[வம்பறா வரிவண்டுச் சருக்கம்] 29. ஏயர்கோன்கலிக்காம நாயனார் புராணமும் உரையும்97

சொற்றமிழ் பாடுக" என்று, தடுத்தாட்கொண்ட ஞான்று ஆண்டவர் பணித்தருளியமையால் அத் திருத்தொண்டு விருப்பினால் என்றது குறிப்பு.
பதிகள் பலவும் - இவை, திருச்சிராப்பள்ளி, திருவெறும்பியூர், திருவேங்கூர், திருக்காட்டுப்பள்ளி, திருவாலம் பொழில், திருப்பூந்துருத்தி, திருக்கண்டியூர், திருவேதிகுடி, திருத்தண்டங்குறை, திருப்புள்ள மங்கை ஆலந்துறை, திருச்சக்கரப்பள்ளி; திருப்பாலைத்துறை, திருச்சேலூர், திருநல்லூர் முதலியன என்பது கருதப்படும்.
குறிப்பு :- திருச்சிராப்பள்ளியினின்றும் காவிரி, குடமுருட்டியாறு, இவற்றின் தென்கரை வழி அடுத்து ஒரு பாதை நீளச்செல்கின்றது; அது அரசங்குடியினின்றும் திருக்காட்டுப்பள்ளிவரை (10 நாழிகை) சிற்றடிப் பாதையாகவும், பின்பு பெரும் பாதையாகவும் உள்ளது; இது சுருங்கிய நேர்வழியாதலின் இவ்வழியே நம்பிகள் சென்றிருத்தல் கூடுமென்பது கருதி மேல் உரைக்கப்பட்டது.
தேடும் இருவர் - அடியும் முடியும் தேடும் மாலும் அயனும்.
அக்கற்குடி - என்பதும் பாடம்.

93

திருக்கற்குடி
திருச்சிற்றம்பலம்

பண் - நட்டராகம்

விடையா ருங்கொடியாய் வெறி யார்மலர்க் கொன்றையினாய்
படையார் வெண்மழுவா பர மாய பரம்பரனே
கடியார் பூம்பொழில்சூழ் திருக் கற்குடி மன்னி நின்ற
அடிகே ளெம்பெருமா னடி யேனையு மஞ்ச லென்னே.

(1)

அலையார் தண்பொழில்சூழ்ந் தழ காகி விழவமருங்
கலையார் மாதவர்சேர் திருக் கற்குடிக் கற்பகத்தை
இலையார் வாணுதலாள் நல்ல சிங்கடி யப்பனுரை
விலையார் மாலைவல்லார் வியன் மூவுல காள்பவரே.

(10)

திருச்சிற்றம்பலம்

பதிகக் குறிப்பு: - திருக்கற்குடி மன்னிநின்ற எம்பெருமானே! அடியேனையும் அஞ்சலென்னே; என்று நீடுவிருப்பிற் றிருப்பதிகம் நிறைந்த சிந்தையுடன் பரடியது.
பதிகப் பாட்டுக் குறிப்பு : - (1) பரம் - எப்பொருளுக்கும் அப்பாற்பட்டவர்; "அடியேனையும் அஞ்சலென்னே" பதிகத்தின் கருத்தும் மகுடமுமாம்; அடிகேள் - பெரியோரே;-(2) அறவா - "அற வாழி யந்தணன்" (குறள்);-(3) மலைமேல் மா மருந்தே - இங்கு மலையின்மேல் மன்னி நின்ற மருந்து போல்வார் என்றும், மலையில் உள்ள மருந்துப் பண்டங்கள் போலச் சிறந்தவர் என்றும் உரைக்க நின்றது;-(5) சந்து - பெருமை; புகழ்; கந்து - மணம்; ஏன்று கொள்ளுதல் - ஏற்றுக்கொள்ளுதல்; வீழ்ந்து படாமல் தாங்கிக்கொள்ளுதல்;-(7) தணியாத விருப்பம் விளைக்கும்;-(8) நிலனே...ஆகி - ஐம்பூதங்களையும் திருமேனியாகக் கொண்டு; இவை இறைவரது எட்டு மூர்த்தங்களுள் வருவன; புலனே - அறியப்படுபவன்; கனலே - அழற்றூணாய் நின்றவரே!;- (9) பெரும் பாலன் - மார்க்கண்டேயர்; விரும்பா - விருப்பம் விளைப்பவரே!
குறிப்பு :- 8-வது திருப்பாட்டில் லகரமும் னகரமும் எதுகையாக வந்தன.
தலவிசேடம் :- திருக்கற்குடி - III - பக். 517 பார்க்க.