988திருத்தொண்டர் புராணம் [வம்பறாவரிவண்டுச் சருக்கம்]

  (இ-ள்) பன்மணி... இயம்ப - பல அழகிய முரசங்களுடன் இணைந்த பலவகை வாத்தியங்கள்முழங்க; பின்னே...உடன் செல - தமது பின்பு அரசனும் மாதேவி யாரும் சேர்ந்து வரவும்; திரண்டு...புடைவர - கூட்டமாகச் செல்லும் புன்மை நெறியில் நின்ற அமணர்கள் வேறு ஒரு பக்கத்தில் வரவும்; (இவ்வாறு) புகலி வேந்தர்...மருவ வந்தார் - சீகாழி வேந்தராகிய பிள்ளையார் நிலைபெற்ற வைகையாற்றின் கரையின்மேல் பொருந்தும்படி எழுந்தருளி வந்தார்.
 

811

  இந்த இரண்டு பாட்டுக்களும் தொடர்ந்து ஒருமுடிபு கொண்டன.
  2708. (வி-ரை) தென்தமிழ் விளங்க வந்த - தென் - அழகு; அழகாவது என்றும் அழியாத இளமையோடிருத்தலும், மாறாத அழகினைச் செய்யும் ஞானமயமாகிச் சிவனடிச் சார்பு தருதலும் ஆம். "தென்றமிழ் பயனா யுள்ள திருத்தொண்டத் தொகைமுன் பாட"(358); பிள்ளையார் இந்தச் சிவஞானத் தமிழ் பரவும்படியே அவதரித்தவராதல் "அசைவில்செழுந் தமிழ் வழக்கே யயல்வழக்கின் றுறைவெல்ல"(1922) என முதற்கண்ணே அருளப்பட்டது காண்க;"பிறவியெனும் பொல்லாப் பெருங்கடலை நீந்தத், துறவியெனுந் தோற்றோணி கண்டீர்.....சம்பந்தன், தன்மாலை ஞானத் தமிழ்"(ஆளு.பிள் - மும்மணிக்கோவை - 11.)
  அளித்த ஞான வட்டில் - அளித்த சிவஞானப் பாலைக்கொண்ட பொற்கிண்ணத்தை ஏந்திய: ஞானப் பாலினையுடைய வட்டிலை ஞானவட்டில் என்றார்.
  தமிழ் விளங்க - என்றும், ஞானவட்டில் வண்கை - என்றும் கூறியது தமிழின் மூலம் ஞானத்தைப் பரப்பி அஞ்ஞான இருளாகிய சமணத்தை வென்றார்; மேலும் வெல்வார் என்றபடி.
  வென்று - மீள வெல்வான் வந்தான் என்று அடுத்து எடுத்துக் கூறியபடி.
  வென்று...வெல்வான் வந்தான் - முன்னே வென்றுவிட்டதனோடு மீளவும் வெல்வார் என்று சின்னங்கள் பின்வரும் வெற்றியை விளம்பின; வெல்வான் - வெல்லும்பொருட்டு என்றலுமாம்.
  உலகுய்ய என்பதனை உலகுய்ய வென்று என்றும், உலகுய்ய வெல்வான் என்றும் ஈரிடத்தும் கூட்டுக. உலகுய்ய - வந்தான் என்று கூட்டி உரைத்தலுமாம்.
  பன்மணிச் சின்னங்கள் - அரத்துறைநாத ரருளிய முத்துச் சின்னம் - தாரை - காளம்.இவையும் அரசாங்க அடையளம். சிவனருளிய சிவிகையும் குடையும் சின்னமும் என்ற மூன்றும் உரியபடி இங்குத் தொழிற்பட்டதனை முறையே கூறியது காண்க.
  ஏங்குதல் - மிக்க ஓசைபட எடுத்தியம்புதல்; மரபு வழக்கு.
  ஏங்க - உடன்செல - புடைவர - வந்தார் - என வரும் பாட்டுடன் முடிக்க.
 

810

  2709. (வி-ரை) பன்மணி ழரசம் சூழ்ந்த பல்லிய மியம்ப - இவை அரசன் வரும் வீதி எழுச்சியைக் குறிக்க முழங்கி வரும் அரசனது வாத்தியங்கள்; முன்கூறிய சின்னங்களினின்றும் வேறு பிரித்து அரசனையும் மாதேவியாரையும் சார முன்வைத்தோதியதும் இவை இயம்பப் பின்னே தென்னனும் தேவியாரும் வர என்றதும் இக்கருத்து.
  பின்னே - பிள்ளையார் பின்பு; பணிகின்ற நிலையிற் பின்பற்றி என்ற குறிப்புமாம். வீதியில் ஒரு பக்கத்தில் பிள்ளையாரும் பரிசனங்களும் அரசனும் மாதேவி யாருமாகவும், மற்றொரு பக்கத்தில் வேறு கூட்டமாய் அமணருமாகவும் போந்தனர்.