பாடல் எண் :3451

திருப்பதிகங் கொடுபரவிப் பணிந்துதிரு வருளாற்போய்
விருப்பினொடுந் திருத்துருத்தி தனைமேவி விமலர்கழல்
அருத்தியினாற் புக்கிறைஞ்சி "யடியென்மே லுற்றபிணி
வருத்தமெனை யொழித்தருள வேண்டு"
மென வணங்குவார்,
297

(இ-ள்) திருப்பதிகம்...போய் - திருப்பதிகம் பாடியருளித் துதித்து வணங்கித் திருவருள் விடை பெற்று மேற்சென்று; விருப்பினொடும்...இறைஞ்சி - விருப்பத்துடனே திருத்துருத்திப் பதியினை அடைந்து இறைவரது திருவடிகளை ஆசையுடன் திருக்கோயிலினுள்ளே புகுந்து வணங்கி; அடியேன் மேல்...வணங்குவார் - அடியேன் உடம்பின் மேல் வந்த நோயின் துன்பத்தினை என்பால் நில்லாது தீர்த்தருள வேண்டும் என்று வணங்குவாராகி,
(வி-ரை) அருத்தி - ஆர்வம் - ஆசை; புக்குக் கழல் இறைஞ்சி என்க.
"அடியேன்...வேண்டும்" என - இது நம்பிகள் செய்த விண்ணப்பம்; உற்ற பிணி - புதிதின் வந் பொருந்திய; "புதியபிணி" (3453); "உற்றநோய்" பதிகம் (5).
வணங்குவார் - வணங்குவாராகி - முற்றெச்சம். வணங்குவார் - பணிந்தவர்க்கு என மேற்பாட்டுடன் கூட்டி முடிக்க.