2719 | அலரும் விரைசூழ் பொழிற்காழியு ளாதி ஞானம் மலருந் திருவாக்குடை வள்ளலா ருள்ள வண்ணம் பலரு முணர்ந்துய்யப் பகர்ந்து வரைந்தி யாற்றில் நிலவுந் திருவேடு திருக்கையா னீட்டி யிட்டார். | |
| 821 |
| 2718. (இ-ள்) உலகியல்....என்பதும் - உலகாசாரமாகிய நடை வேதநூலின் விதித்த ஒழுக்கமே என்பதனையும்; நிலவும்....நெறியாது என்பதும் - அழியாது நிலவுகின்ற வீடுபேறடையும் உண்மைநெறி சிவநெறியேயாகு மென்பதனையும்; கலதி...ஆயினும் - கேடு பெறும் வாய்ப்பினை யுடையராகிய சமணர்கள் அறிய மாட்டார்களாயினும்; பலர்புகழ்...பானமையால் - பலராலும் புகழப்படும் பாண்டியன் அறியும் பான்மையினாலே, |
| 820 |
| 2719. (இ-ள்) அலரும்...வள்ளலார் - பூக்கள் மலர்தலால் உளதாகும் மணம் சூழ்ந்த சோலைகளையுடைய சீகாழியீல் அவதரித்த சிவஞானம் மலரும் திருவாக்கினையுடைய வள்ளலாராகிய பிள்ளையார்; உள்ளவண்ணம்....உய்ய - உண்மைப் பொருள் நிலையினைப் பலரும் அறிந்து உய்யும்படி; பகர்ந்து வரைந்து - அருளிச்செய்து எழுதுவித்து; நிலவுந் திருவேடு - என்றும் அழியாத மெய்ப்பொருளினை உடைய அத்திருவேட்டினை; யாற்றில் - வைகையாற்றிலே; திருக்கையால் நீட்டி இட்டார் - தமது திருக்கரத்தினிலே நீட்டி இட்டருளினர். |
| 821 |
| இந்த இரண்டு பாட்டுக்களும் தொடர்ந்து ஒருமுடிபு கொண்டன. |
| 2718. (வி-ரை) உலகியல் வேதநூல் ஒழுக்கம் - வேதநெறி. |
| மெய்ந்நெறி சிவநெறியே - சைவநெறி; சிவாகநெறி. "வேதநெறி தழைத்தோங்க மிகுசைவத்துறைவிளங்க" (1899); "சைவமுதல் வைதிகமுந் தழைத்தோங்க" (1920) என்று இப்புராணத்தொடக்கத்திலும் பிள்ளையார் திருவவதாரத்தினும் குறிப்பித்த இருபெரும்பொருள்களும் விளக்கமுற்று உலகுய்யவரும் இடம் இஃதே ஆதலின் ஈண்டு இத்திருபபாசுரக் கருத்தாக இவற்றை எடுத்துக்காட்டியருளியது ஆசிரியரது தெய்விகக் கவிநலம். இறைவர் வேதங்களை உலகர்க்காக உணர்த்தியருளினார் எனவும், ஆகமங்களைச் சத்திநிபாதமுடைய பக்குவான்மாக்களுக்காக உணர்த்தி யருளினார் எனவும் காண்பர். |
| கலதிவாய் அமணர் காண்கிலார்கள் - அமணர்கள் வைதிகநெறி ஒழுக்கின் வாராதவர் ; அதனால் அதனின் மேம்பட்ட சைவநெறியினும் வாரார்; ஆதலின் அவற்றின் உண்மைத் திறத்தை உணராத புறச்சமயிகளாவர்; ஆதலின் இந்த இருநெறியினையும் உணர்த்த அருளப்பட்ட இத்திருப்பதிகம் அமணர்களுக்கு அறிவுறுத்துதற்கன்றி, ஈதல்வனையறியும் தன்மை துன்னிய பக்குவமுடைய தென்னவனை அறிவுறுத்தித் தேற்றுதற்கெழுந்த ஞானோ பதேசமாம் என்பது ; "மன்ற பாண்டியன் கேட்கக் கிளக்கும் மெய்ஞ்ஞானம்" (இருபா -2) என்பது ஞானசாத்திரம்; "தென்னவ னறியும் பான்மையால்" என்பதும் காண்க. |
| அமணர் காண்கிலார்க ளாயினும் - தென்னவன் அறியும் பான்மையால் - வைகைக் கரையில் நின்று இத்திருப்பதிகம் அருளப்பட்டது; நீரில் உடன் ஓடாது நிற்கவல்லது மெய்ப்பொருள் என்று வாதத்தின்முற்பட்ட அமணர்முன்பு அரசனுக்கு மெய்ப்பொரு ளிதுவென்று காட்டி அறிவுறுத்துதற் கெழுந்தது; அமணர்களும் முன்னின்றனர்; அருளிப்பாட்டினையும் கேட்டனர். ஆனால் பக்குவமின்மையின் அவர்கள் |