பூத முதல்வர் புற்றிடங்கொண் டிருந்த புனிதர் வன்றொண்டர் காதல் புரிவே தனைக்கிரங்கிக் கருணைத் திருநோக் களித்தருளிச் சீத மலர்க்கண் கொடுத்தருளச் செவ்வே விழித்து முகமலர்ந்து பாத மலர்கள் மேற்பணிந்து வீழ்ந்தா ருள்ளம் பரவசமாய். | 310 | (இ-ள்) பூத...புனிதர் - பூதபதியாகிய புற்றிடங் கொண்ட பெருமானார்; வன்றொண்டர்....இரங்கி - வன்றொண்டராகிய நம்பிகள் காதலால் இடையறாது வேண்டிய வேதனைக்கு இரங்கியருளி; கருணை...கொடுத்தருள - தமது அருட்டிரு நோக்கம் செய்து குளிர்ந்த மலர் போன்ற கண் பார்வையினைக் கொடுத்தருளினாராக; செவ்வே...பரவசமாய் - செவ்வையாகப் பார்வையோடு கூடிய விழியினை---------------------------------------------------------------1. குறிப்பு : - இத்திருப்பதிக உண்மை அனுபவத்தில் வரக்கூடிய சிறப்புடையது. இதனைப் பயின்று கண் பெற்றவர்களை நான் அறிவேன்.விழித்து முகமலர்ச்சி யடைந்து உள்ளம் தம் வசமிழந்து பரவசப்பட்டு இறைவரது திருவடி மலர்களின் மேல் பணிந்து வீழ்ந்தனர். (வி-ரை) பூத முதல்வர் - சிவபூத கணங்களுக்கு நாயகர்; உயிர்களுக்கெல்லாம் ஒரு தனி நாதராகிய பசுபதி என்றலுமாம். காதல்புரி வேதனை - காதல் காரணமாக வரும் துன்பம். வேதனைக்கு - வேதனையை நீக்க. கருணைத் திருநோக்களித்தருளி - "அங்கணர் கருணை கூர்ந்த அருட்டிரு நோக்க மெய்த"(753); முன்னர் நம்பிகளைக் கண்ணிழப் பித்ததும் இறைவரது கருணையேயாம்; ஆனால் அது மறக்கருணை; இப்போது செய்தது அறக்கருணை நோக்கம். கண் கொடுத்தருள் - கண்பார்வை கொடுக்க. செவ்வே விழித்தலாவது குருடர் பார்க்கும் பார்வை போலன்றிப் பொருள்களை நேரே மலர்ந்து பார்க்கும் செவ்விய பார்வை. |
|
|