| அவரை விட்டு - "அறிவிலாப் பிணங்களைநா மிணங்கிற் பிறப்பினொடு மிறப்பினொடும் பிணங்கிடுவர்; விடுநீ" (சித்தி-12-2); இதனோடு அமணரின் சார்பும் தொடர்பும் அறவே நீக்கப்படுதலின் முடிவாக இங்கு அவரை விட்டு என்றார். |
| தேசு உடைப் பிள்ளையார் - தேசு - சிவஞானப் பேரொளி; "பேருணர்விற் பொலிகின்ற பிள்ளையார்" (2669); தேசு - திருநீற்றினொளியுமாம். |
| மாசுசேர் அமணர் - ஆசிலா நெறி - தேசுடைப் பிள்ளையார் - புறச்சமயத் தீமையும், அதனைப் போக்கும் சாதனமாகிய நெறியும், அதனை விளைத்துத்தரும் ஆசாரியரும், அவர்க்கு உள்ளே துணைநின்று அருளும் சிவனருளும் கூறப்பட்ட நயம் காண்க. இவ்வாறு இங்குக் கூறியது இனி அரசன் ஞானேபதேசம் பெறும் பக்குவமுடயனாதல் குறிக்க என்க. மேல்வரும் இரண்டு பாட்டுக்களாலும் இக்கருத்தினை ஆசிரியர் விளக்குதல் காண்க. |
| திருக்குறிப்பு - திருவுள்ளக் குறிப்பு. நோக்குதல் - அதனை இன்னதென்றறியும் கருத்து விளங்க அவரைப் பார்த்தல். |
| திருக்குறிப்பினை நோக்குதல் - "பிள்ளையாரும் அருகர்நீரும் விதித்தஏடு இடுக " (2711) என்று முன்னரே ஆணை தந்த அரசன் ஈண்டுப் பிள்ளையாரது திருக்குறிப்பினை நோக்கியதென்னையோ? எனின், முன்னர் "ஏடு இடுக" என்று ஆணை தந்தது இரு திறமும் ஒட்டி இசைந்த வாதத்தினை அவர் இசைந்தவாறே நிகழ்த்துவிக்கும் அரசன் என்ற முறையில் அரசன் என்ற நிலையில் நின்று செய்த செயல்; ஈண்டு அவ்வாதத்தினுள் அமணர் முந்திக்கொண்டு தமது தோல்வியை நிச்சயப்படுத்திவிட்டார் ஆதலான் அதன்மேல் பிள்ளையார் செயல் வேண்டப்படாமலே வாதத்தின் முடிவு கூறலாகும் என்ற நிலையினை அரசன் உளங்கொண்டனன்; ஆனால் "மாறுகொண் டவரு மிட்டால் வந்தது காணும்" (2724) என்று அமணர் கேட்டதனால் தனக்கு வேண்டாவிடினும் நடுநிலை நின்று அச்செயலிற் பிள்ளையாரது திருவுள்ளக் குறிப்பினைத் தெரிய வேண்டினன் அரசன். அற்றாயின் ஏடு நீரும் இடுக என்று கூறி விடாமல் நோக்கியறிய முற்பட்டது யாது கருத்து எனின்? தீய அமணர் சார்பு விட்டுப் பரிபக்குவமடைந்தமாணவகன் என்ற நிலையினை அடைந்தமையால் ஆசாரியரது திருக்குறிப்பினை எதிர்நோக்கி விண்ணப்பித்தபடி என்க. இது "முன்னைவல் வினையுநீங்கி முதல்வனை யறியும் தன்மை துன்னினான் வினைக ளொத்துத் துலையென நிற்ற லாலே"(2717) என அரசனது நிலையினை யிருவினை ஒப்பும் மலபரிபாகமும் வந்த தன்மைபற்றி ஆசிரியர் அறிவிப்பது காண்க; அது பற்றியே அவனுக்குப் பிள்ளையார் ஞானோபதேசம் செய்தமையும் உணரப்படும். |
| பாசுரம் - திருப்பதிகம்; "வாழ்க அந்தணர்" என்ற பதிகத்திற்குச் சிறப்புப் பெயர். |
| பரசமயங்கள் பாற - பாறுதல் - அழிதல்; இங்கு அழிதல் என்றது பரசமயங்களின் தீமைகளும் மயக்கமும் ஒழிந்து மறுக்கப்படுதலேயன்றிச் சமயங்கள் அழிதல் என்பதன்று. இது முன்னரும் விளக்கப்பட்டது; மேலும் உரைக்கப்படும். 2718 முதல் 2741 வரை வரும் பாட்டுக்கள் காண்க. |
| பரசமயங்கள் என்று பொதுவாகக் கூறியதனால் புறப்புறம், புறம், அகப்புறம் என்ற முக்கூற்று அறுவகைச் சமயங்களின் நிலைகளும் குறிக்கப்பட்டன. "ஆறுவகைச் சமயத்தி னருந்தவரும் புக்கதற்பின்" எனப் பின்னர்க் கூறுதலின் அகச் சமயத்தார் தழீஇக்கொள்ளதற்குரியார் என்க. சமணத்தை முன்னரே சுரவாதம் - கனல்வாதம் - புனல்வாதம் என்ற மூன்றானும் வெற்றிகொண்டு சைவமேன்மை நாட்டினார்; ஆயின் அற்றைநாட் சமணத்தின் பொய்மை அற்புதச் செயல்கள்பற்றி நெருப்பினும் நீரினும் கொண்ட வெற்றியின்மூலம் காட்டப்பட்டதன்றி,அதன் கொள்கைகளின் கீழ்மைகள் |