[வம்பறாவரிவண்டுச் சருக்கம்] 28.திருஞானசம்பந்த நாயனார் புராணம் | 1003 |
| விஞ்ஞானாகலராவாரன்றி முத்தியெய்துதல் கூடாமையானும் இவ்வாறு பௌட்கரத்துளெடுத்தோதி அவிவிரண்டனையும் மறுத்தலானும், ஈண்டோதிய இருவினையொப்புக்கு அவை பொருளல்லவென்றொழிக." | | "இனி இவ்வாறாக; வேறு பொருள்படுதற் கேலாமையானும், சிவப்பிரகாசத்தில் (பொது - 2 - 30) "எதிர்வினையு முடிவினை யுதவுபயனா னேராக" என ஏனை வினைகள்போல ஆகாமிய வினையும் முடிவினையம் (பிராரத்தம்) ஒத்தல்வேண்டுமென் றோதுதலின் அஃதொத்தல் பிறிதோராற்றாற் பெறப்படாமையானும், மலபரிபாகக் குறி, சத்திநிபாதக்குறி, சிவபுண்ணியக் குறிகளெல்லாம் ஆன்மவறிவின்கண் விளங்கு மாறுபோல இருவினையொப்புக் குறியும் துன்னறிவன்கண் விளங்குமாறில்லையாயின் அது முத்திக்கேதுவதால் கூடாமையானும், ஒன்றில் விருப்பும் ஒன்றில் வெறுப்பு மாதலின்றிப் புண்ணியபாவ மிரண்டினும் அவற்றின் பயன்களினும் ஒப்ப உவர்ப்பு நிகழ்ந்துவிடுவோன தறிவின்கண் அவ்விருவினையும் அவ்வாறொப்ப நிகழ்தலே ஈண்டு இருவினையொப்பபென்றதற்குப நுண்ணுணர்வாற் கண்டு கொள்க.** " | | "இனி, இருவினைகள் (1) பசு நல்வினை-தீவினை என்றுஞ்(2) சிவ நல்வினை-தீவினை என்றும் இருவேறு வகைப்படும். எனவே இருவினையொப்பும் அவ்வாறு "பசு நல்வினை தீவினைகள் தம்மு ளொத்தலாகிய இருவீனையொப்பென்றும், (2) சிவ நல்வினை தீவினைகள் தம்முளொத்தலாகிய இருவினையொப்பென்றும் இருவேறு வகைப்படு மென்பதூஉம் பெற்றாம். சிவநல்வினை தீவினைகள் தம்முளொத்தலாவது சிவ நல்வினையும் தீவினை வோலத் தமது முதலுபகாரத்தை மறந்து பிறவிக்கேதுவாய்ப் பசுபோதம் முனைத்துச செய்யப்படுவதொன்றெனத் தௌளி உவர்த்துவிடுவோனது அறிவின்கண் அவ்வாற்றானொப்ப நிகழ்வது, இவ்விருவகை யிருவினையொப்புள், முன்னையது பக்குவத்தா னிகழும் பசுபுண்ணியத்தினும் நிகழ்வனவாயுளவென மேற்கூறப்பட்ட அபுத்திபூர்வம் புத்திபூர்வமென்னும் பொதுச்சிவபுண்ணியத்தான் உண்டாவதாய், மலபரிபாகத்தைத் தோற்றுவிக்குமுகத்தானே மந்ததரமெனப்படும் முதற்சத்திநிபாதத்திற் நிகழும். பின்னையது, பலதிறப்படுவனவாகிய சத்திநிபாதத்தான் அவ்வாறே நால்வகைப்பட்ட முறையான் நிகழ்ந்து முடிவின்கண் ஞானத்திற் கேதுவாமென்றுணர்க. | | "இனி, (1) ஞானத்திற்குக் காரணஞ் சரியை முதலியனவென்பதூஉம், (2) சரியை முதலியவற்றுக்குக் காணம் மந்ததர முதலிய சத்திநிபாதமென்பதூஉம், யாண்டும் விளங்கிக் கிடந்தன. இவையெல்லாவற்றிற்கும் (3) மூலகாரணமெனப்பட்ட பக்குவமாவது தமக்குரிய சோபானமுறையானன்றி யறியமாட்டாததோ ரியல்புடைய ஆன்மாக்களுக்கு அம்முறையான் நிகழும் அறியவல்லுதலேயா மென்பது மேல் ஆண்டாண்டுக் கூறியவாறுபற்றி உணர்ந்துகொள்க. (4) அவ்வல்லுதற்குக் காரணங் கேவலக்கிடையினும் நீங்காது உடனாய் நின்று நோக்கிவரும் முதல்வனது கருணைநோக்கத்தின் அடிப்பாடென அறிக" (மாபாடியம் - 8-1-பக்.431 -434). | | 819 | | வே று | 2718 | உலகியல் வேதநூ லொழுக்க மென்பதும் நிலவுமெய்ந் நெறிசிவ நெறிய தென்பதும் கலதிவா யமணர்காண் கிலார்க ளாயினும் பலர்புகழ் தென்னவ னறியும் பான்மையால், | | | 820 |
|
|
|
|