பாடல் எண் :3723

"பொருவில் பெருமைப் புத்திரன்மெய்த் தன்மை யளித்தா" னெனப்
மருவு மகிழ்ச்சியெய்த, "வவர் மனைவி யாருங் கணவனார்
அருமை யுயிரை யெனக்களித்தா" னென்று மிகவு மகமலர பொலிந்து
இருவர் மனமும் பேருவகை யெய்தி யரிய வினைசெய்தார்.
64
(இ-ள்) அவர் - அத்தந்தையார்; பொருவில்.......மகிழ்ச்சி யெய்த - ஒப்பற்ற பெருமைப் புத்திரன் மெய்யாந் தன்மையினை எனக்கு அளித்தான் என்று விளங்கிப் பொருந்திய மகிழ்ச்சியினை அடைய; மனைவியாரும்.......அகமலர- அவரது மனைவியாராகிய அம்மையாரும் கணவனாரது அரிய உயிரை எனக்கு இப்புதல்வன் அளித்தான் என்று மிகவும் மனம் மலர்ந்து மகிழ; இருவர்......எய்தி - இவ்வாறு இருவருடைய மனங்களும் பெருமகிழ்ச்சி பொருந்தி; அரியவினை செய்தார் - அரிய செய்கையினைச் செய்தனர்.
(வி-ரை) அவர் - நாயனார்; அவர் - மகிழ்ச்சி - எய்த என்று கூட்டுக. அவர் மனைவியாரும் - என்று கூட்டி அவருடைய என்றலுமாம். இப்பொருளில் நாயனார் என்பது வருவித்து முடிக்க.
பொருவில்......அளித்தான் - இது நாயனார் கருதி உண் மகிழ்ந்தது; மெய்த்தன்மை - மண்ணினிற் பிறந்தார் பெறும் உறுதியாகிய உண்மைநிலை. அடியார்க் கமுதூட்டும் விரதந் தவறாத தன்மை. மெய் - மெய்மையைத் தரும்; இது சிவத் தன்மையாகிய செம்மை; அளித்தான் - உரிய சாதனமா யமைந்து பெறுவித்தான்.
கணவனார்.......எனக் களித்தான் - அடியாரை ஊட்டும் நியமமும் தமது வாக்கும் தவறின் கணவனா ருயிர் வாழாராதலின் அவ்வாறு நிகழாமற் காத்து அவரது உயிரைத் தமக்கு இப்புதல்வன் அளித்தான் என்று அம்மையார் மகிழ்ந்தனர். அரிவாட்டாயர் - கலியர் முதலிய நாயன்மார்களது சரித நிகழ்ச்சிகள் காண்க.
அரிய வினை - பிறர் எவராலும் செய்தற்கரிய செயல். இத்தகைய வல்வினைகளை வெளிப்படக் கூறாமல் இவ்வாறு கூறுதல் ஆசிரியரதுமரபு; இதுபற்றி "வரங்
__________________
பெற்றனர். இதுபோழ்து செய்யாது நின்றிருப்பின் வாளா பிறந்திறந்துழலும் ஏனை மாந்தரின் வேறல்லாராவார் என்பதும் காண்க. இயற்பகையார் முதலாகிய எல்லா நாயன்மார்களது வரலாறுகளையும் இவ்வாறே சிந்திக்க. (4) மனித உடலைத் துன்பத்துட் படுத்துவதும் உயிர் பிரித்தலும் எஞ்ஞான்றும் சீவ இம்சையும் கொலையுமேயாம் என்ற போலிச் சமண பௌத்த கொள்கையினை மேற்கொண்டு அதனை அடிப்படையாகக் கொண்டு எழுந்தது இவ்வாராய்ச்சி; இவ்வுலகில் பலரும் இம்மயக்க வுணர்வே கொள்கின்றார்கள். மக்கட் கூட்டத் தலைவர்களாய் அறிவாளிகள் எனப்படுவோரும் இவ்வாறே மயங்குகின்றனர். இதன் உண்மைநிலை முன்னர்ப் பலவிடத்தும் எடுத்துக்காட்டப்பட்டது; ஈண்டும் சிறிது விளக்குவாம்; உடலில் நோய் கண்டபோது அவ்வவ் வுறுப்புக்களைக் கருவி கொண்டு மருத்துவன் அறுத்தும் சிதைத்தும் வேறு கூறுபடுத்தித் துண்டித்தும் வினை செய்கின்றான்; மக்களையும் மனைவியரையும் தம்மையும் இவ்வாறு துண்டிக்க மருத்துவனுக்கு மகிழ்ந்து பெருநிதியும் தருகின்றார்கள். மகப்பேற்றுக் காலத்தில் இயல்பிற் பெற இயலாதபோது மகவைச் சிதைத்துத் துண்டித்துத் தாயரைக்காக்க முற்பட்டு மகிழ்வதையும் காண்கின்றோம். "எந்நாளிலோ ஒருநாள் இறந்தே படும் உடலினைப் பின்னும் சிலநாள் உலகில் வைத்திருக்கவே இவை உலகியலில் மனம் ஒப்பிச் செய்யப்படுவன ஆகில், என்றும் மீளா இன்பத்தினை உயிர் பெறுதற்கு இவ்வகை அரியவினை செய்தல் எவ்வளவும் பொருந்துவன வாகுமன்றோ? இவ்வுண்மைநிலை யறியாத போலிச் சீவகாருணியம் கைக்கொள்வதனால் எத்தனை உயிர்கள் வீணே இறந்து கழியக் காண மனம் வருந்தாமலிருக்க முடியுமா? (5) இனி, இறைவன்பாலும், அடியார் பாலும் செய்யத்தகும் பணிவிடைகளில் வருவன உத்தமச் சிவபுண்ணியமாயும் அவ்வுயிர்க்கும் அவற்றை இறக்கச் செய்த அவ்வுயிர்க்கும் வீடுபேறும் தருவனவாயும் கொலை என்ற பாதகப் பகுதியில் வராது அருட்செயல் என்ற சாதகப்பகுதியில் வருவனவாயும் உள்ளன என்பதும் அறிவோர் கொள்கை; "ஒருவழிநின்றேறுதுறை ஒளிநின்று கொன்றருளி" (791) என்று கண்ணப்ப நாயனார் சிவபூசைக்குத் திருவமுதாக்கப் பிராணிகளைக் கொன்றமை அருட் செயலாகக் கொன்றருளி எனப்பட்டமை காண்க. ஆண்டுரைத்தவையும் பார்க்க. தண்டியடிக ணாயனார் இறைவருக்குத் தீர்த்தக் குளங் கல்லக் கண்ட அமணர் பொறாது "மண்ணைக்கடருஞ் செய்ய வயிரவர்க்குத் தங்கள், கரங்களினா லன்றுகறி யாக்க - விரங்காதே, கொல்வினையே செய்யுங் கொடுவினையே யானவற்றை, வல்வினையே யென்றதுநாமற்று" (18) என்றும், "வல்வினையே யென்ன வருமிரண்டுஞ் சொல்லிற் சிவதன்மமாம் (16) என்றும் (களிறு) வரும் ஞானசாத்திரமும் காண்க.
இருவர் மனமும் பேருவகை எய்தி - "தம்மில் மனமுவந்தே" (3710) என்ற நிலையைக் கூடியதன்மை.
மனைவியார் - கணவனார் - புதல்வர் - என்ற உடற் சுற்றத் தொடர்பு பற்றிக் கூறினார், "மகனைத் தாதை யரியத் தாய்பிடிக்கும் பொழுது" (3710) என்றது இறைவர் கட்டளையாதலின் அந்நிலையினை மனத்துட் கொண்டு வைத்தவாறே நிறைவேற்றிய குறிப்புத் தருதற்கு.
_______________________
கல்லிற் பிராணிபடும்; வருத்தவேண்டா" என்றபோது, "பூசு நீறு சாந்தமெனப் புனைந்த பிரானுக் கானபணி, யாசி லாநல் லறமாவ தறிய வருமோ வுமக்கு" (3598) என்றதும் அங்கு உரைத்தவையும் இங்கு நினைவு கூர்தற்பாலன. (6) இனி, ஒரு பொருளால் வரும் நன்மை தீமை அப்பொருள் கொண்டு செய்யப்படும் செயல்களின் நன்மை தீமையைப் பற்றியே விளைகின்றன என்றதும் மறுக்கலாகாத உண்மை; (7) "முன்னாடிக், கண்டு கடன் கழிததல் காரியமா மென்றெண்ணிக், கொண்டுவரு நோயின் குறிப்பறிவர் - மண்டெரியிற், காய்ச்சி்ச் சுடவறுக்கக் கண்ணுரிக்க நன்னிதியம் ஈத்துத்தாய் தந்தைதம ரின்புறுதல் - வாய்த்தநெறி, ஓடியதே ரின்கீ ழுயி்ர்போன கன்றாலே, நீடுபெரும் பாவமின்றே நீங்குமென - நாடித்தன், மைந்தனையு மூர்ந்தோன் வழக்கே வழக்காக, நஞ்சனைய சிந்தை நமன்றூதர், வெஞ்சினத்தால், அல்ல லுறுத்து மருநரகங் கண்டுநிற்க, வல்ல கருணை மறம் போற்றி" (48-54 போற்றிப் பஃறொடை) என்ற ஞான நூற்கருத்துக்களும் ஈண்டுக் கருதத் தக்கன. (8) ஈண்டு, நாயனாரும் மனைவியாரும், உலகப் பொருள்களும் உடலுயிர்களும் இறைவன துடைமை; இவற்றை நம்ம தென் றெண்ணுவது மருள்; இவை அரனுக்கும் அடியார்க்குமே உடைமையா மென்ற உண்மை கண்டு அவர்க்கு ஆக்குதல் ஞானமுடிபு; அதுவே உயிர்க்குறுதி செய்வன என்ற பேரறி வொளி விளங்கப் பெற்று அவ்வழி ஒழுகியவர்கள். (9) எந்தமது பெருமக்களாகிய உண்மை நாயன்மார்களெல்லாரும் அவ்வாறே வாழ்ந்த சீவன் முத்தர்கள். அவர்களது அருட் செயல்களை உலகியற் கண்ணாகிய அளவுகோல் கொண்டு அன்புப் பித்தென்றும் அன்புக் குடிவெறி யென்றும் களிப்பு என்றும் கூறுதல் கூறுவோரது பிழைப்பட்ட மருளினைப் புலப்படுத்துவதேயா மன்றி உண்மைத்தத்துவ நெறியினைப் புலப்படுத்தாது. "பித்த னென்றெனை யுலகவர் பகர்வதோர் காரண மிதுகேளீர்" (திருவா) என்றும், "பித்துப் பத்தரினத்தாய்" (போதம்-12) என்றும். "பாலருட னுன்மத்தர் பசாசர்குண மருவிப், பாடலுட னாடலிவை பயின்றிடினும் பயில்வர்" (சித்தி-8-32) என்றும் வருவனவும் அவைபோல்வனவும் கூறும் பித்தர் நிலை என்னும் நிலை வேறு; அவையெல்லாம் அவ்வப் பண்புகளை விளக்க எழுந்தனவும் உலகர் அவரைப் பற்றிக் கொள்ளும் நிலைகளை மறுத்து உண்மை உணரக் கொளுத்த எழுந்தனவுமாம். ஈண்டு நாயனார் மனைவியார் செய்கைகள் இத் தன்மை யுட்பாடாத வேறு நிலையினவாதல் கண்டுகொள்ளத் தக்கது. நாயன்மார்களது அருள் ஞானச் செயல்களை வெறி என்று கொண்டொதுக்கினால் அவை உலகுக்கு ஞானசாதன இலக்கியங்களாய் விளங்குதல் யாங்ஙன மென்க. இவைபோல இன்னும் பலவும் கண்டுகொள்க.