வேறு வேறு திருப்பள்ளித் தாமப் பணிகண் மிகவெடுத்து மாறி லாத மணித்திருவா பரண வருக்கம் பலதாங்கி ஈறில் விதத்துப் பரிவட்ட மூழி னிரைத்தே யெதிரிறைஞ்சி ஆறு புனைந்தா ரடித்தொண்ட ரளவில் பூசை கொளவளித்தார். | 36 | (இ-ள்)வேறு...எடுத்து - வெவ்வேறு வகையாகிய திருப்பள்ளித் தாமத்துக்குரிய அலங்கார மாலை வகைகளை மிகவும் எடுத்தும்; மாறிலாத...தாங்கி - ஒப்பற்ற மணிகளாலாகிய திருவாபரண வகைகள் பலவற்றையும் தாங்கி எடுத்தும்; ஈறில்...நிரைத்தே - எல்லையில்லாத பலவிதங்களிலும் பரிவட்டங்களை முறைப்படி வரிசையாக வைத்தே; எதிரிரைஞ்சி - எதிரிலே நின்று வணங்கி; ஆறு...அளித்தார் - கங்கையை முடித்த சிவபெருமானது திருவடித் தொண்டர் அளவில்லாத பூசை முறைகளையும் ஏற்றுக்கொள்ளும்படி செய்தனர். (வி-ரை) வேறு...பணிகள் - திருப்பள்ளித்தாமப் பணிகள் - மாலை - கண்ணி - இண்டை முதலாகிய மலர் மாலை அணிவகைகள். மாறிலாத மணித் திருவாபரண வருக்கம் பல - இவை பொன் - மணி - இவற்றாலாகியவை. வருக்கம் - வகையினையும், பல - தொகையினையுங் குறித்தன; மாறு - ஒப்பு. "மாறன்மையின்....இளையாரையு மெறியான்" (சீவகசிந். 2261); மாறில் - ஒளி மாறுதல் இல்லாத என்றலுமாம். பரிவட்டம் துகில் - உத்தரியம் முதலாயின. இறைவருக்கும் அடியார்க்கும் சாத்துவன பரிவட்டமெனப்படுதல் மரபு; ஊழின் - முறைப்படி; நிரைத்தல் - வரிசைபெற அமைத்தல். அடித்தொண்டர் - நம்பியாரூரர்; தொண்டர் பூசைகொள - என்க. கொள்ளுதல் - ஏற்றுக்கொள்ளுதல். |
|
|