| காண நண்ணுவர் - அவரது வெற்றியின் பின், இங்கு நாம் காணச் செல்லும் இவ்வமணர் ஒட்டியபடி மன்னவனால் முறை செய்யப்பெற்றுக் கழுவேற்றப்பட்டு ஒழிவர்: ஆதலின் அவர்கள் மீள இங்கு நண்ணுமாறில்லை; இவர் ஒருவரே நாடுகாண நண்ணுவர் என்ற குறிப்பும் காண்க. இருதிறத்தாருள் இவர் நண்ணுவர் என்றமையால் அவர் நண்ணாமை அருத்தாபத்தியளவையால்தானே போதருதல் காண்க. |
| நாடெலாங் காண - அவரையும் அவர் ஓலையின் நிறுத்திய வெற்றியையும் யாவரும் தேற்றமாய் உணரும்படி; " நீரால் விளக்கிட்டமை நீணா டறியுமன்றே" (தேவா) " நாட்டா ரறிய"(1898). |
| காணீர் - இன்னும் சிறிதுபோதில் நீங்கள் கண்ணாற் காணலாம் என்று உறுதி பட அவர் அறிந்துகொண்ட நிலை. |
| 807 |
2706 | "தோற்றவர் கழுவி லேறத் துணிவதே யருக?"ரென்பார்; "ஆற்றிய வருளின் மேன்மைப் பிள்ளையார்க் கழகி!"தென்பார்; "நீற்றினார் றென்னன் றீங்கு நீங்கிய வண்ணங் கண்டார் போற்றுவா ரெல்லாஞ் சைவ நெறியினைப் போற்று" மென்பார்; | |
| (இ-ள்) தோற்றவர்...அருகர் என்பார் - தோல்வியுற்றவர்கள் கழுவில் ஏற என்று அமணர்கள் துணியலாமா? என்று சொல்வார்கள்; ஆற்றிய... அழகிது என்பார் - செய்து காட்டிய அருளின் மேன்மையியனையுடைய பிள்ளையாருக்கு இஃது அழகேயாகும் என்று சொல்வார்கள்; நீற்றினால்... போற்றுவார் - திருநீற்றினாலே பாண்டியர் தீங்கினின்றும் நீங்கிய தன்மையைக் கண்டவர்கள் யாவரும் சைவத் திறத்தினைப் போற்றுவார்கள் (ஆதலால்); எல்லாம் சைவ நெறியினைப் போற்றும் என்பார் - எல்லாம் சைவ நெறியினையே போற்றுங்கள் என்று சொல்வார்கள்; |
| (வி-ரை) அருகர் "தோற்றவர் கழுவில் ஏற"த் துணிவதே என்க. ஏகாரம் வினா. துணிந்திருக்கக் கூடாது என்று எதிர்மறை குறித்தது. "தனிவாதில் அழிந்தோமாகில் கழுவேற்றுவான் வேந்தனே" (2696) என்று தோற்றவர் செய்வதனை ஒட்டியதனைக் குறித்து மாந்தர் இரங்கிக் கூறியது. தோற்றவர் - இவ்வா தொன்றினும் தோல்வியுறுபவர். முன்னமே தோல்வி யுற்றவரா யிருந்து அதனால் அறிவுறாமல் இவ்வாறு துணிவதோ? என்றலுமாம். |
| இப்பாட்டு இவ்வாதத்தின் முடிவாக அருகர் தோற்றுக் கழுவிலேற ஒட்டியதனையும், அதனையும் பிள்ளையார் ஏற்றுப் போந்தருளிய தனையும், அதன் முடிவில் மாந்தர் செய்தக்கதனையும் எண்ணிய மற்றும் பல மாந்தர்களின் கூற்றாக அமைந்தது. பலபல மாந்தர் பலபலவாறகாவும் எண்ணியவற்றுள் இது முடிந்தநிலை பற்றியதாதலின், தொடர்வின் முடிவில் கூறப்பட்ட அமைதி காண்க. |
| அருளின் ஆற்றிய மேன்மைப் பிள்ளையார்க்கு இஃது அழகு - என்க; அருளின் ஆற்றிய மேன்மை - இதுவரையும் செய்தருளிய செயல்கள் யாவும், இகல் - செற்றம் - முதலிய தீக்குணமொன்றும் பற்றாது, அருளினை மேற்கொண்டே செய்த மேம்பாடு; அமணர்கள் தமது திருமடத்தில் தீயினை நாடியிட்டபோதும் அவர்களை முனியாது அத்தீ, முறைவழுவிய அரசனிடம் பையவே சென்று ஆக என்று ஆசிபுரிந்து அவனை வினை அனுபவிக்கச் செய்து தீர்த்து ஆட்கொள்ளும் அருளும்,வாதிற் புகுமுன் அதனை அஞ்சித் திருவருட் குறிப்பினை ஒருமுறைக் கிருமுறையும் வினவியறிந்தபின்பே அரசவையுட் புகுந்த அருளும், ஆண்டும் அரசன் அமணர்க்கிடங்கொடாது மறுத்தகாலை சவையுட் புகுந்த அருளும், ஆண்டும் அரசன் அமணர்க் கிடங்கொடாது மறுத்தகாலை அவனைத் தடுத்து அவர்களுக்கு வாதத்திற்கு இடந் தந்தருளிய அருளும், பிறவும் |