[வம்பறாவரிவண்டுச் சருக்கம்] 28.திருஞானசம்பந்த நாயனார் புராணம்989

  தென்னனும் தேவியாரும் உடன் செல - இருவரும் ஒருங்கு வர; அரண்மனையில் அரசனது நோய் நீங்கிய அளவும் மாதேவியாரும் மந்திரியாரும் அரசனது நேர் உடன்பாடின்றித் தாமே முற்பட்டு நின்று காரியஞ் செய்யவேண்டியதாயிற்று. அதன் மேல் நிகழ்ந்த அனல்வாதமும், இனி நடக்கவுள்ள புனல்வாதமும் அரசன் அவையினர் முன் டைபெற்று அரசனது நேர் அராசகாரியமாயின. இவற்றுள் மாதேவியார் உடனிருத்தல் வேண்டப்படுவ தின்றாயினும்,முன்னர் அரண்மனையில் அவையின் முன் அனல்வாதத்தில் உடனிருந்தமையும், ஈண்டு வைகைக் கரைக்கு உடன் வந்தமையும், அரச காரியங்கள் அரசனும் அரசியாரும் உடனிருந்து இயற்றும் முன்னைநாள் அரசாங்க வழக்கின் மரபு குறித்தது. இது முன்னைநாளின் கல்வெட்டுக்கள் பலவற்றாலும் அறியத் தக்கது. அவ்வாறு அரச காரியங்களில் உடனிருப்பவும் அரச காரியங்களி்ல் இருவரும் உடன் இல்லாது வேறாய் நின்றமையால், இங்கு அதனிலும் இருவரும் உடனிருந்து செல்லுதலை விதங்து கூறினார், உடன் - உடனாக; இணைந்து; ஒருசேர.
  திரண்டு செல்லும் புன்னெறி யமணர் - அமணருள் அரசனவையில் நின்ற சிலரேயன்றிர் புறத்து நின்ற ஏனையோரும் திரண்டு எண்ணாயிரவர்களாகக் கூடியவர்கள் என்க.
  வெறோர் புடை வர - வீதியல் பிள்ளையாருடன் பின்வரும் சைவத் திருக்கூட்டத்துடன்சேரகில்லாது வேறு ஒரு பக்கமாக அமணர் வர; அவ்வாறு சார்ந்துய்யும் விதியில்லாமையால் வேறோர் புடை வந்தனர்.
  மன்னிய - புகழாலும் சிவச்சார்பு பெற்ற புண்ணியத்தாலும் நிலைபெற்ற; மீனாட்சியம்மையார் திருமணத்தில் குண்டோதரனுக்காக இறைவரது ஆணைப்படிக் கங்கையே வைகையாறாக வந்தது என்பது திருவிளையாடற் புராணத்தா லறியலாம,இதன் கரையில் இறைவர் மண்சுமந்த திருவிளையாடல் நிகழ்ந்தது. "அணியார் வைகைத் திருக்கோட்டி னின்றதோர் திறமுந் தோன்றும்"(தாண் - பூவணம்) என்று இதனைத் தமிழ்மறையும் போற்றியது.
  கரைமிசை மருவ - கரையின் மேலே பொருந்தும்படி; மிசை மருவ - என்பது (ஓலை) மேற்சென்று போருந்த என்ற குறிப்பும்படி நின்றது.
 

811

2710
கார்கெழு பருவம் வாய்ப்பக் காமுறு மகளி ருள்ளஞ்
சீர்கெழு கணவன் றன்பால் விரைவுறச் செல்லு மாபோல்
நீர்கெழு பௌவ நோக்கி நிரைதிரை யிரைத்துச் செல்லும்
பார்கெழு புகழின் மிக்க பண்புடை வைகை யாறு.
 

812

  (இ-ள்) கார்கெழு... செல்லுமாபோல் - கார்காலம் வந்தபோது விருப்பம் மிக்க மகளிரது மனம் சிறப்புடைய தமது கணவனிடம் விரைந்து செல்லுமாபோல; பார்கெழு...ஆறு - உலகில் புகழினான் மிக்க பண்புடைய வைகையாறு; நீர்கெழு...செல்லும் - நீர் மிக்க கடலை நோக்கி வரிசையாகிய அலைகளினால் ஆரவாரித்துச் செல்லும்
  -----------------------------------------
  * (பகுதிபக்கம் 133-மனுச் சரிதங் கண்ட கல்வெட்டு. வரிகள் 10- 11. "திரிபுவன முழு துடையா ளிவன்திரு வுளத்தருள் முழுதுடையாளென உடனிருப்பச் செம்பொன் வீரசிம்மாசனத்து" என வருதலும், பிறவும் காண்க,