பாடல் எண் :3641

"எந்நிலையி னின்றாலு மெக்கோலங் கொண்டாலும்
மன்னியசீர்ச் சங்கரன்றாண் மறவாமை பொரு" ளென்றே
துன்னியவே டந்தன்னைத் துறவாதே தூயசிவந்
தன்னைமிகு மன்பினான் மறவாமை தலைநிற்பார்,
6
(இ-ள்) "எந்நிலையில்....பொருள்" என்றே - எந்த நிலைமையில் ஒருவன் நின்றானாயினும், என்னை வேடத்தைக் கொண்டானாயினும், நிலைபெற்ற சிறப்பினையுடைய சங்கரனுடைய திருவடியை மறவாதிருத்தலே உண்மையாகிய உறுதிப் பொருள் என்றே துணிந்து; துன்னிய......துறவாதே - தாம் மேற்கொண்டு தாங்கிய அந்தச் சாக்கிய வேடத்தினை நீக்காமலே; தூய.....தலைநிற்பார் - தூய்மை செய்யும் சிவலிங்கக் குறியினை மிக்கஅன்பினாலே மறவாத நிலையினில் சிறந்து விளங்குவாராய்