நீக்கரிய நெற்குன்று தனைநோக்கி நெறிபலவும் போக்கரிதா யிடக்கண்டு மீண்டுந்தம் மில்புகுவார் "பாக்கியத்தின் றிருவடிவாம் பரவையார்க் கிந்நெல்லும் போக்குமிட மரிதாகு"மெனப்பலவும் புகல்கின்றார்; | 27 | (இ-ள்) நீக்கரிய...நோக்கி - விலக்குதற்கு அரிதாகிய நெற்குன்றினை நோக்கி; நெறிபலவும்...புகுவார் - வழிகள் பலவும் போதற்கு அரியன வாயிடலான் அதனைக் கண்டு மீளவும் தமது வீடுகளிற் புகுவார்களாய்; பாக்கியத்தின்....புகல்கின்றார் - "பாக்கியத்தின் திருவுருவேயாகிய பரவையாருக்கும் இந்த நெல்லினைக் கொண்டு சேர்க்கும் இடம் அரிதாகும்" என்று இவ்வாறு பலவும் சொல்வார்களாக; (வி-ரை) நீக்கரிய - வழிகாணும்படி விலக்குதற்கரிதாகிய; நெறி பலவும் போக்கரிதாயிட - வீதிகள் பலவும் செல்லுதற்கருமையாக வழி அடைபட. மீண்டும் தம் இல்புருவார் - மனையினின்றும் வீதி வழி வெளிச்செல்ல முற்படுவார் அஃதியலாமை கண்டு மீளவும் தமது மனையினுட் புகுவாராகி. பாக்கியம் - சிவபுண்ணியம். பரவையார்க்கும் - எனச் சிறப்பும்மை தொக்கது. இந்நெல்லும் - உம்மை - முன் தமது மாளிகையளவிற் சேர்த்ததனோடு இதனையும் என இறந்தது தழுலிய எச்சவும்மை; பலவும் - இவ்வாறு தத்தம் மனத்தெழுந்த கருத்துக்கள் பலவற்றையும். புகல்கின்றார் - சொல்கின்றார்களாக; ஆரூர் வாழ்வார்கள் புகல்கின்றாராகப் - பரவையார் முரசறைவித்தார் என முடிக்க. |
|
|