[வம்பறாவரிவண்டுச் சருக்கம்] 28.திருஞானசம்பந்த நாயனார் புராணம்987

  (வி-ரை) இரண்டுபாலும் ஈண்டினர் - அத்தெருவின் இரு பக்கங்களிலும் நெருங்கிவந்த மாந்தர்; இரண்டுபாலும் - "துன்னிய மாதர் மைந்தர் "(2699) என்ற இருபாலாருமாக என்றலுமாம்.
  எடுத்துச் சொல்ல - நிகழ்ச்சியின் ஒவ்வோர் பகுதிகளைப்பற்றி முன் கூறியவாறு எடுத்துப் பேச.
  வெண்குடை - திருவரத்துறையீசர் அருளிய முத்துக்குடை. வெண்குடை அரச அடையாள அங்கங்களுள் ஒன்றாகும் குறிப்பும் ஈண்டுத் தருவது. சிவிகையும் அவரருளிய அக்குறிப்புத் தருவது.
  பஞ்சவன் நாட்டுளோர்க்கு நன்னெறி காட்ட வந்தார் - "கன்னிநாடு அமணர் தம்மாற் கட்டழிந்து" (2511); "நன்றியி னெ்றியி லழுந்திய நாடு"(2557) என்று வருவனவாற்றால் அரசனை யுய்விக்கும்வகையால் நாடுய்யச் செய்யப் பிள்ளையார் போந்தருளினர் என்பதாம்.
  சொல்ல - போத - வந்தார் - என்று வினைமுடிபு கொள்க.
  நான்மறை வாழ வந்தார் - மறைகள் வாழும் பொருட்டு வந்தவராகிய - அவதரித்தவராகிய - பிள்ளையார் என்க. வந்தார் - வந்தவர்; பெயர்; வினைமுற்றாகவே கொண்டும் பிள்ளையார் என்ற எழுவாய் வருவித்தும், காட்டவும் வந்தார்; அதனால் மறை வாழவும் வந்தார் என்றுரைப்பினு மமையும். "மிக்கதிரு விளக்கிட்டார் விழுத்தொண்டு விளக்கிட்டார்"(கலியர் புரா - 11) என்புழிப்போல.
  காட்ட - வாழ - காட்டும்பொருட்டு - வாழும்பொருட்டு என்க.
  இன்னன - முன் 2699-ல் "வேறு இனைய சொன்னார்" என்று தொடங்கி என்பார் என இருபத்தைந்து வகையான கருத்துகளை எடுத்துச் சொல்லவார்களாகி,இவ்வாறு கூற - என்று இந்த ஒன்பது பாட்டுக்களையும் தொடர்புபடுத்தி உரைத்துக் கொள்க.
 

809

2708
"தென்றமிழ் விளங்க வந்த திருக்கழு மலத்தோன் வந்தான்;
மன்றுளா ரளித்த ஞான வட்டில்வண் கையன் வந்தான்;
வென்றுல குய்ய மீள வைகையில் வெல்வான் வந்தான்';
என்றுபன் மணிச்சின் னங்க ளெண்டிசை நெருங்கி யேங்க,
 

810

2709
பன்மணி முரசஞ் சூழ்ந்த பல்லிய மியம்பப் பின்னே
தென்னவன் தேவி யாரு முடன்செலத், திரண்டு செல்லும்
புன்னெறி யமணர் வேறோர் புடைவரப் புகலி வேந்தர்
மன்னிய வைகை யாற்றின் கரைமிசை மருவ வந்தார்.
 

811

  2708. (இ-ள்) தென்தமிழ்...வந்தான் - அழகிய தமிழ் விளங்கும்படி வந்த திருக்கழுமலத்தோராகிய பிள்ளையார் எழுந்தருளினார்; மன்றுளார்... கையன் வந்தான். அம்பலவாணர் அளித்தருளிய சிவஞானப்பால் நிறைந்த பொற்கிண்ணத்தையுடைய வண்மை பொருந்திய திருக்கரத்தையுடைய பிள்ளையார் எழுந்தருளினார்; வென்று ... வெல்வான் வந்தான் - முன்னம் சுரவாதத்திலும் அனல்வாதத்திலும் வெல்பவராகிய பிள்ளையார் எழுந்தருளினர்; என்று... ஏங்க - என்று இவ்வாறு பல அழகிய முத்துச் சின்னங்கள் எட்டுத் திசைகளிலும் நெருங்கி ஒலிக்கவும்,
 

810