| ஈண்டுக் கருதியே மாந்தர்கள் இவ்வாறு புகழ்ந்து அருளின் ஆற்றிய மேன்மை என்றனர். |
| பிள்ளையார்க்கு இஃது அழகு - என்றது அவ்வாறாயின், இங்குச் சமணர் தோற்பது நிச்சயமாதலறிந்தும் அவர்கள் கழுவேறநின்ற இவ்வாதத்தில் முற்படுவது அந்த அருளுடன் பொருன்துமோ? என்று வினயினார்க்கு அற்றன்று; இஃது அதற்கு மாறன்று; அழகேயாம் என்று விடுத்தவாறு; அமணர்களை இவ்வாதத்தின் இடையில் இடங்கொடாது மறுத்தல் அழகன்று; அது சைவவுன்மையினை முற்றும் காட்டாதாதலின் அரசனையும் இவ்வாதத்தில் இசைவித்தருளினர் பிள்ளையார்; கழுவேற ஒட்டி இசைந்தது அமணர் தாமே செய்துகொண்ட செயல்: பின்னர் அவ்வாறே அவர்களைக் கழுவேற்றி முறைசெய்வது அரசனது ஆணைச்செயல். இவ்விரண்டிலும் பிள்ளையார்க்குஎவ்விதத் தொடர்புமில்லை என்பனவாதி நியாயங்களை உட்கொண்டு இவ்வாறு அறிவுடை மாந்தர் இஃது இழுக்காவதன்றி அழகேயாம் என்று முடித்தனர். அழகு - அழகேயன்றிப் பிறிதில்லை என்று பிரிநிலை ஏகாரம் தொக்கது. |
| நீற்றினால் - போற்றுவார் - திருநீற்றின் உண்மைத் திறத்தினாலே அரசன் அமணர்களால் வந்த தீங்குகள் எல்லாவற்றினின்றும் நீங்கின உண்மையினைக் கண்டவர்கள் அவ்வண்ணங்களைப் பற்றி எடுத்துப் போற்றுவார்கள்; எல்லாம் என்பதனை முன் உரைத்தவாறன்றி ஈண்டுக் கூட்டி எல்லாத் தீங்கும் என்றும், எல்லா வண்ணமும் என்றும் உரைப்பினு மமையும்; கண்டார் - பிள்ளையாரது அருளின் மேன்மையும், இஃது அவர்க்கு இழுக்காதலன்றி அழகாமாறும் கண்டு போற்றுவர் என்பதும் குறிப்பு. |
| எல்லாம் சைவ நெறியினைப் போற்றும் - ஆதலால் எல்லா வகையாலும் முழு உண்மையும் உடைய சைவ நெறியினைப் போற்றுங்கள்; சைவநெறி - சைவநெறியின் வாய்மை; ஆதலால் என்பது சொல்லெச்சம்; எல்லாமுடைய சைவநெறி என்பது அந்நெறியிலடையப்படும் கடவுளாகிய சிவனது முழுமுதற்றன்மை. "இறைவனாவான்ஞான மெல்லா மெல்லா முதன்மையனுக் கிரகமெல்லா மியல்புடையா னியம்பு, மறைகளா கமங்களி னாலறிவெல் லாந்தோற்றும் மரபின்வழி வருவோர்க்கும் வாராதோர்க்கும், முறைமையி னாலின்பத் துன்பங்கொ டுத்தலாலே முதன்மையெலா மறிந்து முயங் கிரண்டு போகத், திறமதனால் வினையறுக்குஞ் செய்தியாலே சேருமனக் கிரகமெலாங் காணுதுநாஞ் சிவற்கே ". (சித்தி - 8-17) என்ற கருத்துக் காண்க. |
| கண்டாற் போற்றுவார் - என்பது இராமநாதச் செட்டியார் கண்ட பாடம். |
| 808 |
2707 | இன்னன விரண்டு பாலு மீண்டின ரெடுத்துச் சொல்ல, மின்னொளி மணிப்பொற் காம்பின் வெண்குடை மீது போதப் பன்மணிச் சிவிகை தன்மேற் பஞ்சவ னாட்டு ளோர்க்கு நன்னெறி காட்ட வந்தார் நான்மறை வாழ வந்தார். | |
| 809 |
| (இ-ள்) இன்னன... சொல்ல - இத்தகைய மொழிகனைப் பிள்ளையார் செல்லும் மறுகில் இருபக்கங்களிலும் நெருங்கிய மாந்தர்கள் எடுத்துச் சொல்ல; மின்னொளி..போத - மின்போன்ற ஒளியினையுடைய அழகிய பொற்காம்பினையுடைய வெண்குடை மேலே நிழற்ற; பன்மணிச் சிவிகைமீது - பல மணிகளையுடைய முத்துச்சிவிகையின் மேல் எழுந்தருளி; பஞ்சவன்... வந்தார் - பாண்டியனது நாட்டிலுள்ளவர்களுக்கு நன்னெறியினைக் காட்டும் பொருட்டு வந்தருளினர்; நான்கு மறைகளும் வாழும் பொருட்டு வந்தருளினார். |