படும் தண்டம்; ஒட்டி-(பந்தயம்) இகலிக் கூறி இசைந்து - ஒட்டுதல் - பணையம் வைத்தல்போல ஒன்றினை இசைதல்; ஒட்டியே - ஒட்டியன்றிச் செய்யத்தகாது என ஏனையதனை விலக்குதலின் பிரிநிலை; தேற்றமுமாம்.
  செய்வது - வாது செய்யக்கடவது.
 

797

2696
அங்கது கேட்டு நின்ற வமணரு மவர்மேற் சென்று
பொங்கிய வெகுளி கூறப் பொறாமைகா ரணமே யாகத்
தங்கள்வாய் சோர்ந்து தாமே "தனிவாதி லழிந்தோ மாகில்
வெங்கழு வேற்று வானிவ் வேந்தனே" என்று சொன்னார்.
 

798

  (இ-ள்) அங்கு...கூர - அங்கு அதனைக் கேட்டுநின்ற அமணர்களும் அவ்வமைச்சர்மேல் போயின பொங்கி எழுந்த சினம் மீக்கூர்தலால்; பொறாமை....சோர்ந்து - பொறாமை என்னும் தீக்குணம் மிக்க காரணத்தால் தங்களுடைய வாய் சோர்ந்ததனால்; தனி வாதில்....என்று - இவ்வொரு வாதத்திலும் தோற்றோமானால் இவ்வரசனே எங்களை வெவ்விய கழுவில் ஏற்றுவானாவன் என்று; தாமே சொன்னார் - தாமே சொன்னார்கள்.
 

798

  (வி-ரை) அவர்மேற் சென்று பொங்கிய வெகுளி - இவ்வாறு தமது சூழ்ச்சிகளுக்கு ஒரு முடிவான எல்லை வகுத்ததனை எண்ணி அவர்மேற் சினங் கொண்டார்கள்.
  பொறாமை காரணமேயாகத் தங்கள் வாய் சோர்ந்து - மேற்கூறும் வஞ்சினமாகிய ஒட்டுதலுக்குப் பொறாமையே காரணமாயிற்றன்றி, வேறெவரும் அவரை அவ்வாறு செலுத்தினாரிலர்; பொறாமை - சைவர்களது ஆக்கத்தைக் கண்டு பொறுக்கமாட்டாது அழுக்காறு படுதல்; "அழுக்கா றுடையார்க் கதுசாலும் ஒன்னார், வழுக்கியும் கேடீன்பது"; "அழுக்கா றெனவொரு பாவி திருச்செற்றுத், தீயுழி யுய்த்து விடும்"(குறள்)