| ஆணையினையும், அதன்படி கழுத்தறி நிரையினையும், கழுவேறியபின் வரும் அவ்வவ் வினைப் போக நுகர்ச்சிகளையும் முறையில் அணைய என்ற குறிப்புமாம். |
| மீண்டார் - தமது துன்முயற்சிகளினின்றும் இப்பிறவியில் மீட்சி பெற்றனர் : அவற்றை இனிச் செய்யமாட்டாராய் மீண்டனர் என்பதும் குறிப்பு. ஆணையின் - இன் நீக்கப்பொருளில் வந்த ஐந்தனுருபு. ஆணையினால் என்று மூன்றனுருபாகக்கொண்டு அரசனது ஆணை தம்மை விடாது பற்றும் என்ற காரணத்தால் சேண்சென்று விடாமலும் சிதறி ஓடாமலும் அணைய என்றலுமாம். |
| ஆணையும் வழுவமாட்டா தஞ்சுவாரடைய - என்பதும் பாடம். |
| 816 |
2715 | வேறொரு செயலி லாதார் வெருவுற்று நடுங்கித் தம்பால் ஈறுவந் தெய்திற் றென்றே மன்னவ னெதிர்வந் தெய்தி, ஊறுடை நெஞ்சி லச்சம் வெளிப்பட வொளிப்பார் போன்று "மாறுகொண் டவரு மிட்டால் வந்தது காணு" மென்றார். | |
| 817 |
| (இ-ள்) வேறொரு...நடுங்கி - வேறு செயல் ஒன்றும் இல்லாதவர் களாகிய அமணர்கள் வெருக்கொண்டு நடுங்கி; தம்பால்...எய்தி - தமக்கு முடிவு வந்துவிட்டதென்றே துணிந்து அரசன் முன்பு வந்து சேர்ந்து; ஊறு உடை...போன்று - புண்பட்ட தமது நெஞ்சில் பயம் வெளிப்பட்டு வர அதனை மறைப்பார்போல; மாறு... என்றார் - "மாறுகொண்ட பிள்ளையாரும் ஏட்டினை இட்டால் அதன் பின்னை வரும் முடிவினைக் காணுங்கள்" என்று சொன்னார்கள். |
| (வி-ரை) வேறொரு செயல் இலாதார் - வேறு செயல் ஒன்றும் என்க; செயல் - செயத்தக்கது; செய்யக்கூடியது. முற்றும்மை தொக்கது. |
| வெருவுற்று - வெருவுதல் - சடுதியில் வரும் அபாயத் தோற்றத்தால் வரும் மன நிகழ்ச்சி. "வெருக்கொண்டாற் போலழுவர் குறிப்பயலாய்" (1952). |
| என்றே - ஏகாரம் தேற்றம். எனவே துணிந்து. |
| தம்பால் ஈறுவந்து எய்திற்று - தம்பால் - நான்கனுருபின் பொருளில் வந்தது; தமக்கு. ஈறு - முடிவுகாலம்; சாங்காலம். |
| ஊறு உடை நெஞ்சில் அச்சம் வெளிப்பட - ஊறு - மூன்று முறையும் தோல்வியும், வாய் சோர்ந்து கழுவிலேற ஒட்டிய நிலையும், பற்றிய எண்ணம்; உடை - உடைய - ஈறு கெட்ட பெயரெச்சம்; ஈறு வரும் என்ற எண்ணத்தால் நெஞ்சம் கெட்டதனால் இங்கு பெயரெச்சமும் ஈறு கெட்டது. ஊறு உடை - ஈறு வரும் என்ற எண்ணத்தால் - ஊற்றினால் - உடைந்த என்றலுமாம். |
| ஒளிப்பார் போன்று - என்றார் - நெஞ்சினின்றும் வெளியே அச்சக்குறி காட்ட அதனை மறைப்பவர்போல் "மாறு...காணும்" என்றார். ஒளித்தலாவது தமக்கு வரும் முடிவுபற்றிய எண்ணத்தையும் அதன் விளைவாகிய மெய்ப்பாடுகளையும் புறத்தில் தோற்றாமல் இம்மொழிகளால் மறைத்தல்; இம்மொழிகளால் இன்னும் வாதம் முடியாதது போலவும் அதனால் முடிவு நிச்சயமில்லாததுபோலவும் பேசுதல். |
| மாறு...வந்தது காணும் - மாறுகொள்ளுதல் - தங்களை எதிர்த்து நிற்றல். இட்டால் வந்தது காணும் - அவரும் ஏட்டினை நீரில் இட்டால் அதுவும் ஒருவேளை ஒட்டியபடி அங்கு நில்லாது நீரினோடு சென்றுவிடுமாகில் தோல்வி யிருபுறமுமாகு மாதலின் அதன் பின்பே நாங்கள் தோற்றமை நிச்சயிக்கவேண்டும் என்பது குறிப்பு. இதனால் தமது தோல்வியும் அழிவும் நிச்சயம் என்று மனத்துள் துணிந்துகொண்ட நிலையினையும், |