குண்டையூர் கிழவர்தாமு மெதிர் காண்டு கோதில் வாய்மைத் தொண்டனார்பாதந் தன்னிற் றொழுதுவீழ்ந் தெழுந்து நின்று "பண்டெலா மடியேன் செய்த பணியெனக் கின்று முட்ட அண்டர்தம் பிரானார்தாமே நென்மலை யளித்தா" ரென்று, | 17 | (வி-ரை.) குண்டையூர் கிழவர்....நின்று - குண்டையூர் கிழவரும் எதிர்கொண்டு வந்து குற்றமற்ற வாய்மையுடைய தொண்டனாராகிய நம்பியாரூரருடைய திருவடியில் தொழுது நிலமுறவிழுந்து எழுந்து நின்று; பண்டெலாம்.......என்று - முன் காலமெல்லாம் அடியேன் தேவரீருக்குச் செய்து வந்த பணிவிடை எனக்கு இன்று முட்டுப்பாடுற்றபோது தேவர் பெருமானாராகிய சிவபெருமானார் தாமே நெல் மலையினை அளித்தருளினார் என்று சொல்லி; (வி-ரை) எதிர்கொண்டு - நம்பியாரூரரை எதிர்கொண்டு வந்து. கோதில் வாய்மை - கோதில் - என்றது தன்மை விளக்கி நின்றது. பண்டெல்லாம்....பணி - முன்னாளிலெல்லாம் அடியேன் உமக்கு அமுதுபடி சமைத்து வந்த பணி. அண்டர் தம்பிரானார் தாமே நான் வேண்டிக்கொள்ளாமலே அவர்தாமே தமது கருணைப் பெருக்கினாலே. என்று - என்ன - என வரும் பாட்டுடன் முடிக்க. அளித்தார் - கருணையினால் அருளினார்என்ற குறிப்பு. |
|
|