94திருத்தொண்டர் புராணம் [வம்பறா வரிவண்டுச் சருக்கம்]

திருவெஞ்சமாக்கூடல்
திருச்சிற்றம்பலம்

பண் - கொல்லிக்கௌவாணம்

எறிக்குங் கதிர்வே யுதிர்முத் தமொடு மிலவங்கத் தக்கோல மிஞ்சி
செறிக்கும் புனலுட் பெய்து கொண்டு மண்டித் திளைத்தெற்று சிற்றாறதன்கீழ்க்
கரைமேல்
முறிக்குந் தடமா முடப்புன்னை ஞாழல் குருக்கத் திகண்மேற் குயில் கூவலறா
வெறிக்குங் கலைமா வெஞ்சமாக் கூடல் விகிர்தா வடியேனையும்
வேண்டுதியே

(1)

வஞ்சிநுண் ணிடையார் மயிற்சா யனல்லார் வடிவேற் கணல்லார்
பலர்வந்திறைஞ்சும்
வெஞ்சமாக் கூடல் விகிர்தா வடியேனையும் வேண்டுதியே யென்றுதான் விரும்பி
வஞ்சியா தளிக்கு வயனா வலர்கோன் வனப்பகை யப்பன்வன் றொண்டன்
சொன்ன
செஞ்சொற் றமிழ்மாலைகள்பத்தும் வல்லார் சிவலோகத்திருப்பது திண்ணமன்றே.

திருச்சிற்றம்பலம்

பதிகக் குறிப்பு :- "வெஞ்சமாக்கூடல் விகிர்தர! அடியேனையும் வேண்டுதியே!" என்ற கருத்து; பதிகம் 10-வது பாட்டும், பதிகத்தின் மகுடமும் பார்க்க..
பதிகப் பாட்டுக் குறிப்பு :- (1) எறிக்கும் - காற்றினால் மிகவும் அசைக்கப்பட்டு மோதும்; வேயுதிர் கதிர்முத்தம் என்க; முத்துக்கள் பிறக்கு மிடங்களுள் மூங்கிலுமொன்று; முத்தம் - இலவங்கம் - தக்கோலம், இஞ்சி இவை மலைபடு பண்டங்கள். இங்குக் குறிஞ்சி நிலப்பகுதியாதலானும், சிற்றாறு கோடைக்கானல் மலைத் தொடரிற் சேர்ந்த பெருமாள்மலை, வராகமலைகளினின்றும் தோன்றிப் பெருகி வருதலாலும் குறிஞ்சிக் கருப்பொருளாகிய இம்மலைப் பண்டங்களை அலைத்து வருதல் கூறினார். மேல் வரும் பாட்டுக்களிலும் இவ்வாறே கண்டு கொள்க. "காடும் மலையும் நாடு மிடறிக் கதிர் மாமணி சந்தனமு மகிலுஞ், சேடனுறையும், மிடந்தான் விரும்பித் திளைத்தெற்று சிற்றாறு" (8) என்று இதனை நம்பிகள் நன்கு தெரித்தருளுதல் காண்க. வெறிக்கும் கலைமா - தம்மிச்சையாய் ஓடித் திரியும் கலைமான் கூட்டம்; வெஞ்சன் என்ற அசுர அரசனது நகரமாதலின் வெஞ்சமாக்கூடல் எனப் பெயர்பெற்றது. கூடல் - குழகனாறும் சிற்றாறும் கூடுகின்றமையால் போந்த பெயர். மேல் அணிமையில் இது அமராவதியினுடன் கூடிப் பெருகி ஓடுகின்றது; விகிர்தன் - இப்பதியின் சுவாமி பெயர். வேண்டுதியே - ஏகாரம் விரும்பி ஆட்கொள்வையோ? என்ற வினாக்குறிப்பு; வேண்டுதி என்ற விண்ணப்பமுமாம்; முடப்புன்னை - நேரே வளராது முடங்கிக்கொண்டு கோணல்களுடன் வளரும் இம்மரத்தியல் புணர்த்தியது. மேல், நெடுந்தாட்டெங்கு, குறுந்தாட்பலவு, நிரையார் கமுகு என்பனவாதியாக வருதல் காண்க. தமிழ் நயமும் காண்க; செறிக்கும் புனல் - துளங்கும் புனல் - திரையார் புனல் - முதலியன சிற்றாற்றின் நீர்செறிந்த தன்மைக்குறிப்பு;-(2) மணி, சந்தனம், அகில் - மலைபடு பண்டம்; மதில் மாளிகை, கோபுரம், மண்டபம் - இவை இந்நகர் முன்னாளிற் செழித்தோங்கிய அரசன் றலைநகராயிருந்த நிலை குறித்தன; கமுகு முதலியவை பொழிலாகச் செழித்த மருத நில வளங்கள்; சிற்றாறு பிறந்த இடம் மலைசார்ந்த குறிஞ்சிநில மென்பதும், அது பாய்ந்து வளஞ்செய்வது மருதநில மென்பதும் குறிப்பு;-(4) அகில் - சாமரை - முதலியவை குறிஞ்சிக் கரு. சாமரை - சாமரையாகப் பயன்படும் கவரிமான் வால்மயிர் குறித்தது; காரிய ஆகுபெயர்; நலசாமரை - ஆலயங்களினும் பெரியோரிடத்தும் உபசாரப் பொருள்களாய் நன்மைதாப் பயன்படுதல் குறிப்பு; அரங்கு - ஆடல் பயிலுமிடம்;-(5) துளை வெண்