[வம்பறா வரிவண்டுச் சருக்கம்] 29. ஏயர்கோன்கலிக்காம நாயனார் புராணமும் உரையும் | 95 |
| | | குழை - சங்கினைத் துளைத்து எடுத்து வடிவாக்கிய குழை; "சங்கக் குழையார் செவியா" (தேவா); சுருள் - ஓலைச் சுருளாலாகிய; சுருள் போன்றமைந்த; தூங்கும் - தொங்கும்; வடிந்த காது; களையே - கள்; தேன்; கள்ளையே என்பது எதுகை நோக்கிக் களையே என நின்றது; பிள்ளை என்பது பிளை என நின்றது. வெள்ளை என்பதும் இவ்வாறே;-(6) உழுவார்க்கரிய - உழவில் எவர்க்குமரிய;-(7) நரையேறு - வெள்ளை விடை; துத்தி - உச்சிக் கொண்டை; படத்தின் உச்சி; படம் ஆயிரம்...அரவு - இறைவர் பூணும் பாம்பின் இயல்பு குறித்த அடைமொழிகள்;-(8) காடு, மலை, நாடு - முல்லை - குறிஞ்சி, மருதம் என்ற திணைகளையும் குறித்தன; சேடனுறையும் இடம் - பாதாள உலகம்; விரும்பி - நோக்கி; கடலினை நேரே சென்று சேராமையால் விரும்பி என்றார்; வேடர் - திருவேடத்தார்; நிலம்பற்றி வேடர் குலங்குறித்த தென்றலுமாம்;-(9) கொங்கு - மணம்; நாடு குறித்ததென்றலுமாம்; கொடுகொட்டி - இயம்; வீணை - கையில் ஏந்திய நிலை; "மிக நல்ல வீணை தடவி" "நல்வீணை வாசிக்குமே" (தேவா); துங்கார் புனல் - பெரிய நீர்; பெருமையுடைய என்றலுமாம்; வெங்கார் - வெம்மை - விருப்பம்;-(10) இடையும் சாயலும் கண்ணும் - சிறந்த இயல்பு குறித்தன; நல்லார் - பெண்கள்; வஞ்சி - கொடி; "வெஞ்சமாக்கூடல்...வேண்டுதியே" என்றுதான் விரும்பி - நம்பிகள் பதிகக் கருத்தினை எடுத்துக் காட்டியவாறு; வஞ்சியாதளிக்கும் வயல் - என்றது செய்திக்குத் தக்கவாறு மறாது வளந்தரும்; "செய்பவர் செய்திப் பயன் விளைக்குஞ் செய்" (போதம்); வஞ்சியாதளிக்கும் நாவலர்கோன் - என்று கூட்டி யுரைப்பினுமமையும். | | தலவிசேடம் :- திருவெஞ்சமாக்கூடல் - இது கொங்கு நாட்டுப் பாடல் பெற்றதலங்கள் ஏழனுள் ஐந்தாவது பதி; வெஞ்சன் என்னும் அசுர அரசனது தலைநகரமாதலின் இப்பெயர் பெற்றது. கோட்டையின் அடையாளங்கள் காணப்படுவன; ஊர் மண்மேடிட்டுப்போய்க், கோயில் பள்ளத்தில் இருக்கின்றமை இதன் பழைமையைக் காட்டும் அடையாளங்களுள் ஒன்று; சுவாமிபெயர் பதிகப்பாட்டுத் தோறும் உள்ளது; குழகனாறு என்னும் சிற்றாறு கோயிலின் மேல்புறம் அணிமையில் ஓடுகின்றது; சுவாமி - விகிர்தேசுவரர்; அம்மை - விகிர்தேசுவி; தீர்த்தம் - குழகனாறு; பதிகம் 1. இது கருவூரினின்றும் தென்மேற்கில் அரவக்குரிச்கிக் கற்சாலைவழி 10 நாழிகையளவு சென்று பின் தெற்குநோக்கி மட்சாலைவழி 2 1/2 நாழிகையளவில் அடையத் தக்கது. சிற்றாறு என்னும் குழகனாற்றின் தென்கரையில் உள்ளது. | | திருப்பேரூர் - (வைப்புத்தலங்களுள் ஒன்று); இத்தலத்துக்கு நம்பிகள் எழுந்தருளிப் பதிகம் பாடின செய்தி புராணத்துட் கூறப்பட்டது; பதிகமிருந்து இறந்துபோயிருக்க வேண்டும்; நம்பிகள் ஊர்த்தொகையிற் "பேரு ருறைவாய் பட்டிப்பெருமான் பிறவா நெறியானே" என்று போற்றி யருளியுள்ளார்; நம்பிகளது கோயிற் பதிகத்தினுள் இத்தல இறைவர் தில்லையம்பலத்தில் நம்பிகளுக்கு ஆடல் காட்டக் கண்டு அருளிய சிறப்புப் போற்றப்பட்டது; சுவாமி பெயர் திருவான்பட்டி யுடையார் என்பது பழங்காலத்துக் கல்வெட்டுக்களிற் கண்டது. இப்பெயர் அரசுகளது காப்புத் திருத்தாண்டகத்தினுள்ளும் (10) "ஆன்பட்டியும்" என்று போற்றப்பெற்றுள்ளது. இப்பதி ஆதிபுரி, பிறவாநெறி முதலாகப் பற்பல காரணப் பெயர்களையுடையது. காஞ்சிநதி, பிரமதீ்ர்த்தம் முதலிய பல சிறந்த தீர்த்தங்களையுடையது; காஞ்சிநதி, தேவாரத்தில் அணிகாஞ்சி எனப்பெற்ற பெருமையுடையது; இதனுள் இடப்பட்ட எலும்புகள் கல்லாய் விளைவது இன்றும் காணலாம். பிரமதீர்த்தம் |
|
|
|
|