| பற்றிய பொருளின் ஏடு - செயல் ஏட்டினிடமாகவும், முடிவு அதனைப் பற்றிய எழுத்தின் பொருள்மேலதாகவும் நின்றமையால் பற்றிய பொருளின் ஏடு என்றார். பற்றிய - தொடர்ச்சியாற் பொருந்திய; பொருள் எழுத்தையும், எழுத்து ஏட்டினையுமாகப் பற்றிய. |
| போதுவது - பெயர். போதும் செயல் இனிச் செய்யக்கடவது என்றதாம். |
| போதுக - என்பதும் பாடம். |
| 799 |
| 2698. (வி-ரை) முன்னம் இழிந்து போந்து - "இனி வேற்று வாதென்?" என அழைத்தமையாலும், "நன்றது செய்வோம்"(2695) என்று ஏற்றருளியமையாலும் பிள்ளையார் தாமே முன்னர் எழுந்து போந்தருளினர். |
| பைம்பொற் பீடம் - பிள்ளையாருக்காக மன்னன் இடுவித்த பீடம். "முழுமணியணிப் பொற்பீடம்"(2644); "தமனியப் பீடம்" (2650). |
| தெள்ளும் நீர்த்தாளம் - நீர் - நீர்மை; தெள்ளும் - நூல்வல்லோர் தெளிந்து மேற்கொள்ளும். பத்தி - வரிசை. |
| மா ஏறி - குதிரையின்மேல் ஏறி. |
| உள்ளவாறு - உண்மைநிலை இருக்கும் வழியினை; இரண்டனுருபு தொக்கது. |
| உணர்வு மால் ஏறி - உணர்வு - அறிவு; மால் ஏறி - மயக்கம் மிக்கு; பொருளல்லாததைப் பொருள் என்றும், வெற்றிப்பா டல்லாததனை வெற்றிப்பாடு என்றும் கொண்டமையும், தோல்வி வரும் குணங்குறிகளை அன்னவென் றறியாமையும் ஈண்டு மால் - (மயக்கம்) என்றார். உள்ளவா றறிகிலாதார் - என்றதுமிது. |
| மேல் ஏறிச் சென்றார் - மா ஏறிச் சென்றான் - மால் ஏறிச் சென்றார் - என மூவருக்கும் மூவகையான ஏற்றம் கூறியது அவ்வப் பொருட்குறிப்புப் பெற நின்ற சொல்லணி. |
| 800 |
2699 | தென்னவன் வெப்புத் தீர்ந்து செழுமணிக் கோயி னீங்கிப் பின்னுற வணைந்த போது பிள்ளையார் பெருகுஞ் செல்வம் மன்னிய மதுரை மூதூர் மறுகில்வந் தருளக் கண்டு துன்னிய மாதர் மைந்தர் தொழுதுவே றினைய சொன்னார். | |
| 801 |
| (இ-ள்) தென்னவன்...போது - பாண்டியன் வெப்பு நோய் நீங்கிச் செழிய அழகிய அரண்மனையினின்றும் புறப்பட்டுத் தமது பின்னே பொருந்த அணைந்தபோது; பிள்ளையார்....கண்டு - பெருகுகின்ற செல்வம் நிலையாக நிறைந்த மதுரையாகிய பழம்பதியின் வீதியில் பிள்ளையார் எழுந்தருளி வருதலைக் கண்டு; துன்னிய....சொன்னார் - வந்து நெருங்கிய மாதர்களும் மைந்தர்களும் வணங்கித் தத்தமக்குத் தோன்றியவாறே வெவ்வேறு விதம்பட இத்தன்மையான மொழிகளைச் சொல்லலாயினர். |
| (வி-ரை) செழுமணிக் கோவில் - அரசனுடைய அரண்மனை. |
| தென்னவன் - பின்னுற அணைந்தபோது - பிள்ளையார் வந்தருள - என்றது அரசன் பின்னும் பிள்ளையார் முன்னுமாகப் போந்த முறையும், அரசன் பின் அணைந்த பின்பு பிள்ளையார் வீதியில் புறப்பட்ட காலமுறையும் குறித்தபடி; பின்னுற - பின்பற்ற என்றதும் குறிப்பு. இவ்வாத முடிவில் பிள்ளையார் ஈந்தருளிய திருநீற்றினை முழுவதும் அணிந்து புனிதனாய் உய்ந்த வரலாறும் காண்க (2755 - 2756). |
| பெருகும் செல்வம் மன்னிய மதரை மூதூர் - அங்கயற் கண்ணம்மையாரது அருள் நோக்கமாகிய அரசசெல்வம் நிலைபெற்று நிறைந்த பழவூர். இத்தன்மை என்றும் |