|
| |
3248 | செம்பொன் மேருச் சிலைவளைத்த சிவனா ராறை மேற்றளியில், நம்பர் பாதம் பணிந்திறைஞ்சி நாளு மகிழ்வார்க் கருள்கூட உம்பர் போற்றுந் தானங்கள் பலவும் பணிந்து போந்தணைவார் இம்பர் வாழ வின்னம்பர் நகரைச் சேர வெய்தினார். |
|
| 94 |
| (இ-ள்.) செம்பொன்...மகிழ்வார்க்கு - செம்பொன் மேருமலையை வில்லாகவளைத்த சிவபெருமானாரது திருஆறை மேற்றளியிலே இறைவரது திருவடிகளைப் பணிந்து நாடோறும் மகிழ்ந்து எழுந்தருளிய நம்பிகளுக்கு; அருள்கூட - மேலும் பதிகள் சென்று வணங்கும்படி திருவருள் விடைகூடியதனாலே; உம்பர்...அணைவார் - தேவர்கள் வந்து வணங்கும் பதிகள் பலவற்றையும் வணங்கிச் சென்று போந்து அணைவாராகி நம்பிகள்; இம்பர்...எய்தினார் - இவ்வுலகிலுள்ளார் வாழும் பொருட்டுத் திருவின்னம்பரினைச் சேரச் சார்ந்தருளினர். |
| (வி-ரை.) மேருச் சிலை வளைத்த - மேருவைச் சிலையாக (வில்லாக) வளைத்த என்றும், மேருவாகிய சிலை (மலை)யினை வளைத்த என்றும் இரட்டுறமொழிய நின்றது. |
| மகிழ்வார்க்கு - அருள்கூட - மகிழ்வுற எழுந்தருளும் நம்பிகளுக்கு மேற் செல்லும்படி திருவருள் விடையும் குறிப்பும் கூடியதனாலே; கூட - காரணப் பொருளில் வந்த வினையெச்சம். |
| உம்பர் போற்றும் - சிவ வழிபாட்டுக்குரிய சாதனங்கள் விண்ணுலகிற் பெறாமையாலே இப்புவனியில் வந்து வழிபடும் என்க. "புவனியிற் போய்ப்பிறவாமையினாணாம் போக்குகின் றோமவ மேயிந்தப் பூமி, சிவனுய்யக் கொள்கின்றவாறு" (திருவா.) |
| தானங்கள் பலவும் - பல பதிகளையும். இவை திருச்சத்திமுற்றம், திருப்பட்டீச்சுரம், திருப்பழையாறை, திருப்பழையாறை வடதளி, திருவலஞ்சுழி முதலாயின என்பது கருதப்படும். இதுவரை கிழக்கு நோக்கிப் போந்தருளிய நம்பிகள் இங்குக் குடமுருட்டி, காவிரியாறுகளைக் கடந்து, வடக்கு நோக்கிச் சென்றணைகின்றார். இனிச்சாரும் திரு இன்னம்பரும், அதன்மேற் சென்றருளும் திருப்புறம்பயமும் வடக்கு நோக்கிய யாத்திரையினைக் குறிக்கின்றன; இது "அங்கமோதியோர் ஆறை மேற்றளி நின்றும் போந்துவந் தின்னம்பர்த்,தங்கி னோமையு மின்ன தென்றில ரீச னாரெழு நெஞ்சமே....புறம்பயந் தொழப்போதுமே" என்ற தேவாரத் திருவாக்கின் அகச்சான்றினால் விளங்கும் சரித ஆதரவு பெற்றது. |
| இம்பர் வாழ - மாதவஞ் செய்த தென்றிசை வாழ்ந்திடவே (35) நம்பிகள் திருவாணைக் குறிப்பின்படி வந்தவதரித்தா ராதலின் இம்பர் வாழ என்றார்; நம்பிகளின் அருளிப்பாடுகளினால் உலகம் பயன் பெற்று ஈடேறுதல் குறிப்பு. |
| வாழும் - என்பதும் பாடம். |
| 94 |
| திருவாறை மேற்றளி - இதன் பதிகம் கிடைத்திலது! |
| தலவிசேடம் :- திருவாறை மேற்றளி - அமர்நீதி நாயனார் புராணத் திறுதியில் - I - பக்கம் 688 பார்க்க. |
3249 | ஏரின் மருவு மின்னம்பர் மகிழ்ந்த வீசர் கழல் வணங்கி ஆரு மன்பிற் பணிந்தேத்தி யாரா வருளா லங்கமர்வார் போரின் மலியுங் கரியுரித்தார் மருவும் புறம்ப யம்போற்றச் சேரு முள்ள மிக்கெழமெய்ப் பதிகம் பாடிச் செல்கின்றார். | |
| 95 |