பாடல் எண் :3487

அருகு பெரிய தேவருட னணைந்து வருமவ் விருடிகளும்
மருவு நண்பு நிதிக்கோனு முதலா யுள்ளோர் மகிழ்ந்தேத்த
தெருவும் விசும்பு நிறைந்துவிரைச் செழும்பூ மாரி பொழிந்தலையப்
பொருவி லன்பர் விடுந்தூதர் புனித வீதி யினிற்போத,
333

(இ-ள்) அருகு....ஏத்த - பக்கத்தில் நந்திபெருமானுடனே அணைந்து வரும் அந்த இருடிகளும் பொருந்திய நண்புடைய குபேரனும் முதலாக உள்ளவர்கள் மகிழ்ந்து துதிக்கவும்; தெருவும்...பொழிந்தலைய - திருவீதியும் வானமும் நிறைந்து மணமுடைய செழிய பூமழை பொழிந்து பரவ; பொருலில்...போது - ஒப்பற்ற அன்பராம் நம்பிகள் விட்ட தூதராகிய இறைவர் தூய திருவீதியிற் போத,
(வி-ரை) பெரியதேவர் - திருநந்தி பெருமான்; "பெரிய...தேவரைச் சென்று கொணர்கென" (வெள் - சருக். 44); சிவகணங்களுக் கெல்லாந் தலைவராதலானும், கோயில் நாயகராதலானும் இப்பெயர் பெற்றார்.
நண்பு நிதிக்கோன் - குபேரன்; சிவபெருமானுக்குத் தோழர் எனப்படுவர். "மிததிரவச சிரவணற்கு விருப்பன் கண்டாய்" (தாண); "தனதனற் றோழா" (திருவிசைப்பா); "தனதனிற் சார்ந்தநற் றோழன்" (பேரூர்ப்புரா - பள் - பட - 37).
பூமாரி அலைய - பூமழை பரவ; பொழிந்து; பொழியப்பட்டு.