[வம்பறாவரிவண்டுச் சருக்கம்] 28.திருஞானசம்பந்த நாயனார் புராணம்1001

  (வி-ரை) தீண்டிப் பூசப் பெற்று - திருக்கையாற் றீண்டிப் பூசும் பேறு பெற்றதனால்; "திருக்கையாற் றடவ" (2663); இது பரிசதீக்கை என்ற குறிப்புப் பெறத் தீண்டி என்றெடுத்துக் கூறினார். பெற்றுத் - துன்னினான் - என்று முடிக்க. பெற்று - பெற்றதனால்; வினையெச்சம் காரணப்பொருளில் வந்தது.
  தானும் - உம்மை உயர்வு சிறப்பு.
  திருநீறு பூசப்பெற்று - "நீறு - ஈந்தார்" (2755) எனப் பின்னர்க் கூறுவதனுடன் இதனை ஒப்புநோக்குக. அஃது தீக்கை முடிவில் பாதபங்கயமும் சூட்டியருளும் நிலை. முன்னர்த் திருக்கையாற் றிருநீறு பூசியது தீக்கைக்கு உரியனாக்கும் நிலை.
  முன்னை வல்வினையும் நீங்கி - முன்னை - வினை - "முன்செய்த தீவினைப் பயத்தினாலே" (2498) என்றதும் ஆண்டுரைத்தவையும் பார்க்க.இது முன்னுடம்பால் ஈட்டப்பட்டுப் புத்திதத்துவம் பற்றுக்கோடாக நின்று அனுபவத்துக்கு முகந்து கொண்ட பிராரத்த வினை. வல்வினை என்றது எதிர்விலக்கலாகாத வலிமையுடைமை பற்றி: விலக்கலாகா மையாவது சைவச் சார்பிற் பிறந்தும், அம்மையார் அமைச்சனார் முதலிய அன்பானிறைந்த சைவச்சார்பு படைத்தும், "பாண்டி நாடே பழம்பதி யாகவும்" (திருவா) என்று போற்றப்படும் சைவப் பாண்டிநாட்டின் அரசாட்டிசியின் உரிமை பெற்றும் மதிமயங்கிச் சமண்சார்பு பற்றி ஒழுகியதன்றி சைவத்திற்குக் கேடு சூழவும் துணைநிற்கச் செய்த வலிமை.
  வினைகள் ஒத்துத் துலை என நிற்றலாலே - முதல்வனை அறியுந் தன்மை துன்னினான் - என்று கூட்டுக. துலை என - துலை - தராசின் இரு தட்டினும் இடும் ஒத்த அரு பொருள்களுக்கு வந்தது; ஆகுபெயர். ஏனைப் பொருள் ஒன்றுமிடாத துலைத் தட்டுகள் எனினுமொக்கும்; வினைகள் - நல்வினை தீவினையாகிய இரண்டும். வினைகள் ஒத்தல் - இருவினையொப்பு எனப்படும். அஃதாவது நல்வினைப் பயனாகிய இன்பம் வருங்கால் அவ்வின்பத்து ளழுந்திவிடாமலும், தீவினைப் பயனாகிய துன்பம் வருங்கால் அத்துன்பத்துளழுந்திவிடாமலும் இரண்டனையும் ஒன்றுபோலவே இறைவனதாணையால் வந்தன என்று எண்ணி நுகரும் உயிரறிவன் பக்குவநிலை; "அடுக்கி வரினுமழிவீலான்" "இடுக்கண் வருங்கா னகுக" "இன்பத்து ளின்பம் விழையாதான்" என்று பொய்யாமொழியார் உலகநிலையின் வைத்துக கூறிய தன்மைகள் வேறு; இங்குக் கூறிய பக்குவநிலை வேறு. முன்னவை உலகில் துன்பங்கள் வந்துழி அவற்றாற் சோர்வுற்று மனமழிந்துவிடாதபடி மக்கள் மேற்கொள்ளும் முயற்சியாகிய சாதனங்கள்; இங்குக் குறித்தது வினைவயத்தானும் திருவருளாலும் உயிர் அடையும் பரி பக்குவ நிலை. "உணக்கிலாததோர் வித்து மேல்விளை யாமலென் வினையொத்தபின், கணக்கி லாத்திருக கோல நீவந்து காட்டி னாய்கழுக் குன்றிலே" (திருவா) என்ற கருத்து.
  முன்னை வல்வினையும் நீங்கி - என்றும், வினைகளொத்துத் துலை என நிற்றல் - என்றும், முதல்வனை யறியும் தன்மை - என்றும் கூறியவை மூன்று நிலைகள். இவை முறையே சத்திநிபாதம் என்றும், இருவினையொப்பு என்றும், மலபரிபாகத்தின் விளைவு என்றும் ஞானசாத்திரங்களுட் கூறப்படும். முன்னை வல்வினை என்றது சமண்புக்கிருந்தபோது செய்துகொண்ட தீவினை என்றலும் பொருந்தும். வல்வினை என்றது சரித நிகழ்ச்சிக் குறிப்பு. சத்திநிபாதம் என்பதுபற்றி மாதவச் சிவஞான முனிவர் மாபாடியத்துட் கூறுமாறு காண்க (8-1): "பக்குவமாதற் பொருட்டு மலத்திற்கு அனுகூலமாய் நின்று நடாத்திய திரோதானசத்தி, மலம் பரிபாகமெய்திய வழி, அக்கருணை மறமாகிய செய்கை மாறிக் கருணையெனப்படும் முன்னைப் பராசத்தி ரூபமேயாய் ஆன்மாக்கள்மாட்டுப் பதிதலாகிய சத்திநிபாதமும், சோபானமுறையான் மந்ததரம்,