2714 | காணவு மெய்தா வண்ணங் கடலின்மேற் செல்லு மேடு நாணிலா வமணர் தம்மை நட்டாற்றில் விட்டுப் போகச் சேணிடைச் சென்று நின்றார்; சிதறினார்; திகைத்தார்; மன்னன் ஆணையின் வழுவ மாட்டா தஞ்சுவா ரணைய மீண்டார். | |
| 816 |
| (இ-ள்) காணவும்... ஏடு - காண்பதற்கும் கிடைக்காதபடி கடலின் முகமாக நோக்கிச் செல்லும் அந்த ஏடு; நாணிலா...போக - நாணம் இல்லாத அமணர்களை நட்டாற்றிலே கைவிட்டு அகன்று போயிற்றாக: கேணிடை.. மீண்டார் - (அவ்வமணர்) தூரத்தே சென்றார்களும், பலவாறும் சிதறுண்டார்களும், திகைப்படைந்தவர்களும் ஆகி, அரசனது ஆணையில் தப்பமாட்டாது அஞ்சுவாராய் அவன் பக்கத்தில் மீண்டுவந்து சேர்ந்தார்கள். |
| (வி-ரை) காணவும் எய்தாவண்ணம் - எதிர்சென்று அணைப்பார்போலக் கரையின்மேல ஓடிய அமணருக்கு அவர்கள் கையில் அணைக்கக் கிட்டாததோடு, காணவும் என்று உம்மை இறந்தது தழுவிய எச்சவும்மை. |
| கடலின் மேல் - கடலினை நோக்கி அதன் முகமாக. கடல் உள்ள திக்கு மட்டும் குறித்தது. |
| நாணிலா அமணர் - "தோற்கவும் ஆசை நீங்கா"(2693); "அவாவினால்"(2712) என்ற கருத்துக்களைத் தொடர்ந்து முடித்தவாறு; மும்முறையும் தோல்வியே பெற்று முடிந்தனர்; தந்நெஞ் சறியவே பொய்யும் வஞ்சமும் செய்ததனோடு ஒருமுறை தோல்வியுற்றமையால் அறிவு பெற்று நலம் தேடிக்கொள்ளாது மீளமீளத் தோற்று மானமுமிழந்தனர் என்றவை குறிப்பு. |
| நட்டாற்றில் விட்டுப் போக - "நம்பினோரை நட்டாற்றில் விடுதல்" என்பது பொய்யாகிய கீழோராந் தன்மை குறிக்கும் பழமொழி. அதுபோல இவர்கள் நம்பிய பொய்ப்பொருள் பொதிந்த ஏடு, நம்பும் உண்மைப் பொருளின்மையால் நடு ஆற்றிலே விட்டு ஓடிவிட்டது; பழமொழியில் உருவகத்தால் வந்த நட்டாறு என்பது - (நடு ஆறு) இங்கு உண்மை - உருவகம் இரண்டு பொருளிலும் பொருந்தியது என்று நகைச்சுவைபடக் கூறியது காண்க. நட்டாறு - நடுஆறு என்பது நட்டாறு என வந்தது புறனடையாற்கொள்க. ஆறுநடு என்பதாம். உண்மையில் ஆற்றின் நடுவில் அமணரை அவர் நம்பிய ஏடு கைவிட்டுச் சென்றது என்பதாம். |
| சேணிடை...திகைத்தார் - சேணிற்றல் - சிதறுதல் - திகைத்தல் - மிக நம்பி எதிர்பார்த்த நிலைக்கு முற்றும் மாறாய்ச் சடுதியில் நேர்ந்த பெருந்துன்பந் தரும் ஏமாற்றத்தால் வரும் நிகழ்ச்சிகள்: இதன் விளைவா அவர்கள் ஒட்டியபடி அரசாணை தம்மைக் கழுவேற்றி அழிக்கும் என்ற எண்ணத்தால் இவை நிகழ்ந்தன: மேற்பாட்டில் "வெருவுற்று நடுங்கித் தம்பால் ஈறுவந் தெய்திற் றென்றே" (2714) என்பதனால் இவை, ஏடு கைவிட்டதனாலன்றி, அதன் விளைவுபற்றிய எண்ணத்தாலாயின என்க. |
| சேணிடை-சென்று நின்றார் - பெருந்தீங்கு விளையுமிடத்தினின்று நீங்கி நிற்பார் போல என்பது. |
| சிதறுதல் - தொடர்பின்றிப் பல பக்கமும் சிதறுண்டு ஓடுதல். திகைத்தல் ஒன்றும் தோன்றாது மனந்தடுமாறி நிற்றல். நின்றார் முதலிய மூன்றும் முற்றெச்சங்கள். அஞ்சுவார் - அச்சத்துடன் - அஞ்சுவராய். |
| அணைய - நீருடன் சென்ற ஏட்டினை அணைப்பார்போன்று கரைமிசை ஓடிய தூரத்தினின்று மன்னவனிருந்த இடத்தினை அணைய; சார - இனி அவன் செய்யும் |